"குடும்ப சொத்தில் எனக்கு 50% வேண்டும்.." ரூ.2.43 லட்சம் கோடி டிவிஎஸ் சாம்ராஜ்யத்தில் சொத்து தகராறு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் முக்கிய தொழில் குழுமங்களில் ஒன்றான டிவிஎஸ் குடும்பத்தில் சொத்து பிரச்சனை தற்போது சட்டரீதியாக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் சேர்மேனாக உள்ள வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி வேணு, தங்கள் குடும்பத்தின் சொத்துகளை பிரிக்க வேண்டும் எனவும் தனக்கு சரிபாதி சொத்தை தர வேண்டும் எனவும் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம், இந்தியாவின் மிக பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். இது பைக் தாண்டி பல பிஸ்னஸ்களில் கவனம் செலுத்தி வருகிறது. சுமார் 2.42 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட டிவிஎஸ் குழும்பத்தில் சேர்மேன் வேணு சீனிவாசனின் குடும்பத்தில் பிரச்சனை வெடித்திருந்தது. இந்த விவகாரம் இப்போது சட்டரீதியாக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

TVS Family Property Dispute tvs

நோட்டீஸ்

தங்கள் குடும்ப சொத்தை பிரிக்க வேண்டும் எனவும் அதில் தனக்கு சரிபாதி தர வேண்டும் எனவும் லட்சுமி வேணு தனது தந்தை வேணு சீனிவாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குடும்பத்தின் தலைவராக இருக்கும் வேணு சீனிவாசன், தனது பொறுப்பை நிறைவேற்றி, குடும்ப சொத்துகளைச் சட்டப்படி நியாயமான முறையில் பிரித்து கொடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி பூர்வீகக் குடும்ப சொத்தில் மகன்களுக்கு இருப்பதை போலவே மகள்களுக்கும் சம உரிமை இருப்பதாக லட்சுமி தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இந்த சட்டத்தின் 6வது பிரிவின்படி, மகள்களும் மகன்களை போலவே சொத்து பிரிவினையைக் கோர முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேணு சீனிவாசன்

இந்த பிரச்சினையில் வேணு சீனிவாசன் குடும்பத்தின் சொத்துகள் மட்டுமின்றி, பல நிறுவனங்களில் உள்ள பங்குகளும் இடம் பெற்றுள்ளன. VS Trust மற்றும் பிற ஹோல்டிங் நிறுவனங்கள் மூலம் குடும்பத்தினர் வைத்துள்ள சொத்துகள் இதில் அடங்கும். 2020ஆம் ஆண்டு டிவிஎஸ் குடும்பத்திற்குள் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி, வேணு சீனிவாசன் பிரிவுக்கு டிவிஎஸ் ஹோல்டிங், டிவிஎஸ் மோட்டார்ஸ், டிவிஎஸ் கிரெடிட் சர்வீஸ், சுந்தரம்-கிளேட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், அவையும் இந்த பிரிவினை விவகாரத்தில் வரும்.

சொத்தை பிரிக்க வேண்டும்

2020ஆம் ஆண்டிலேயே சொத்து பிரிவினை நடந்திருந்தால் இப்போது ஏன் மீண்டும் லட்சுமி பிரிவினை கோருகிறார் என்ற கேள்வி வரலாம். 2020ல் ஒட்டுமொத்த டிவிஎஸ் குடும்பத்துக்குள் தான் சொத்து ஏற்பாடு செய்யப்பட்டது.. வேணு சீனிவாசனின் குடும்பத்துக்குள் தனிப்பட்ட சொத்து பிரிவினையாக அது அமையவில்லை என்பதே லட்சுமியின் முக்கிய வாதமாகும்.

அதாவது ஒட்டுமொத்தமாக டிவிஎஸ் குழுமத்தின் சொத்துகள் மட்டுமே 2020ல் பிரிக்கப்பட்டது.. தங்களின் தனிப்பட்ட குடும்ப சொத்துகள் பிரிக்கப்படவில்லை என்றும் அதற்கான நடைமுறை கூட தொடங்கப்படவில்லை எனவும் அவர் கூறுகிறார். குடும்ப நிறுவனங்களை அவர் நிர்வகிப்பதால் மட்டும் அந்த சொத்துகளுக்கு அவருக்கு முழு உரிமை கிடைத்துவிடாது என்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் இதனால் பறிக்கப்பட முடியாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சகோதரருக்கு சாதமாக இருக்கு!

முக்கியமாக குடும்ப சொத்துகளில் இருந்து கிடைக்கும் பலன்கள் மற்றும் உரிமைகள் தனது சகோதரர் சுதர்ஷனுக்கு சாதகமாக குவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் லட்சுமி குற்றம்சாட்டியுள்ளார். குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை ஒருதலைபட்சமான முடிவுகள் அல்லது நிறுவன ரீதியான ஏற்பாடுகள் மூலம் மறுக்க முடியாது என்பதையே அவர் முக்கியமாக சொல்ல வருகிறார்..

தாய் கருத்து

இந்த விவகாரத்தில் லட்சுமியின் தாயும், டிவிஎஸ் குழுமத்தின் முக்கிய நிர்வாகியுமான மல்லிகா சீனிவாசன் தனது மகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். குடும்பத்துக்குள் சுமுகமான தீர்வு காண இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை என தாய் மல்லிகா சீனிவாசன் கூறுகிறார். குடும்ப சொத்தில் மகனுக்கும் மகளுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய மல்லிகா, "ஒரு தாயாக என்னை பொறுத்தவரை மகனும் மகளும் சமமானவர்கள் தான். சுதர்ஷனுக்கு இணையான சட்டப்பூர்வ பங்கு லட்சுமிக்கும் உள்ளது" என்றார்.

இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார். நோட்டீஸ் அனுப்பியுள்ள போதும், குடும்பத்துக்குள் சுமுகமான முறையில் பிரச்சனையை தீர்க்கவே விரும்புவதாக லட்சுமி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+