வெள்ளி விலை தரையை தட்டுது.. 53% சரிவு.. இனி நடக்கப் போவது எல்லாமே மேஜிக்.. 2 லட்சத்திற்கு கீழ் வருது?

Subscribe to Oneindia Tamil

இந்திய சந்தையில் வெள்ளியில் விலை உயர்வை பார்க்கும் போது, தங்கம் மிகவும் சிறியதாக தெரிந்த காலம் மாறி, தற்போது டமாள் டமாளென சரிந்து கீழே விழுந்துள்ளது. கடைசியாக நீங்கள் பார்த்த வெள்ளியின் உச்ச விலை என்ன..? யோசித்துக்கொண்டே தொடர்ந்து படிங்க.

உயரும்போது எப்படி தங்கத்தை காட்டிலும் வேகமாக உயர்ந்ததோ, அதேபோல் இறங்கும் போதும் வெள்ளியின் விலை கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை இந்த வாரம் மட்டும்.. எப்படி இந்த வாரம் 14 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது இதோடு வியாழக்கிழமை வர்த்தகத்தில் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவான விலையை பதிவு செய்துள்ளது. இந்த வீழ்ச்சி, முதலீட்டாளர்களிடையே புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Silver chennai Gold Silver price crash 2026 MCX silver price fall Silver price correction reasons Why silver prices are falling Silver seven month low Silver vs gold price drop MCX silver below 2 lakh Silver jewellery demand India Comex silver price outlook Silver bear market 2026 2026 MCX 7 vs MCX 2 Comex outlook 2026

வெள்ளி விலை எவ்வளவு சரிந்துள்ளது?

சர்வதேச சந்தையில் ஸ்பாட் வெள்ளியின் விலை 56.99 டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. காமெக்ஸ் சந்தையில் வெள்ளியின் ஃபியூச்சர்ஸ் 57.11 டாலர் அளவுக்கு சரிந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 9.1% வரை குறைந்து 56.41 டாலர் அளவுக்கு இறங்கியது, இது 2025 நவம்பர் மாதத்திற்குப் பிறகு இல்லாத அளவுக்கு குறைந்த நிலையாகும்.

ஜனவரி 2026-இல் பதிவான வரலாற்று உச்சமான 121.78 டாலரில் இருந்து வெள்ளியின் விலை தற்போது 53 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது.

இந்திய கமாடிட்டி சந்தையான MCX-இல் வெள்ளியின் விலை இந்த ஜூன் மாதத்தில் மட்டும் 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. தற்போது 2.14 லட்சம் ரூபாய் அளவுக்கு வர்த்தகமாகி வருகிறது, இது ஜனவரி மாதத்தில் 4 லட்சத்துக்கு மேல் இருந்த நிலையிலிருந்து பெரிய அளவிலான சரிவாகும்.

இந்தியாவில் வெள்ளி விலை அதிகப்படியாக ஒரு கிலோ 4,25,000 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏன் வெள்ளி விலை இப்படி சரிகிறது?

வெள்ளி விலை சரிவுக்கு முக்கிய காரணம், அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் குறைந்தது தான். இதனுடன் அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்து வெள்ளி விலையை தொடர்ந்து கீழே இழுத்துள்ளது.

முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களிலிருந்து வெளியேறி, பங்குச் சந்தை மற்றும் பிற முதலீடுகளை நோக்கி திரும்பியதும் இந்த சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் வெள்ளி தற்போது கடுமையான விற்பனை அழுத்தத்தை சந்தித்து வருகிறது.

தொழிற்துறைக்கு முக்கிய உலோகமாக மாறியிருக்கும் வெள்ளியை போதுமான இருப்பை உற்பத்தி துறையினர் வைத்திருக்கும் காரணத்தால் பயன்பாடு தொடர்ந்து இருந்தாலும், டிமாண்ட் பெரிய அளவில் உயரவில்லை.

இனி வரும் காலத்தில் வெள்ளி விலை எப்படி இருக்கும்?

சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, குறுகிய காலத்தில் வெள்ளியின் விலை 55 டாலர் அளவில் ஆதரவு பெறலாம். ஆனால், தற்போதைய உலகளாவிய விற்பனை அழுத்தம் தொடர்ந்தால், வெள்ளியின் விலை 50 டாலர் அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் வெள்ளி விலை தற்போதைய 2,20,940 விலை 2 லட்சத்திற்கு கீழ் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளியின் விலை இப்படி குறைவது, நகை தயாரிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். குறைந்த விலை நகை வாங்குபவர்களுக்கு சாதகமாக அமையலாம். ஆனால், ஏற்கனவே வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு இது இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய சூழலில், வெள்ளியின் விலை மீண்டும் உயர வேண்டுமானால், புதிய புவிசார் அரசியல் பதற்றம் அல்லது அமெரிக்க வட்டி விகிதக் கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இல்லையெனில், வெள்ளியின் விலை இன்னும் சில காலம் நெருக்கடியிலேயே இருக்கும் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+