ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்!
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான சீனா, அமெரிக்காவுக்கு இணையாக உலகில் அனைத்து நாடுகளுடனும் வர்த்தகம், நிதி பரிமாற்றம், வளர்ச்சி திட்டங்கள், முதலீடுகள் என உறவுகளை வளர்ந்துக்கொண்டு வந்த நிலையில், இந்த ஈரான் போர் சீனாவுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
ஈரான் போர் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் பல ஆண்டுகள் திட்டமிடல், முயற்சிகள் உடன் மத்தியக் கிழக்கில் முதலீடுகளையும், வர்த்தகத்தையும் பெற்று வந்த சீனா இதில் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது.

2005-ம் ஆண்டு முதல் இன்று வரை சீனா மத்தியக் கிழக்கு பகுதியில் முதலீடு மற்றும் கட்டுமான ஒப்பந்தங்கள் என சுமார் 269 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்து இப்பகுதியின் முக்கியமான டிரேட் பார்ட்னராக மாறியுள்ளது சீனா.
இந்த பெரும் தொகை சீனாவுக்கு மட்டுமல்ல, வளைகுடா நாடுகளுக்கும் பெரிய வளர்ச்சியைத் தந்துள்ளது. சீனா - வளைகுடா நாடுதள் மத்தியிலான உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வந்த காரணத்தால் இரு தரப்புக்கும் பெரும் பலன் கிடைத்தது. ஆனால் இந்த ஈரான் போர் பல புதிய திட்டங்களையும், வளர்ச்சியையும் பாதித்துள்ளது.
சீனாவின் மொத்த முதலீட்டில் பெரும் பங்கை சவுதி அரேபியா பெற்றுள்ளது. சவுதியில் மட்டும் சுமார் 82 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு மற்றும் கட்டுமான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கு சுமார் 48 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை சீனா செய்துள்ளது.
3ஆம் இடத்தில் ஈராக், சீனா இந்நாட்டில் 40 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்திருக்கிறது. கடைசியாக ஈரானுடன் சீனா சுமார் 25 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளது. இந்த நான்கு நாடுகளும் சீனாவின் மத்தியக் கிழக்கு முதலீட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்த முதலீடுகள் மூலம் சாலைகள், துறைமுகங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், எண்ணெய் தொழில் ஆகிய துறைகளில் சீனா பணத்தை கொட்டியுள்ளது. இதன் மூலம் ஈரானில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு தேவையான உயர்தர உள்கட்டமைப்பு வசதிகளை கொடுத்துள்ளது.
2017-ம் ஆண்டுக்கு பிறகு மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் இரு மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. 2024-ம் ஆண்டில் இந்த வர்த்தகம் 317 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. இது அமெரிக்காவுடன் மத்தியக் கிழக்கு நாடுகள் செய்யும் வர்த்தகத்தை விட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம். அமெரிக்காவுடனான வர்த்தகம் அதே ஆண்டில் 85 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.
சீனா வளைகுடா நாடுகள் உடன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தொழிற்துறை பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இந்த வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஈரான் போர் ஒட்டுமொத்தமாக அனைத்து வர்த்தக கணக்குகளையும், மதிப்பீடுகளையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் சீனாவுக்கு மட்டும் அல்லாமல் வளைகுடா நாடுகளுக்கும் பெரும் பிரச்சனையாக திகழும்.
269 பில்லியன் டாலர் முதலீடும், 317 பில்லியன் டாலர் வர்த்தகமும் சீனாவை இந்தப் பகுதியின் மிக முக்கிய பார்னராக மாற்றியிருக்கும் வேளையில் ஈரான் போர் பெரும் இதன் எதிர்காலத்தை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
-
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
ஈரானுக்கு ரகசிய ஆயுத சப்ளை செய்யும் சீனா.. ஆனா ரூட்டு வேற.. கொந்தளிக்கும் அமெரிக்க உளவுத்துறை! -
ஈரான் மேட்டரில் நட்டாற்றில் விடப்பட்ட டிரம்ப்.. கழன்று கொண்ட பிரிட்டன்! கடைசியில் இப்படி ஆயிடுச்சே! -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
5 மணி நேரம் ரூம் ரூமாக ஓடிய அதிகாரிகள்.. அமெரிக்க தலைவர்களின் ரூமிற்கே வர மறுத்த ஈரான்! பரபர தகவல் -
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! -
ஈரானுக்கு திரும்ப கிடைக்க போகும் மிகப்பெரிய சொத்துக்கள்.. அமெரிக்கா சம்மதித்தது ஏன்? -
நேக்கா 2 கப்பலை வெளியேற்றிய ஈரான்.. ஹார்முஸ்-ல் தவிக்கும் 800 கப்பல்.. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அச்சம்! -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
முதுகில் குத்திய பாகிஸ்தான்.. ஈரானுக்கு எதிராக சவுதி அரேபியா-வில் செய்த வேலை.. முதல் ராணுவ ஆக்ஷன்! -
மொத்தமாக சொதப்பிய டிரம்ப்.. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்விக்கு இந்த 5 விஷயம்தான் காரணம்!













Click it and Unblock the Notifications