கொஞ்சம் மிஸ்ஸானாலும் காலத்திற்கும் கஷ்டப்படணும்! சிபில் ஸ்கோர் ஏன் முக்கியம்? பிரபலம் தந்த விளக்கம்
சென்னை: இப்போது நீங்கள் சாதாரண கிரெடிட் கார்டு வாங்குவதாக இருந்தாலும் சரி, மிக பெரிய லோன் எடுப்பதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றும் கிரெடிட் ஸ்கோர் தான் முக்கியமானதாக இருக்கிறது. இருப்பினும், நம்மில் பலருக்கும் கிரெடிட் ஸ்கோர் குறித்த சரியான புரிதல் இருப்பதில்லை. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ராஜேஷ் இது தொடர்பாக விளக்கியுள்ளார்.
முன்பெல்லாம் கடன் கொடுக்க பல்வேறு விஷயங்களை வைத்து வங்கிகள் ஆய்வு செய்யும். அதாவது அந்த நபரால் கடனை திரும்பக் கட்ட முடியுமா என்பதைக் கண்டுபிடிக்கப் பல விஷயங்களை வைத்துக் கணக்கிடுவார்கள். ஆனால், இப்போது பெரும்பாலும் கிரெடிட் ஸ்கோரை வைத்தே அதைக் கணக்கீடு செய்கிறார்கள்.

சிபில் ஸ்கோர்
சிறிய கிரெடிட் கார்டாக இருந்தாலும் சரி, பல லட்சம் மதிப்பிலான ஹோம் லோனாக இருந்தாலும் சரி, இப்போது எல்லாவற்றுக்கும் கிரெடிட் ஸ்கோர் முக்கியமானதாக இருக்கிறது. இருப்பினும், இப்போதும் கூட பலருக்கும் கிரெடிட் ஸ்கோர் குறித்த சரியான புரிதல் இருப்பதில்லை. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ராஜேஷ் இது தொடர்பாக விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கிரெடிட் ஸ்கோர் என்பது 300-லிருந்து 900 வரை உள்ள மூன்று இலக்க எண். இது உங்கள் கடன் வாங்கும் திறமையையும், சரியாகத் திருப்பிச் செலுத்தும் பழக்கத்தையும் காட்டுகிறது. 700-க்கு மேல் இருந்தால் நல்ல ஸ்கோர் என்று கருதப்படும்.
இலவச ரிப்போர்ட்
இந்தியாவில் நான்கு கிரெடிட் பீரோக்கள் உள்ளன:
- CIBIL (சிபில்)
- Experian
- Equifax
- CRIF High Mark
ஆர்பிஐ விதிப்படி ஒவ்வொரு பீரோவிலிருந்தும் வருடத்துக்கு ஒரு முறை இலவச ரிப்போர்ட் பெறலாம். அவர்களின் வெப்சைட்டில் போய் உங்கள் விவரங்களைக் கொடுத்துப் பெறலாம்.
இரண்டு வகை விசாரணைகள்
Soft Enquiry: நீங்களே உங்கள் ஸ்கோர் பார்ப்பது. இது உங்கள் ஸ்கோரை பாதிக்காது. எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
Hard Enquiry: லோன் அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பித்தால், வங்கி உங்கள் ஸ்கோரை enquire செய்யும். ஒவ்வொரு ஹார்ட் இன்குவரியும் 5-10 புள்ளிகள் குறைக்கலாம். குறுகிய காலத்தில் பல விண்ணப்பங்கள் போட்டால் ஸ்கோர் பாதிக்கும்.
எப்படி கண்டுபிடிப்பது?
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் "Inquiries" பகுதியைப் பாருங்கள். இதில் இருக்கும், தேதி, எந்த வங்கி/ நிறுவனம் விசாரித்தது, என்ன காரணத்துக்காக விசாரிக்கப்பட்டது செய்யப்பட்டது என்பதைக் கவனியுங்கள். அப்போது நீங்கள் விண்ணப்பிக்காத லோன்/கிரெடிட் கார்டு விசாரணைகள், தெரியாத வங்கிகள் அல்லது நிறுவனங்களின் விசாரணைகள், குறுகிய காலத்தில் நிறைய விசாரணைகள், தவறான தகவல்கள் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
தவறு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
உடனே கிரெடிட் பீரோவுக்கு தெரிவியுங்கள்.. CIBIL அல்லது மற்ற பீரோவின் வெப்சைட்டில் "Dispute" ஆப்ஷன் உண்டு. அங்கே விவரங்களைக் கொடுத்து முறையிடுங்கள். அந்த நிறுவனத்துக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.. எந்த வங்கி/நிறுவனம் விசாரித்ததோ, அவர்களுக்குத் தெரிவியுங்கள். பெரிய மோசடி என்று சந்தேகம் என்றால், போலீஸில் புகார் கொடுங்கள்.
என்ன செய்ய வேண்டும்
- EMI, கிரெடிட் கார்ட் பில் - எல்லாம் சரியான தேதிக்குள் கட்ட வேண்டும். இது மிக முக்கியம் (35% பாதிப்பு)..
- கிரெடிட் யூட்டிலைசேஷன் குறைவாக வைத்திருங்கள்.. உங்கள் கிரெடிட் லிமிட்டில் 30%-க்கு கீழ் மட்டும் பயன்படுத்துங்கள்
- புதிய கிரெடிட் கார்ட் அல்லது லோன் கோரி அடிக்கடி விண்ணப்பிக்காதீர்கள்.. தேவைக்கு மட்டும் லோன்/கார்ட் விண்ணப்பியுங்கள்.
- பழைய கணக்குகளை மூட வேண்டாம்.. பழமையான கிரெடிட் ஹிஸ்டரி நல்லது.
- மாதம் ஒருமுறை ரிப்போர்ட் பாருங்கள்.. தவறுகளைச் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதை எல்லாம் செய்தால் நல்ல கிரெடிட் ஸ்கோரை வைக்கலாம். நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் தான் சிறிய கடன் கூட இப்போதெல்லாம் கிடைக்கிறது. இதனால் கவனமுடன் செயல்படுங்கள்!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications