குறையாமல் ஏறும் வெள்ளி விலை அதிசயம்.. தங்கம் போல வெள்ளியில் முதலீடு செய்யலாமா? சூப்பர் டிப்ஸ் மக்களே
சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி விலை, கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்தது. வெள்ளி கிராமுக்கு271 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.71 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்றைய தினம் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன? வெள்ளியில் முதலீடு செய்வது சரியா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
2025ம் ஆண்டின் இறுதியில் வெள்ளி விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்தை கடந்தது. டிசம்பர் 29 அன்று ரூ.254174 என்ற உச்சத்தை எட்டியது.

தங்கம் வெள்ளி விலை நிலவரம்
அதே நாளில் லாப பதிவு காரணமாக விலை கடுமையாக சரிந்தது. சுமார் ரூ.21,000 குறைந்து ரூ.2,33,120 ஆக வந்தது. இந்த ஏற்ற இறக்கம் முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. 2025 ஜனவரி தொடக்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தவர்களின் மதிப்பு வருட இறுதியில் ரூ.2.97 லட்சமாக உயர்ந்தது. இது சுமார் 196 சதவீத லாபம். எனவேதான் வெள்ளி மீது பொதுமக்களின் கவனம் அதிகரித்தது.
நிபுணர்கள் இந்த வெள்ளி விலை உயர்வுக்கு பல காரணங்களை சொல்கிறார்கள். சூரிய சக்தி பேனல்கள் மின்சார வாகனங்கள் மின்னணு சாதனங்கள் பாதுகாப்பு துறை ஆகியவற்றில் வெள்ளி பயன்பாடு வேகமாக உயர்ந்துள்ளன முக்கிய காரணமாகும்..
அதேபோல பங்குச் சந்தையில் வாங்கி, விற்கக்கூடிய ஒரு முதலீட்டு நிதி அதிகரித்ததும் குறைந்த வட்டி விகிதங்களும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக உள்ளது..
விலையை பொறுத்தவரை, 2026ல் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.2.80 முதல் ரூ.3.20 லட்சம் வரை இருக்கலாம் என சிலர் கணிக்கிறார்கள்.
வெள்ளியின் விலை உச்சம்
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை ஒரு அவுன்ஸுக்கு 65-80 டாலர் வரை போகலாம்.. 1979-80ல் வெள்ளி விலை உச்சத்தை எட்டிய பிறகு, 60% க்கும் அதிகம் குறைந்தது. 2011 உச்சத்துக்குப் பிறகு, விலை மீண்டும் பழைய அளவுக்கு வருவதற்கே 15 வருடங்கள் ஆகிவிட்டது..
அதனால்தான் இப்போது உச்சத்தில் இருக்கும் நிலையில் , முதலீடு செய்வது ஆபத்தானது என்று நிபுணர்கள் அலர்ட் செய்கிறார்கள்.. மேலும் வெள்ளியில் லாபம் சீராக கிடைப்பதில்லை. தவறான நேரத்தில் முதலீடு செய்தால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வரும்... அதுமட்டுமல்லாமல், தொழில்களில் செம்பு அலுமினியம் போன்ற மலிவான மாற்று உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.. இது நீண்டகால தேவையை குறைக்கலாம்.
தங்கத்தின் லாபம்
பொருளாதார நெருக்கடியில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக செயல்படுகிறது. எனவே தங்கம் வெள்ளி இரண்டையும் கலந்து முதலீடு செய்தால் வெள்ளியின் அதீத ஏற்ற இறக்கத்தை தங்கம் சமநிலைப்படுத்தும்... இதுவே நிபுணர்களின் எளிய அறிவுரையாகும்..
சுருக்கமாக சொல்லப்போனால் வெள்ளி அதிக லாபம் தரக்கூடியது ஆனாலும் அதிக ஆபத்தும் கொண்டது. குறுகிய கால லாப எண்ணத்தில் மட்டும் முதலீடு செய்யக்கூடாது. உங்கள் வருமானம் செலவுகள் அவசர தேவைகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டே செயல்பட வேண்டுமாம்..
பாதுகாப்பான முதலீடு
அவசர முடிவுகளை தவிர்த்து, உணர்ச்சிவசப்படாமல் தகவல்களை சரிபார்த்து முடிவு எடுக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு முழு முதலீட்டையும் வெள்ளியில் போடுவது சரியல்ல என்பதே நிபுணர்கள் தரும் ஆகச்சிறந்த அறிவுரையாக உள்ளது..
அப்படியே முதலீடு செய்தாலும் படிப்படியாக முதலீடு செய்வது பாதுகாப்பானது. சந்தை சரிவுகளையும் இயல்பான பகுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்... விலை உயர்ந்த செய்திகளை மட்டும் நம்பி முடிவு எடுக்காமல் நீண்டகால திட்டத்துடன் நிதி ஆலோசனை பெற்ற பிறகே செயல்படுவது நல்லது.
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Rate: தங்கம் விலை சரிவு! ஆனாலும் 1 லட்சத்திற்கு கீழே இறங்காது போலயே! -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications