ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை!

Subscribe to Oneindia Tamil

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் திடீரென போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் கூடவே இருந்த இஸ்ரேலுக்கும் ஓன்னும் புரியவில்லை.. அதுவும் இந்த முறை அமைதி ஒப்பந்தத்தில் ஈரானுக்கு சாதகமாக பல விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. டிரம்ப்-ன் இத்தகைய மன மாற்றத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் என்ன..?

இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் மூலோபாய எண்ணெய் இருப்பு (Strategic Petroleum Reserve) அதாவது அவசர காலத்தில் அல்லது போர் காலத்தில் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் சேமிப்பு. இந்த சேமிப்பு இருப்பு 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது தான் டிரம்ப்-ன் மனமாற்றத்திற்கு மைய காரணமாக இருந்துள்ளது.

USA Trump Iran War Crude oil US Strategic Petroleum Reserve lowest since 1983 Trump Iran ceasefire reason US oil reserve depletion Iran war Trump hands over Hormuz Strategic Petroleum Reserve crisis US energy shortage forces Iran deal Trump sudden ceasefire SPR Hormuz control to Iran US oil stockpile lowest level Trump Iran agreement 2026 1983 2026

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து இந்த இருப்பு பெரிய அளவில் குறைந்ததால், பொருளாதாரத்தைப் பாதுகாக்க டிரம்ப் அவசர அவசரமாக இந்த முடிவை எடுத்ததாக கருதப்படுகிறது.

இதேவேளையில் ஈரான் உடனான போர் தொர்ந்து நடந்து வருவதாலும், இதற்கு தீர்வு காணப்படாத காரணத்தாலும் எதிர்கட்சியிடம் இருந்தும், நாடாளுமன்றத்திலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது டிரம்ப்-ன் ஆட்சிக்கே பிரச்சனை என்பதால் ஈரானுடன் ராசியாகியுள்ளார் டிரம்ப். பயப்படும் அளவுக்கு அப்படி எண்ணெய் இருப்பு எந்த அளவுக்கு குறைந்துள்ளது..? என்பது தான் தற்போதைய முக்கியமான கேள்வி.

டிரம்ப் ஏன் திடீரென போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டார்?

அமெரிக்காவும் ஈரானும் இடையே எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வழிவகுக்குத்துள்ளது. ஆனால், இந்த அமைதி ஒப்பந்தம் உடனடியாக எண்ணெய் உற்பத்தியை முந்தைய நிலைக்கு கொண்டு வராது என்று எரிசக்தி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் மூலோபாய எண்ணெய் இருப்பு மிகவும் குறைந்துள்ளது என்பதுதான்.

கடந்த வாரம் மட்டும் அமெரிக்காவில் எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதற்காக டிரம்ப் அரசு தனது அவசரகால எண்ணெய் இருப்பிலிருந்து 89 லட்சம் பேரல் எண்ணெயை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தற்போது அமெரிக்காவின் மொத்த மூலோபாய எண்ணெய் இருப்பு (SPR) வெரும் 34.03 கோடி பேரல்களாக குறைந்துள்ளது.

இந்த 34.03 கோடி பேரல்கள் என்பது ரஷ்யா - உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த போது பைடன் காலத்தில் பதிவான ஜூலை 2023 வரலாற்று குறைவான இருப்பு அளவை விட குறைவானது.

இதுமட்டுமா.. இதற்கு முன்பு 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்த இருப்பு அளவீட்டை விடவும் குறைவாக உள்ளது, இது ரொம்ப முக்கியமான காலக்கட்டம். 1983ல் ரொனால்ட் ரீகன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் குட்டியாக இருந்த போது பாதுகாப்பு காரணமாக அவசர கால சேமிப்பை உருவாக்க திட்டமிட்டு அமெரிக்க அரசு முதன்முதலில் எண்ணெய்யை சேமிக்க முடிவு செய்து நிரப்பப்பட்டபோது இருந்த அளவைவிட தற்போது குறைவாக இருக்கிறது.

போரால் ஏற்பட்ட பெரிய இழப்பு

ஈரானுடனான போர் தொடங்கிய பிப்ரவரி மாத இறுதியிலிருந்து, அமெரிக்காவின் மூலோபாய எண்ணெய் இருப்பு 750 லட்சம் பேரல்கள் அல்லது 18 சதவீதம் குறைந்துள்ளது. இந்த இருப்பு, அதிகப்படியான எண்ணெய் விலையால் நுகர்வோர், வணிகங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க டிரம்ப் நிர்வாகம் பயன்படுத்தி வரும் முக்கிய கருவியாக இருந்தது. ஆனால், தொடர் உலகளாவிய மோதல்கள் காரணமாக இந்த சேமிப்பு இருப்பு பெரிய அளவில் குறைத்துவிட்டன.

பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கான வழி

அமெரிக்காவில் எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் பொருளாதார சேதத்தை குறைக்க, டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அவசரகால எண்ணெய் இருப்பை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை விரைவாக திறந்து, எண்ணெய் விநியோகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே தற்போதைய முன்னுரிமையாக மாறியுள்ளது. இதனால் தான், டிரம்ப் ஈரானுடன் விரைவாக போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+