பறக்கும் தங்கம்.. பாதாளத்தில் டாலர்.. டிரம்ப் பற்ற வைத்த வெடியால் குழம்பும் உலக பொருளாதாரம்!
டெல்லி: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஆனால், சர்வதேச மார்கெட் நிலவரத்தை பார்க்கும்போது தங்கம் விலை இப்போதைக்குக் குறைய வாய்ப்பு இருப்பது போலத் தெரியவில்லை. தங்கம் விலை இந்தளவுக்கு உயர என்ன காரணம்.. இனி வரும் காலங்களில் கொஞ்சமாவது குறைய சான்ஸ் இருக்கா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் சமீபத்திய வாரங்களில் தினசரி இரண்டு முறை மாற்றி அமைக்கும் அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்து வந்தது. இன்று கூட ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ 1960க்கு உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.94,600க்கு, அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ 11,825க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் உச்சம்
சர்வதேச சந்தையில் இப்போது மாலையும் விலையேற்றம் தொடர்கிறது. அங்குத் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,100 டாலரை தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது. அமெரிக்க பெடரல் வங்கி இந்த மாத இறுதியில் வட்டியைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, சரிந்து வரும் டாலர் மதிப்பு, அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் பதற்றம் ஆகியவை இதற்குப் பிரதானக் காரணமாக உள்ளது..
இந்திய நேரப்படி மாலை 7.15 மணிக்கு ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 0.44% உயர்ந்து 4,128 டாலராக இருந்தது. முன்னதாக இது 4,179.48 டாலர் வரை உச்சத்திற்குச் சென்றிருந்தது. அதன் பிறகே சற்று குறைந்தது. தங்கம் விலை இந்த ஆண்டு மட்டும் 57% உயர்ந்தது. நேற்று திங்கள்கிழமை தான் தங்கம் விலை முதல் முறையாக 4,100 டாலர் அளவைத் தாண்டியது.
காரணங்கள்
தங்கம் விலை இப்படித் தாறுமாறாக உயரப் பல முக்கிய காரணங்கள் உள்ளன.. புவிசார் அரசியல், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது, டாலர் மதிப்பு ஆகியவை பிரதானக் காரணமாக இருக்கிறது.
இது தொடர்பாகச் சந்தை ஆய்வாளர் ஹான் டான், "சர்வதேச அளவில் வர்த்தகப் போர் குறித்த எழுந்த கவலைகள் காரணமாகவே தங்கம் விலை 4,100 டாலரை தாண்டியுள்ளது. இந்த மாதம் இறுதியில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கும். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
அமெரிக்கா சீனா மோதல்
சீனா மீதான பொருட்களுக்கு இறக்குமதி வரியை விதிக்கப் போகிறேன் என கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் அறிவித்ததே இந்த புதிய விலையேற்றத்தை ஆரம்பித்து வைத்தது.. சீனா பொருட்களுக்கு 100% வரி விதிப்பதாக அறிவித்த டிரம்ப், வரும் நவம்பர் மாதம் முதல் இந்த வரி அமலுக்கு வரும் என அறிவித்தார். அதற்கு பதிலாகச் சீனாவும், அமெரிக்கக் கப்பல்களுக்கான துறைமுக கட்டணத்தை உயர்த்த போவதாகச் சீனா அறிவித்தது. இப்படி இரு பெரும் உலக நாடுகள் மோதிக் கொள்வதே தங்கம் விலை உயரப் பிரதானக் காரணம்.
மேலும், இந்த மாதம் இறுதியில் அமெரிக்க பெடரல் வங்கி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றே தெரிகிறது. அப்படி வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை இன்னும் எகிறும். அதாவது வட்டி விகித குறைப்பு நடந்தால் டாலர் மதிப்பு சரியும். இதுவும் தங்கம் விலையை உச்சத்திற்குக் கொண்டு போகும்.
குறைய நோ சான்ஸ்
இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் தங்கம் விலை உயர்வதற்கே வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,000 டாலரை எட்டும் என்று பாங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சொசைட்டி ஜெனரல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதாவது தங்கம் விலை இங்கிருந்து 22% வரை உயரலாம் என்று எச்சரித்துள்ளனர்.
மறுபுறம் தங்கத்திற்கு இணையாகப் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்த வெள்ளி, சர்வதேச சந்தையில் சற்றே சரிந்துள்ளது. ஸ்பாட் வெள்ளி 1.6% சரிந்து ஒரு அவுன்ஸ் 51.49 டாலராக இருந்தது. முன்னதாக, வெள்ளி ஒரு அவுன்ஸ் 53.60 டாலர் வரை போன நிலையில், அது சற்று சரிந்துள்ளது. அதேபோல பிளாட்டினம் 0.2% உயர்ந்து 1,648.32 டாலராகவும், பல்லேடியம் 1.5% உயர்ந்து 1,496.24 டாலராகவும் இருக்கிறது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
தங்கம், வெள்ளி இறக்குமதி கட்டுப்பாடு.. மத்திய அரசின் திடீர் ஆக்ஷன்! தங்கம் விலை தாறுமாறா உயர போகுது? -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications