இனி துபாய்-ஐ ஆளப்போவது யார்..? UAE அரசின் திடீர் அறிவிப்பு.. 2 வருடத்தில் தலைகீழாக மாறப்போகுது!
வளைகுடா நாடுகளில் சக்திவாய்ந்த அதேவேளையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக முதலீட்டு சந்தையும், வர்த்தகத்தையும் கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது அரசு நிர்வாகத்தில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வருகிறது.
துபாயின் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது ட்விட்டர் பதிவில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யான் (MBZ) அவர்களின் உத்தரவின்படி, புதிய அரசு மாடல் (New Government Model) அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஏஜென்டிக் ஏஐ மூலம் அரசு நிர்வாகம்
இந்த புதிய அரசு மாடல் மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசின் 50 சதவீத துறைகள், சேவைகள் மற்றும் செயல்பாடுகளை ஏஜென்டிக் ஏஐ (Agentic AI) மூலம் இயங்கும். ஏஜென்டிக் ஏஐ என்பது சாதாரண செயற்கை நுண்ணறிவு அல்ல. இது தகவல்களை பகுப்பாய்வு செய்து, முடிவுகள் எடுத்து, அவற்றை நிறைவேற்றி, தானாகவே மேம்படுத்தும் திறன் கொண்ட அமைப்பாகும். இது அரசுக்கு ஒரு Executive Partner போல செயல்படும்.
இந்த மாற்றத்தின் மூலம் சேவைகள் வேகமாக வழங்கப்படும், முடிவுகள் விரைவாக எடுக்கப்படும், அரசின் செயல்திறன் அதிகரிக்கும். உலகில் இந்த அளவுக்கு பெரிய அளவில் தானியங்கி அமைப்புகளை அரசு நிர்வாகத்தில் பயன்படுத்தும் முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகமாக இருக்கும் எனவும் ரஷித் அல் மக்தூம் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டு காலக்கெடு
இந்த புதிய அரசு நிர்வாக மாடல் மாற்றத்துக்கு தெளிவான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இரண்டு ஆண்டுகள். இந்த காலகட்டத்தில் அரசின் செயல்பாடுகள் மூன்று அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படும். ஏஐ எவ்வளவு வேகமாக ஏற்றுக்கொள்கிறது, எவ்வளவு தரமான முறையில் செயல்படுத்தப்படுகிறது, மற்றும் அரசு பணிகளை மறுவடிவமைப்பு செய்ய ஏஐ எவ்வளவு திறமையாக பயன்படுத்துகிறது என்பவை அளவுகோல்களாக இருக்கும்.
ஊழியர்களுக்கு ஏஐ பயிற்சி
இந்த மாற்றம் மூலம் மக்களை ஒதுக்கி வைக்காமல், அவர்களை மையப்படுத்தியே செயல்படுத்தப்படும். ஒவ்வொரு அரசு ஊழியரும் ஏஐ தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற பயிற்றுவிக்கப்படுவார்கள். இதன் மூலம் உலகின் மிக வலுவான ஏஐ-டிவென் அரசு அமைப்பை உருவாக்க ஐக்கிய அரபு அமீரகம் இலக்கு வைத்துள்ளது.
இந்த மாபெரும் திட்டத்தை ஐக்கிய அரபு அமிரீகத்தின் துணை அதிபர் மற்றும் துணை பிரதமருமான ஷேக் மன்சூர் பின் சாயத் அவர்களின் மேற்பார்வையில் இந்த செயல்பாடு முழுமையாக கண்காணிக்கப்படும். முகமது அல் கெர்காவி தலைமையில் ஒரு சிறப்பு பணிக்குழு இதை நடைமுறைப்படுத்தும்.
ஏஐ தாக்கம்
உலகம் முழுவதும் வேகமாக மாறி வருகிறது. தொழில்நுட்பம் வியப்பளிக்கும் வரையில் வளர்கிறது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் அடிப்படை கொள்கை மாறவில்லை - குடிமக்கள் தான் இங்கு முதலிடம். இந்த ஏஐ மாற்றத்தின் மூலம் அரசு இன்னும் வேகமாக, மக்களின் தேவைகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில், மேலும் பயனுள்ளதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷித் அல் மக்தூம்-ன் இந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. செயற்கை நுண்ணறிவை அரசு நிர்வாகத்தின் அடிப்படையாக மாற்றும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு அரசு ஏஐ நிர்வாக மாடல்களுக்கு முன்னோடியாக அமையும்.
அமெரிக்கா டீலிங்
அடுத்த முக்கியமான கேள்வி ஐக்கிய அரபு அமீரகம் தனது புது அரசு ஏஐ நிர்வாக மாடல்களுக்கு எந்த ஏஐ தளத்தை பயன்படுத்த போகிறது என்பது தான். ஏஐ பயன்பாட்டில் பல தகவல் கசிவு பிரச்சனை இருப்பதாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆந்திரோபிக்-ன் மைதோஸ் உருவாக்கி வரும் பிரச்சனை ஏஐ துறையில் பெரும் தலைவலியாக மாறியிருக்கும் வேளையில்...
ஐக்கிய அரபு அமீரகம் இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்திற்கு அமெரிக்க நிறுவனங்களின் உதவியை நாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லையெனில் சொந்தமாக ஏஐ மாடலை உருவாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications