Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாட்டிலிருந்து வரும் மசாலா, இனிப்பு, உணவுகள்.. இணையத்தில் கலக்கும் டிரெட்டிபுட்ஸ்

டிரெட்டிபுட்ஸ்.காம் மூலம் ஆன்லைனில் இம்போர்ட்டட் இனிப்புகள், காஃபி மற்றும் மசாலாக்களை ஆர்டர் செய்யுங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உணவுப் பிரியர்கள் இந்தியாவின் பாரம்பரிய உணவுகளை, மசாலாப்பொருட்களை தேடி தேடி வாங்கி சமைத்து ருசிப்பார்கள். வெளிநாடு சென்று வந்தால் அந்த உணவின் சுவையை அக்கம் பக்கத்தினருக்கு சொல்லி சொல்லி அவர்களின் வயிற்றில் நெருப்பை பற்ற வைப்பார்கள். நாமும் வெளிநாடு சென்று அந்த உணவுகளை, மசாலாக்களை ருசிக்க வேண்டும் என்று ஆசையை வரவழைப்பார்கள். அவர்களுக்காவே, ஆன்லைன் விற்பனையகமான www.tredyfoods.com வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இனிப்பு பண்டங்களையும், கமகமக்கும் மசாலாக்களை விற்பனை செய்கின்றனர். தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளை சமைக்க மசாலா பொடிகளை வாங்கி சமைத்து ருசித்தவர்கள் ஒரு மாற்றத்திற்காக வெளிநாட்டு மசாலாக்களையும் ஆன்லைனில் வாங்கி சமைத்து ருசிக்கலாம்.

வெளிநாட்டு பக்லாவா, சாக்லேட்கள், குக்கீஸ்கள்

இது ரம்ஜான் மாதம் என்பதால் வெளிநாடுகளில் இருந்து வரவைக்கப்படும் பக்லாவா, சாக்லேட்கள், குக்கீஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. 'பப்ஸ்' வகையைப்போல் காணப்படும் இந்த பக்லவா பல மெல்லிய மடிப்புகளாக உருவாக்கி, உள்ளே பூரணமாக வேர்க்கடலை அல்லது முந்திரியை நிரப்பி பொரித்து, தேனில் ஊறவைக்கப்படுகிறது. இந்த பக்லாவா 15ஆம் நூற்றாண்டில் இருந்தே துருக்கி நாட்டு மக்களின் மிகப்பிரபலமான இனிப்பு வகையாக அறியப்படுகிறது. முந்திரி பக்லாவா, வால்நட் பக்லாவா, பக்லாவா பிஸ்டாசியோ, ஃபேர்ட்ஸ் நெட்ஸ் பிஷ்டாசியோ என பலவகை பக்லாவாக்கள் www.tredyfoods.com இல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் tredyfoods.com இல் மேப்பிள் சிரப் கேண்டி, ஆல்மண்ட் கேக், பிஷ்டாசியோ, ஐஸ்கிரீம் சாண்ட் விச், ப்ரீமியம் மம்மூல் குக்கீஸ், பிரீமியம் பக்லாவா பிஸ்டாசியா மிக்ஸ், தேங்காய் கேக், மம்மூல் வால்நட், மம்மூல் பிஷ்டாசியா, பர்மா பிஸ்டாசியோ, பர்மா கேஷிவ் ஆகிய இனிப்பு பண்டங்களும் பார்க்கும் போது நாவின் சுவை அரும்புகளை மலரச் செய்கின்றன.

Tredyfood opens door for tasting foreign food through online

மணமணக்கும் வெளிநாட்டு காஃபி மற்றும் மசாலாக்கள்

காலையில் கண் விழித்ததும் காஃபியை ருசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இந்தியாவில் உற்பத்தியாகும் காஃபி பவுடரை ருசித்தவர்கள், இனி www.tredyfoods.com மூலம் இறக்குமதி செய்யப்பட்ட காஃபியை ருசிக்கலாம். கொலம்பியன் காஃபி, எத்தியோப்பியன் காஃபி, குவாடிமாலன் காஃபி, பிரெஞ்ச் ரோஸ்ட் காஃபி, டார்க் சுமத்ரா மான்டெல்லிங் காஃபி என உலகின் பிரசித்திப் பெற்ற காஃபி பவுடர்களை வாங்கி சுவைக்கலாம். வெளிநாடுகளில் ப்ரசித்திபெற்ற்ற மசாலாக்கள் ஆனா அர்ஜென்டைனா சீசனிங், கரோலினா பார்பிக்யூ, கலிபோர்னியா சிட்ரஸ் ரப், பப்பல்லோ சாஸ் சீசனிங், மெம்பிக் பார்பிக்யூ, டெக்சாஸ் பார்பிக்யூ, ஜமைக்கன் ஜெர்க், பார்படாஸ் ரப், வினிகர் பவுடர் ஆகிய மணமணக்கும் மசாலாக்களும் விற்பனை செய்யப்படுகிறது.

பாரம்பரிய இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள்:

இரும்பு, பித்தளையில் செய்த பாத்திரங்களையே தமிழக மக்கள் பாரம்பரியமாக உபயோகித்து வந்தனர். கால மாற்றத்தினால் நான்ஸ்டிக் எனப்படும் பிசுபிசுப்பில்லாத பாத்திரங்களுக்கு மாறினர். பாரம்பரியத்தை விரும்பும் மக்களுக்காகவே www.tredyfoods.com இல் பித்தளையில் செய்யப்பட்ட காபி ஃபில்டர், பித்தளை காபி டபரா செட் இரும்பு தோசைக்கல், பணியாரச்சட்டி, கடாய், காரட் துருவி, தேங்காய் துருவியுடன் கூடிய இரும்பு அரிவாள் மனை, பாரம்பரிய தேங்காய் துருவி, முறுக்கு அச்சு, பூரிக்கட்டை, பருப்பு கடையும் மத்து என பாரம்பரிய வீட்டு உபயோகப்பொருட்களும் இந்த இணைய தளத்தில் ஆர்டர் செய்து வாங்கலாம்.

Tredyfood opens door for tasting foreign food through online

சேலத்து மாம்பழங்கள்

இது மாம்பழம் சீசன் என்பதால் இந்தியாவில் வசிக்கும் மக்களுக்காக சேலத்து மாம்பழங்களை ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர். இமாம்பசந்த், மல்கோவா, பீத்தர், சேலம் பெங்களூரா, குத்தாதாத் ஆகிய மாம்பழங்கள் www.tredyfoods.com இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆர்டர் செய்தால் போதும் பாதுகாப்பாக பெட்டியில் வைக்கோல் வைத்து பேக் செய்யப்பட்டு பத்திரமாக வீடு தேடி வரும். மாம்பழங்கள் கனிய கனிய வீடெல்லாம் மணக்கும். அந்த மணமே ருசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும், ப்ரீ ஷிப்பிங் என்பதால் நமக்கு பிடித்தவர்களுக்கும் பரிசாக அனுப்பலாம். பழங்களை 3 கிலோ மற்றும் 5 கிலோ என ஆர்டர் செய்து பத்திரமாக வைத்து ருசிக்கலாம். Cash on delivery வசதியும் உண்டு. 9787266666 என்ற எண்ணில் போன் புக்கிங் செய்யலாம். வெளிநாட்டில் வசிப்பவர்களும் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளை வெளிநாட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யலாம். பாதுகாப்பான முறையில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்லத்திற்கு கொண்டு சேர்க்கப்படும். கார்ப்பரேட் மற்றும் பல்க் புக்கிங் வசதியும் உண்டு.

Tredyfood opens door for tasting foreign food through online

இனிப்பு, கார தின்பண்டங்கள்

இது மட்டுமல்ல "நவதானிய குக்கீஸ்கள்", " சிறுதானிய குக்கீஸ்கள்" "நவதானிய ரஸ்க்குகள்", "சத்தான எள்ளு மிட்டாய்", மொறுப்பான "சாத்தூர் சேவு", தித்திக்கும் "ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா", "திருநெல்வேலி அல்வா", "மலைவாழைப்பழம்", "ஆட்டுக்கால் கிழங்கு", "ஊட்டிஹோம் மேட் சாக்லேட்ஸ்", "ஆர்கானிக் சூப்" "வற்றல் வகைகள்" "ரெடிமிக்ஸ் சமையல் பொடிகள்" "மூலிகை பொடிகள்","நன்னாரி சர்பத்"என 800க்கும் மேற்பட்ட பொருட்கள் கொண்ட www.tredyfoods.com இல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம். மாம்பழங்களையும், வெளிநாட்டு மசாலாக்கள், இனிப்பு பொருட்களை ஆர்டர் செய்து ருசித்து பாருங்க... அப்புறம் அதன் சுவையைப் பற்றியும் Tredyfoods.com பத்தியும் ருசிக்க ருசிக்க நீங்களே பேசுவீங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+