போட்டி போட்டு கட்டணத்தை குறைக்கும் ஸ்பைஸ் ஜெட் இண்டிகோ விமான நிறுவனங்கள்
டெல்லி: "சூப்பர் ஹோலி சேல்ஸ்", மற்றும் "பிளாஷ் சேல்ஸ்" என்ற பெயரில் புதிய பயணக் கட்டண சலுகையை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கோடைகால விமான சேவைகளுக்கான பயணக் கட்டணத்தை ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் 3 முறை குறைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது 4வது முறையாக "சூப்பர் ஹோலி சேல்ஸ்", மற்றும் "பிளாஷ் சேல்ஸ்" என்ற பெயரில் பயணக் கட்டண சலுகையை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் குறைத்துள்ளது. டிக்கெட்டின் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து இந்த சலுகை அளிக்கப்படுகிறது.
சில குறிப்பிட்ட பாதைகளுக்கு ரூ.1,999 க்கும் குறைவான கட்டணங்களில் கூட டிக்கெட்டுகளை ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது. கட்டணத்தில் 30 சதவீதம் வரை டிஸ்கவுன்ட் தரும் இந்த சலுகைக்கான முன்பதிவு இன்று முதல் 16ந் தேதி வரை நடைபெற உள்ளதாக முன்னணி சுற்றுலா மற்றும் பயண இணையதளங்கள் கூறுகின்றன.
கட்டண சலுகையில் பயணம் செய்ய அட்வான்ஸ் புக்கிங் முறையில் 90 நாட்களுக்கு முன்கூட்டியே டிக்கெட்டை பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக ஸ்பைஸ் ஜெட் அறிவித்திருக்கும் சலுகையில், டெல்லியிலிருந்து சண்டிகர் செல்லும் ஒருவர் ரூ.1,999 மட்டும் செலுத்தினால் போதுமானது. மும்பையிலிருந்து அமிர்தசரஸ் செல்ல ரூ.3,999 மட்டுமே செலவாகும். கோடைகாலத்தில் பல்வேறு ஊர்களுக்கும் படையெடுக்கும் மக்களுக்கு இதுவொரு வரப்பிரசாதமாகும்.
இதே போன்று தொழிற்போட்டியின் காரணமாக பல விமான நிறுவனங்கள் கட்டணச் சலுகையை அளிக்க தயாராகி வருகின்றன. சில நிறுவனங்கள் 75 சதவீதம் வரை கூட கட்டணத்தை குறைத்துள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications