டெக் ஊழியர்களின் வேலையை காவு வாக்கும் AI.. 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Snap Inc!
உலகளாவிய தொழில்நுட்ப துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சமுக வலைத்தளமான ஸ்னாப்சாட்-ன் தாய் நிறுவனமான Snap Inc. நிறுவனம் சுமார் 1000 பணியாளர்களை, அதாவது அதன் மொத்த ஊழியர்களில் சுமார் 16% பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
Snap நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, தற்போது அதன் புதிய கோடிங் பணிகளை சுமார் 65%க்கும் மேற்பட்டவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படுகின்றன. இதனால், முக்கிய பணிகளை குறைந்த எண்ணிக்கையிலான திறமையான ஊழியர்களை கொண்டு ஏஐ பயன்படுத்தி செயல்படுத்துவது சாத்தியமாகியுள்ளது.

இந்த மாற்றம், தொழில்நுட்ப துறையில் மனிதவள தேவையை குறைத்து, lean team என்ற புதிய முறையை உருவாக்கி வருவதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது.
இது மட்டும் அல்லாமல் 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களையும் ஸ்னாப் நிறுவனம் ரத்து செய்துள்ளது. 2025 டிசம்பர் நிலவரப்படி Snap நிறுவனத்தில் 5,261 நிரந்தர பணியாளர்கள் இருந்தனர். தற்போது 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது மூலம் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைக்கப்படலாம்.
இந்த பணிநீக்க அறிவிப்புக்கு பங்கு சந்தையில் சாதகமாக எதிரொலித்துள்ளது, Snap நிறுவனத்தின் பங்கு விலை ப்ரீமார்கெட் வர்த்தகத்தில் சுமார் 9% வரை உயர்ந்தது. இருப்பினும், இந்த ஆண்டில் இதுவரை அந்த பங்கு சுமார் 31% வரை வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணிநீக்கம் மற்றும் ஏஐ மாற்றத்துடன், Snap நிறுவனம் தனது வளர்ச்சிக்கான புதிய துறைகளிலும் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, Augmented Reality அடிப்படையிலான 'Specs' கண்ணாடி தயாரிப்பில் நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. இந்த தயாரிப்பு இந்த ஆண்டுக்குள் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Snap நிறுவனத்தின் இந்த நடவடிக்கை செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரிப்பதால், நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் அதிக செயல்திறனை அடையும் வழியைத் தேர்வு செய்து வருவதை காட்டுகிறது.
சமீபத்தில் ஆரக்கிள் நிறுவனத்தின் உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் மட்டும் சுமார் 12,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. அதோடு உலகம் முழுவதும் மொத்தம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளர். இது டெக் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்றபடுத்தியது. இந்த பணிநீக்கத்திற்கு பின்பும் ஏஐ தான் முக்கிய காரணமாக உள்ளது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கம் வேகமடைந்து வருகிறது. 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே 80-க்கும் மேற்பட்ட டெக் நிறுவனங்களில் 70,000க்கும் அதிகமான பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மறுசீரமைப்பு, உயர்ந்த வட்டி விகிதங்கள் மற்றும் கொரோனா பிறகான செலவு கட்டுப்பாடு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
அமேசான் சுமார் 16,000 பணியிடங்களை குறைத்துள்ளது. Block Inc தனது பணியாளர்களில் பெரிய அளவிலான (சுமார் 4,000) குறைப்பை மேற்கொண்டுள்ளது.
மேலும், Meta Platforms, Dell Technologies, The Walt Disney Company, Atlassian மற்றும் GoPro போன்ற நிறுவனங்களும் பணியாளர் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. மொத்தத்தில், ஏஐ பயன்பாட்டை அதிகரித்து செயல்திறனை உயர்த்தும் நோக்கில், உலகளாவிய நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் புதிய திசையை நோக்கி நகர்ந்து வருகின்றன.
-
டிசிஎஸ் நாசிக்: 30 நாள் போலீஸ் அன்டர்கவர் ஆப்ரேஷன்.. அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் தகவல்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications