For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தித்திக்கும் மாம்பழங்களை உங்கள் வீட்டுக்கே வந்து கொடுக்கும் டிரெடிஃபுட்ஸ்

தமிழகத்தின் சிறந்த மாம்பழங்களை உங்கள் இல்லத்தில் இருந்தபடியே சுவைத்து மகிழுங்கள்.

சென்னை : கோடை சீசனோடு மாம்பழ சீசனும் தொடங்கிவிட்ட நிலையில் வீட்டில் இருந்த படியே இயற்கை சுவையுடன் மாம்பழம் ருசிக்க விரும்புபவர்களுக்காக ட்ரெடி ஃபுட்ஸ் அருமையான வாய்ப்பை வழங்குகிறது. சுவை மிக்க மாம்பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு ருசி குறையாமல் உங்கள் வீட்டின் வரவேற்பறைக்கே கொண்டு வந்து தரும் சிறப்பான சேவையை செய்கிறது

மாம்பழம் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சேலம், காரணம் சேலத்து மாம்பழத்தின் தனிச்சுவையும், தரமும்தான். "மாதா ஊட்டாத சோறை மாங்கனி ஊட்டும்" என்ற பழமொழி உண்டு. கோடைகாலம் வரும் முன்னே மாம்பழம் வரும் பின்னே என்பார்கள். இதோ வெயில் தலை காட்டத் துவங்கிவிட்டது. மாம்பழ வாசனையும் வீசத் தொடங்கிவிட்டது கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் மாம்பழங்கள் கிடைக்கின்றன என்றால் காரணம் இல்லாமல் இல்லை.

மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது. மனிதர்களின் உடலுக்கு மிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை நாம் சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

மாம்பழத்தில் பல வகை இருந்தாலும் சில குறிப்பிட்ட ரகங்கள் அலாதியான சுவை கொண்டவை. அல்ஃ‌போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாலை(பீதர்), சேலம் குதாதாத் என பல வகைகள் உண்டு. என்னென்ன வகை மாம்பழங்களுக்கு என்னென்ன சிறப்பு என்று தெரியுமா உங்களுக்கு.

அல்ஃ‌போன்சா (Alphonso Mango): இந்தியாவில் போர்ச்சுகீசியர்களால் ஒட்டு ரகங்களின் (Graftage) மூலம் உருவாக்கப்பட்டது இந்த அல்ஃ‌போன்சா மாம்பழம். இந்த பழங்களின் சுவை அலாதியானது. இதன் பொன்மஞ்சள் நிறம் கூடுதல் சிறப்பு. நாவை வருடும் நறுமணத்துடன் உள்ள இந்த பழம் மிகவும் இனிப்பாகவும் மிருதுவாகவும் அதிக சதைப்பற்றுடன் நார் இல்லாமல் சாறு நிறைந்ததாக இருக்கும். இதன் காரணமாகவே, மாம்பழங்களின் ராஜா என்று செல்லப்பெயரில் அழைக்கப்படுகிறது அல்ஃ‌போன்சா. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசளிக்க சிறந்த ரகம்.

Tredy foods an online store now comes with the fresh ripen mangoes at your doorsteps

மல்கோவா (Malgova or Malgoa): மாம்பழம் என்ற உடன் மல்கோவா என்ற பெயர்தான் நம் அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வரும். தென்னிந்தியா முழுவதும் பரவலாக இந்த மாம்பழங்கள் கிடைத்தாலும் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கிடைக்கும் மல்கோவா மாம்பழங்கள் தனி சிறப்பு வாய்ந்தது. உயர்தரமுடைய இந்த மாம்பழ வகை தித்திப்பு சுவை கொண்டது, மேலும் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் சதைப்பற்றுடன் காணப்படும் மல்கோவா மாம்பழங்கள் பழுக்க பழுக்க வாசனை ஊரெல்லாம் பரவும்.

இமாம்பசந்த் (Imampasanth, Himayat or Humayun Pasand): ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் இந்த மாம்பழம் பச்சை நிறத்தில் இருந்தாலும் அதிக தித்திப்பு கொண்டது. இதன் சுவை அல்ஃ‌போன்சாவுக்கு சவால்விடும் விதமாக இருப்பதனாலேயே அனைவராலும் விரும்பப்படுகிறது. இந்த மாம்பழம் பழமாக உண்ணவும், ஜூஸ் போடவும் ஏற்றது.

சேலம் பெங்களூரா (Salem Bangalora): சேலம் பெங்களூரா மாம்பழம் அலாதியான சுவை கொண்டது. இதற்கு தோத்தாபூரி, கல்லாமை, சுந்தர்சா, என்ற வேறு பெயர்களும் உண்டு. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிடைக்கும் இந்த பழத்தின் காய்கள் சற்றுக் குறைந்த புளிப்புச் சுவை கொண்டதால் இதன் காயை கர்ப்பிணிகள் விரும்பி உண்பார்கள். சிறு குழந்தைகளுக்கு மாங்காய் ருசி பிடிக்கும். சேலம் பெங்களூரா பழங்கள் பெரியதாகவும், இளம் மஞ்சள் நிறத்துடன் சதைப்பற்றுக் கொண்டது. படிக்கும் போதே சுவைக்கத் தூண்டுகிறதா? உடனே ட்ரெட்டி ஃபுட்ஸில் ஆன்லைனில் (www.tredyfoods.com) ஆர்டர் பண்ணுங்க. வீடு தேடி மாம்பழம் வரும்.

பீதர் (Peethar): நடுசாலை அல்லது பீதர் மாம்பழங்கள் நல்ல நறுமணத்துடனும், இனிப்பாகவும் இருக்கும். இதன் இளம் சிவப்பு பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறம் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும். இந்த மாம்பழம் சிறியதாக இருப்பதுடன் நார் அற்றதாகவும் சாறு நிறைந்ததாகவும் இருக்கும் என்பது தனி சிறப்பு.

சேலம் குதாதத் (Khudhadhadh Mango): மாம்பழ சீசன் இறுதியில் கிடைக்கும் இந்த மாம்பழம் மிகவும் சுவையானது. ஜூன் மாதம் வரை இந்த மாம்பழம் கிடைக்கும். சேலம் குதாதாத் மாம்பழம் அளவில் பெரியதாக இருப்பதனால் இந்த மாம்பழம் ஜூஸ் போடுவதற்கு மிகவும் சிறந்தது.

Tredy foods an online store now comes with the fresh ripen mangoes at your doorsteps

இயற்கையாக கனியும் பழங்கள்:

அந்த காலத்தில் வீட்டிற்கு மூங்கில் கூடையில் வைக்கோல் போட்டு வாசனையோடு தாத்தா வாங்கி வந்த மாம்பழத்தை நினைத்தாலே இப்போதும் நாவில் எச்சில் ஊறும். இன்று பெரும்பாலும் கடைகளில் வாங்கும் மாம்பழங்கள் ரசாயன கலவைகள் மூலமே பழுக்கவைக்கப்படுகிறது. ஆகவே வீட்டிற்கு வாங்கி வந்த ஓரிரு நாட்களிலேயே மாம்பழங்கள் கெட்டுவிடும். மேலும் இந்த மாம்பழங்கள் உடல்நலத்திற்கும் கேடாக அமையும். ஆகவே ரசாயனங்கள் கலக்காத மாம்பழங்களை வாங்கி சுவைப்பதே சிறந்தது. இதற்கு தீர்வாக ட்ரெடி ஃபுட்ஸ்.காமில் இயற்கையாய் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்கள் கிடைக்கும்.

மாம்பழங்களை இயற்கையாய் பழுக்க வைத்தால் அதன் சுவை மேலும் கூடும். மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட மாங்காய் பழுப்பதற்கு சராசரியாக 4 முதல் 6 நாட்கள் வரை ஆகும். ட்ரெடிஃபுட்ஸ்.காமில் நன்கு தேர்ந்த பழுக்கக்கூடிய நிலையில் உள்ள மாம்பழங்களை கைகளால் தேர்வு செய்து வைக்கோல் நிரப்பிய பெட்டியில் பாதுகாப்பாக வீட்டிற்கே அனுப்பப்படுகிறது. நீங்கள் வீட்டிற்கு வரவழைத்த பின்பு 2 அல்லது 3 நாட்கள் கழித்தே மாம்பழங்கள் பழுக்க ஆரம்பிக்கும். மாம்பழங்கள் பழுக்கும்பொழுது உங்கள் வீடு முழுக்க மாம்பழ மணம் வீசும். வீடு முழுக்க நிரம்பியுள்ள மாம்பழ வாசனையுடனே வாழ்வது தனி சுகம்தான்.

Tredyfoods.com இல் இந்தியா முழுவதும் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு ஆகவே சுவை மிகுந்த மாம்பழங்களை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிக்க சிறந்த வாய்ப்பு. கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மொத்த ஆர்டர்களும் எடுத்துக்கொள்ளப்படும். டோர் டெலிவரி செய்யும்போது பணத்தை கொடுத்தால் போதும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9787266666 அல்லது ஈமெயில் முகவரி: [email protected].

இன்னும் என்னென்ன இருக்கு தெரியுமா?

இது மட்டுமல்ல "நவதானிய குக்கீஸ்கள்", " சிறுதானிய குக்கீஸ்கள்" "நவதானிய ரஸ்க்குகள்", "சத்தான எள்ளு மிட்டாய்", மொறுமொறுப்பான "சாத்தூர் சேவு", தித்திக்கும் "ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா", "திருநெல்வேலி அல்வா", "மலைவாழைப்பழம்", "ஆட்டுக்கால் கிழங்கு", "ஊட்டிஹோம் மேட் சாக்லேட்ஸ்", "ஆர்கானிக் சூப்", "வற்றல் வகைகள்", "ரெடிமிக்ஸ் சமையல் பொடிகள்", "மூலிகை பொடிகள்", "நன்னாரி சர்பத்"என 800க்கும் மேற்பட்ட பொருட்கள் www.tredyfoods.com இல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

உடனே ஆர்டர் செய்யுங்க. தின்பண்டங்களின் சுவைமாறாமல் நமது வீடு தேடி கொண்டு வந்து பத்திரமாக தருகின்றனர். பொருட்களை வாங்கிய பின்னர் பணம் செலுத்தும் வசதியும் (COD) உள்ளது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. ஒருமுறை ஆர்டர் செய்து ருசித்து பாருங்க... அப்புறம் என்ன, பலகாரங்களின் ருசியைப் பற்றியும் Tredyfoods.com பத்தியும் உங்க அக்கம் பக்கம் வீட்டுக்காரங்களுக்கு நீங்களே பெருமை பொங்க சொல்வீங்க.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X