சென்னையில் ஆபீஸ் திறக்கும் ஆந்திரா.. ஒருபடி மேலே சென்ற உ.பி.. டிஆர்பி ராஜா பரபரப்பு பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் முதலீட்டுப் போட்டித்தன்மை குறித்து அக்கறை உள்ள எவரையும் கவலைப்பட வைக்கும் செய்தி இது. முதலீட்டாளர்களுடனான பல ஆண்டுகால தொடர்புகள், துறை சார்ந்த அறிவு மற்றும் நிறுவன அனுபவம் கொண்ட 'கைடன்ஸ் தமிழ்நாடு' அமைப்பில் பயிற்சி பெற்ற முதலீட்டு வல்லுநர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் போட்டி மாநிலங்கள் முயல்வதாக செய்திகள் வந்துள்ளது என்று திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.

முதலீட்டாளர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் கவர தமிழகத்திலேயே போட்டி மாநிலங்கள் முகாமிடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் விருப்பத்திற்குரிய தொழிற்துறை மையங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டின் அந்தஸ்துக்கு, அதன் சொந்த மண்ணிலேயே சவால் ஏற்பட்டிருக்கிறது. பிற போட்டி மாநிலங்கள் சாத்தியமான முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தமிழ்நாட்டின் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான 'கைடன்ஸ் தமிழ்நாடு' அமைப்பில் பயிற்சி பெற்ற தொழில்முறை வல்லுநர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் (poach) சென்னையில் அலுவலகங்களைத் திறந்து வருகின்றன.

Tamil Nadu s investment competitiveness AP to open an office in Chennai UP goes a step further

ஆந்திரப் பிரதேச மாநில முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான 'ஆந்திரப் பிரதேஷ் பொருளாதார மேம்பாட்டு வாரியம்' சென்னையில் ஒரு அலுவலகத்தை அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான 'இன்வெஸ்ட் யுபி', சமீபத்தில் சென்னையில் தனது அலுவலகத்தை அமைத்துள்ளது. ஹரியானா மாநிலமும் இதே வழியைப் பின்பற்றும் என்று மாநிலத் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 'இன்வெஸ்ட் யுபி' அதிகாரி ஒருவர் பேசுகையில், மாநிலங்களுக்கு இடையேயான இந்த முதலீட்டுப் போட்டியை ஒரு "கடுமையான இரத்தக் களம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

'கைடன்ஸ் தமிழ்நாடு' அமைப்பு தனது ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்குத் தயாராகி வரும் நிலையில், போட்டி மாநிலங்களுடன் தொடர்புடைய அலுவலகங்களில் சேர மாட்டோம் என உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த செய்தியை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், தமிழ்நாட்டின் முதலீட்டுப் போட்டித்தன்மை குறித்து அக்கறை உள்ள எவரையும் கவலைப்பட வைக்கும் செய்தி இது. முதலீட்டாளர்களுடனான பல ஆண்டுகால தொடர்புகள், துறை சார்ந்த அறிவு மற்றும் நிறுவன அனுபவம் கொண்ட 'கைடன்ஸ் தமிழ்நாடு' அமைப்பில் பயிற்சி பெற்ற முதலீட்டு வல்லுநர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் போட்டி மாநிலங்கள் முயல்வதாக செய்திகள் வந்துள்ளது.

பிற மாநில முகமைகளுக்கு ஊழியர்கள் மாறுவதைக் கட்டுப்படுத்த 'பான்ட்' முறையைக் கொண்டுவரக் கைடன்ஸ் பரிசீலிக்கும் அளவிற்கு இந்த விவகாரம் தீவிரமாகி உள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில், கைடன்ஸ் அமைப்பில் மிகவும் வலிமையான மற்றும் மிகச் சிறந்த தொழில்முறை வல்லுநர்கள் கொண்ட குழுவை நாங்கள் உருவாக்கினோம். பிணைப்பத்திரங்களைக் கொண்டு மட்டும் திறமையாளர்களைத் தக்கவைத்துவிட முடியாது. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, அதிகாரமளித்து, அவர்களை மதிப்பதன் மூலமே திறமைகளைத் தக்கவைக்க முடியும்.

போட்டி மாநிலங்கள் இப்போது சென்னையிலேயே தங்கள் அலுவலகங்களை அமைத்து வரும் நிலையில், 'கைடன்ஸ் தமிழ்நாடு' குழுவைப் பாதுகாத்து அவர்களுக்குத் தேவையான அதிகாரங்களை தவெக அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டின் மீது மிகுந்த பற்றும், சர்வதேச முன்னணி நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவமும், பல ஆண்டுகால நிறுவன அறிவும் கொண்ட சில விதிவிலக்கான இளம் வல்லுநர்கள் அங்கு உள்ளனர். அவர்களுக்குத் தகுதியான சுதந்திரம், அங்கீகாரம் மற்றும் மரியாதையைக் கொடுங்கள்.
ஏனெனில், நல்ல மனிதர்களை நீங்கள் இழக்கும்போது, திறமையை மட்டும் இழப்பதில்லை; அவர்கள் இத்தனை ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய தொடர்புகளையும் முதலீட்டு வாய்ப்புகளையும் சேர்த்து இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறீர்கள்!" இவ்வாறு கூறியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+