டிசிஎஸ் ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. இனி நிம்மதியா வேலை செய்யலாம்.. வந்தது முக்கிய அறிவிப்பு!
பெங்களூர்: ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் சமீப ஆண்டுகளில் உலகளாவிய ஐடி துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் நிறுவனங்கள், செயல்திறன் மற்றும் செலவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தும் வகையில் மாற்றியுள்ளது. இந்த சூழலில், பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை எண்ணிக்கையை குறைத்து, புதிய திறன்களை கொண்ட மக்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.
இந்த மாற்றத்தின் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக நேற்றைய ஸ்னாப் இன்க் நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்பில் ஏஐ எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பால் இந்நிறுவன ஐடி ஊழியர்கள் நம்மதி அடைந்துள்ளனர்.

2026 நிதியாண்டின் முடிவில், டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 5,84,519 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23,460 பணியாளர்கள் குறைந்துள்ளது, இந்த சரிவுக்கு முக்கிய காரணம் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கை. இதன் விளைவாக ஊழியர்கள் பல வெளியேற்றப்பட்டனர்.
இந்தநிலையில் டிசிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்த பணிநீக்க செயல்முறை தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக 2025ல் சுமார் 2% பணியாளர்களை குறைக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது மூலம் சுமார் 24000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதில் அதிகப்படியான நடுத்தர மற்றும் மூத்த நிலை பணியாளர்களை பாதித்தனர். தற்போது, இந்த மறுசீரமைப்பு கட்டத்தை நிறுவனம் நிறைவு செய்துள்ளதாகவும், இனி பணிநீக்கங்கள் நடைபெறாது எனவும் டிசிஎஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவர் சுதீப் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் மட்டும் 25,000 கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் சுமார் 40,000 புதிய பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் இலக்கை விரைவில் அடைவோம் என தெரிவித்தார்.
2026 நிதியாண்டில் மட்டும் 44,000 டிரைனி ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், சமீபத்திய காலாண்டில் 2,356 பணியாளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இது நிறுவனத்தின் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியதைக் காட்டுகிறது.
டிசிஎஸ் நிறுவனம் புதிதாக ஊழியர்களை சேர்த்தாலும் உலகளாவிய சந்தை நிலைமை இன்னும் தெளிவாக இல்லை. பல நிறுவனங்கள் தொழில்நுட்ப முதலீடுகளை குறைந்துள்ளது, அல்லது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதால், எதிர்கால தேவையை கணிப்பது தற்போதைய நிலையில் மிகவும் கடினமாக உள்ளது. இதனால், FY27ற்கான முழுமையான ஆட்சேர்ப்பு திட்டங்களை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications