டேஸ்டான பலகாரமும்... கியூட்டான சமையல் பாத்திரங்களும்... அசத்தும் Tredyfoods.com

ட்ரெடி புட்ஸ் நிறுவனம் டேஸ்டான பலகாரங்களையும் கியூட்டான சமையல் பாத்திரங்களையும் ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்ரெடி புட்ஸ் நிறுவனம் டேஸ்டான பலகாரங்களையும் கியூட்டான சமையல் பாத்திரங்களையும் ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது.

திருநெல்வேலி அல்வாவும், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவும், குருக்கத்தி இனிப்பு சீடையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் Tredyfoods.com மில் வாங்கலாம். பலகாரம் மட்டுமல்ல ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பாத்திரங்களும், சமையல் செய்ய மசாலா பொருட்களும், அஞ்சரைப்பெட்டியில் வைக்க நறுமணப்பொருட்களும் கூட Tredyfoods.com விற்பனை செய்கிறது.

Tredy foods is selling traditional foods through online

"உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா?" என்று பாடிக்கொண்டே ஆனந்தமாக சமைக்கும் இல்லத்தரசிகள் ஆரோக்கியத்தையும் அதிகம் விரும்புகின்றனர். எனவேதான் கம்யூட்டர் காலத்திலும் கவனமாக பாத்திரங்களை தேர்வு செய்கின்றனர். மண்பாண்டத்தில் தொடங்கிய சமையல் பாத்திரங்கள் நான்ஸ்டிக் வரை வந்த பின்னரும் இரும்பு பாத்திரங்களை தேடி தேடி வாங்குகின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள், சந்தைகளுக்கும், கடைகளுக்கும் தேடிப்போய் பொருட்களை வாங்க நேரமில்லாதவர்களுக்காகவே Tredyfoods.com வீட்டிற்குத் தேவையான தோசைக்கல், வடைச்சட்டி, கடாய் என இரும்பில் செய்யப்பட்ட பல பாத்திரங்களை விற்பனை செய்கின்றனர்.

ஆரோக்கியம் தரும் பாத்திரங்கள்:

காலையில் காபி குடிக்க பயன்படுத்தும் 'பித்தளை பில்டர் டிகாசன் செட்' தொடங்கி இரும்பு தோசைக்கல், இஞ்சி, பூண்டு இடிக்கும் கல் செட், இரும்பினால் ஆன தோசை திருப்பி, இரும்பு பணியார சட்டி, இரும்பு தாளிக்கும் கரண்டி, பாரம்பரிய தோசைக்கல், இரும்பு வடைச்சட்டி, தாளிக்கும் இரும்பு கடாய், இரும்பு பணியார சட்டி, மரத்தால் ஆன காய்கறி சீவும் கத்தி, மரத்தால் ஆன தேங்காய் துருவி, கைப்பிடி வைத்த தேங்காய் துருவி, இரும்பினால் ஆன அரிவாள் மனை, மரத்தால் செய்யப்பட்ட பூரி தேய்க்கும் கட்டை, சப்பாத்தி தேய்க்கும் உருளை, தயிர் மத்து, பருப்பு கடைசல் மத்து என பாரம்பரியமான பல பொருட்கள் டிரெட்டிபுட்ஸ்.காம் மில் விற்பனை செய்யப்படுகிறது. இல்லத்தரிசிகளுக்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தாலே போதும் அத்தனை பாத்திரங்களும் பத்திரமாக வீடு தேடி வரும்.

Tredy foods is selling traditional foods through online

மிளகு, ஏலக்காய், கல்பாசி:

சமையல் பாத்திரங்கள் இருந்தால் மட்டும் போதுமா? சமையலறையில் வாசனைப் பொருட்கள் இன்றி சமையல் நிறைவடையாது. சைவமோ, அசைவமோ சமைக்கும் உணவில் பட்டை, ஏலக்காய்,அன்னாசி பூ, கல்பாசி, கொத்தமல்லி, மிளகாய், என வித விதமாக போட்டு சுவையை வாசனையை அதிகரிப்பார்கள் இல்லத்தரசிகள். இனி உங்களுக்குத் தேவையான ஸ்பைசஸ் பொருட்களை விரல் நுனியில் ஆர்டர் செய்யலாம். கொல்லிமலையில் இருந்து நேரடியாக கொண்டு வரப்பட்ட மிளகு, மிளகு பவுடர், சுக்கு, ஏலக்காய், கல்பாசி, மல்லித்தூள், மிளகாய் தூள், பட்டை, அன்னாசி பூ உள்ளிட்டவை Tredyfoods.com மில் விற்பனை செய்யப்படுகிறது.

Tredy foods is selling traditional foods through online

மணக்கும் மசாலாக்கள்:

சமையல் அறையில் மசாலா பொருட்களை அரைத்து சமைக்க இப்போது நேரமில்லை. அவர்களுக்காகவே பல்வேறு பட்ட மசாலாக்களை ட்ரெடிபுட்ஸ் வழங்குகிறது. Tredyfoods.com மில் உங்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, ஹோம் மேட் மசாலாக்கள், ஐயர்ஸ் ஸ்டைல் மசாலாக்கள், ஆர்கானிக் மசாலாக்கள், கர்நாடகா ஸ்டைல் மசாலாக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மசாலாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சாம்பார், குழம்பு மசாலாக்களை எடுத்துக்கொண்டால் நான்கிற்கும் மேற்பட்ட சுவைகளில் மசாலாக்கள் கிடைக்கின்றன. ருசிப்பிரியர்கள் தனித்தனியாக வாங்கி சுவைத்து பார்க்கலாம். இல்லத்தரசிகளும் தினம் ஒன்றாக வாங்கி சமைத்து அசத்தலாம்.

ருசிக்கும் ஊறுகாய்கள்:

இதுமட்டுமல்ல நாவின் சுவை அரும்புகளை அதிகரிக்கச் செய்யும் வாழைப்பூ ஊறுகாய், இறால் ஊறுகாய், மீன் ஊறுகாய், கோங்குரா ஊறுகாய், இஞ்சி உறுகாய், பூண்டு ஊறுகாய் குஜராத்தி ஸ்டைல் மாங்காய் ஊறுகாய், கருவேப்பிலை தொக்கு என ருசிப்பிரியர்களுக்கு ஏற்ப 50 வகையான ஊறுகாய்கள் Tredyfoods.com மில் விற்பனை செய்கின்றனர்.

Tredy foods is selling traditional foods through online

ஊர் பெருமை சொல்லும் பலகாரங்கள்:

இது மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெருமை சொல்லும் வகையில் தின்பண்டங்கள் உள்ளன. குருக்கத்தி அதிரசம், குருக்கத்தி இனிப்பு சீடை, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் சேவு, மணப்பாறை முருக்கு, சாத்தூர் மிக்சர் என நாவிற்கு ருசி ஊட்டும் பலகாரங்கள் Tredyfoods.com மில் விற்பனை செய்யப்படுகிறது.

இனிப்பு, கார பலகாரங்களும் மட்டுமல்ல "நவதானிய குக்கீஸ்கள்", " சிறுதானிய குக்கீஸ்கள்" "நவதானிய ரஸ்க்குகள்", "சத்தான எள்ளு மிட்டாய்", "மலைவாழைப்பழம்", "ஆட்டுக்கால் கிழங்கு", "ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ்", "ஆர்கானிக் சூப்" "வற்றல் வகைகள்" என 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் Tredyfoods.com இல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம். ஒருமுறை ஆர்டர் செய்து ருசித்து பாருங்க... அப்புறம் அதன் சுவையைப் பற்றியும் Tredyfoods.com பத்தியும் நீங்கள் அனுபவித்து பேசுவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+