ஹார்முஸ் திறந்தது சந்தோஷம்.. ஆனா Blockade எடுக்க முடியாது.. ஈரானுக்கு செக் வைத்த டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல் லெபான் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் முக்கிய நீர்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக அனைத்து சரக்கு கப்பல்களுக்கு திறக்கப்படுவதாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் ஈரானுக்கு நன்றி தெரிவித்து முதல் பதிவை வெளியிட்டார். இதை தொடர்ந்து டிரம்ப்-ன் 2வது பதிவில் ஈரானுக்கு முக்கியமான அறிவிப்பை விடுத்தார்.

Trump Strait of Hormuz Iran Naval Blockade Strait of Hormuz Open Trump Iran Transaction Hormuz Ceasefire Announcement trump strait of hormuz open iran strait of hormuz announcement trump naval blockade iran strait of hormuz full passage trump iran transaction complete hormuz commercial ships open trump truth social hormuz iran hormuz ceasefire naval blockade remains iran trump welcomes iran announcement strait of hormuz ready for business iran transaction negotiation hormuz blockade until deal done donald trump iran statement strait of hormuz news trump

ஈரான் அறிவித்த முக்கிய முடிவு

ஈரான் அரசு தனது அறிவிப்பில், லெபனானில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் காரணமாக ஹார்முஸ் நீரிணை வணிகக் கப்பல்களுக்கு முழுமையாக திறக்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்து வணிகக் கப்பல்களும் இந்த நீரிணை வழியாக சுதந்திரமாக செல்லலாம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார்.

டிரம்ப் விளக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அறிவிப்பில், ஹார்முஸ் நீரிணையை வணிகத்திற்கும் போக்குவரத்திற்கும் தயாராக உள்ளது என்று தெளிவுபடுத்தினார். ஆனால் ஈரான் துறைமுகங்கள் மீது தற்போது நடைமுறையில் இருக்கும் அமெரிக்க கடற்படையிழ் முடக்கம் முழு வலிமையுடன் தொடரும் என்றும் டிரம்ப் தனது 2வது பதிவில் விளக்கம் கொடுத்தார்.

அமெரிக்க கடற்படை ஈரான் துறைமுகங்களும், ஈரான் நாட்டிற்கு செல்லும், ஈரானில் வெளியேறும் கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற அனைத்து கப்பல்களும் முழு சுதந்திரத்துடன் பயணிக்கலாம்.

மேலும் ஈரானுடன் அமெரிக்கா செய்ய உள்ள ஒப்பந்தம் 100 சதவீதம் முடிவடையும் வரை இந்தத் முடக்கம் நீடிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் மத்தியிலான நிபந்தனை ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இதற்கான தீர்வு காணப்படும் என்றும் டிரம்ப் தனது இரண்டாவது பதிவில் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை

இந்திய நேரப்படி இரவு 8 மணியளவில் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் (futures market) அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 12.16 சதவீதம் குறைந்து 83.14 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 11.71 சதவீதம் குறைந்து 87.75 டாலராக உள்ளது. மேலும் அபுதாபியின் முர்பான் கச்சா எண்ணெய் விலை 11.10 சதவீதம் குறைந்து 90.38 டாலராக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+