பொதுமக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டாலே விலை பயங்கரமா குறையும்? ஆனந்த் சீனிவாசன் தந்த விளக்கம்
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தில் ஏறி கொண்டு இருக்கிறது. இதுபோல விலை ஏறும் சமயத்தில் எல்லாம் பொதுமக்கள் அனைவரும் சில நாட்கள் தங்கம் வாங்காமல் இருந்தால் விலை குறையும் என்ற ஐடியாவை சொல்வார்கள். உண்மையில் அப்படிப் பொதுமக்கள் வாங்காமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
2 மாதங்கள் சற்று ஓய்வெடுத்த தங்கம் விலை மீண்டும் பறக்க ஆரம்பித்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு வேகமாக உயர்ந்து வருகிறது. பொதுவாக இப்படி உயரும்போதெல்லாம் யாராவது ஒருவர் தங்கம் விலையைக் குறைக்க என்னிடம் ஒரு ஐடியா இருக்கு எனச் சொல்வார்கள். அதாவது பொதுமக்கள் சில காலம் தங்கம் வாங்காமல் இருந்தால் விலை பயங்கரமாகச் சரிந்துவிடும் என்பது அவர்கள் ஐடியா. ஆனால், இது உண்மைதானா என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தனிநபரால் எல்லாம் தங்கம் விலை உயர்வதை எதுவும் செய்ய முடியாது. அமெரிக்காவில் இப்போது கூட சமீபத்தில் வட்டி விகிதத்தைக் குறைத்தார்கள். அங்குத் தேவையில்லாமல் வட்டி விகிதத்தைக் குறைத்தனர். அதற்கு அமெரிக்காவிலேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்தது. ஆனால், அதையும் தாண்டி வட்டி விகிதத்தைக் குறைத்தனர். அந்த வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருந்திருந்தால் கூட தங்கம் விலை இவ்வளவு தூரம் ஏறி இருக்காது.
இப்போதும் கூட அமெரிக்காவில் வட்டி விகிதத்தை உயர்த்தினால் சட்டென தங்கம் விலை குறையும்.. அமெரிக்காவில் டாலர் மதிப்பில் குறையும். இந்தியாவில் ரூபாய் மதிப்பு எப்படி இருக்கிறதோ. அதைப் பொறுத்து இருக்கும். அமெரிக்கா வட்டி விகிதம் ஏற ஏற தங்கத்தின் விலை குறையும். ஆனால் டிரம்ப் வட்டி விகிதத்தைக் குறைக்கவே சொல்கிறார். அப்படி வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை மேலும் உயரவே செய்யும். ஒரு அவுன்ஸ் தங்கம் 4800 டாலர் வரை போகும் என்கிறார்கள். அதாவது இன்னும் 15% உயரும்" என்றார்.
தங்கம் விலை குறையுமா
மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தினால் தங்கம் விலை குறையுமா என்ற கேள்விக்கு அவர், "இப்படி எல்லாம் கிடையாது. நாளைக்கு ஊரை விட்டு ஓடும் சூழல் ஏற்பட்டால் தங்கம் தேவை. இன்று தங்கம் தான் கரன்சியாக இருக்கிறது. சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் டாலர் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. முன்பெல்லாம் அவர்களின் வெளிநாட்டு ரிசர்வ் டாலராக இருக்கும். ஆனால், இப்போது டாலரை குறைத்துத் தங்கத்தை அதிகரிக்கிறார்கள். வெளிநாட்டு வங்கிகளுக்கே தங்கத்தை வாங்க வைக்கும் போது சாதாரண மக்கள் ஏன் வைத்துக் கொள்ளக்கூடாது.
ரிசர்வ் வங்கிகள்
இந்த லாஜிக்படி பார்த்தால் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கக்கூடாது. ஆனால், அவர்கள் வாங்குகிறார்கள். அனைத்து மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கும்போது, ஏன் சாதாரணப் பொதுமக்கள் மட்டும் தங்கத்தை வாங்கக்கூடாது. தங்கம் விலைக்கும் அரசு நிர்வாகத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. எந்தவொரு நாடாக இருந்தாலும் சரி, அரசு முறையாக இருந்தால் தங்கம் விலை கட்டுக்குள் இருக்கும். அரசு முறையாக இல்லை என்றால் தங்கம் விலை கட்டுக்குள் இருக்காது.
மோடி ஆட்சி அமையாமல் இருந்தாலும் தங்கம் விலை ஏறி இருக்கும்.. ஆனால், இந்தளவுக்கு ஏறி இருக்காது. பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கும் பொருளாதாரம் தெரியாதவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான்! பொருளாதாரத்தைச் சரியாக நடத்தப் பொருளாதார மேதை தான் தேவை.
டிரம்ப் + பைடன்
அமெரிக்காவிலும் கூட டிரம்ப் வராமல் இருந்திருந்தால் தங்கம் விலை இந்தளவுக்கு மோசமாக இருந்திருக்காது. அதிலும் பைடன் தான் முதலில் ரஷ்ய டாலரை முடக்கினார். அதுவே எல்லாவற்றுக்கும் காரணம். அமெரிக்காவிலும் பொருளாதாரம் தெரியாதவர்களிடம் ஆட்சி போனால் தங்கத்திற்கு இதுதான் கதி! பைடன் டாலர் முடக்கிய சமயத்திலேயே இது மாபெரும் தவறு என்று ரகுராம் ராஜன் (ex ரிசர்வ் வங்கி கவர்னர்) கட்டுரை எழுதினார். இப்போது அதுதான் நடக்கிறது. அன்று ஏற ஆரம்பித்த தங்கம் அதன் பிறகு ஏறவில்லை" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications