உங்கள் சம்பளம் இனி எவ்வளவு குறையும்.. கிராஜூட்டி, பிஎஃப் இனி எவ்வளவு பிடிப்பார்கள்.. விளக்கம்
சென்னை: இந்தியாவில் பழைய 29 சட்டங்களை நீக்கி, தற்போது 4 புதிய சட்டங்களாக கொண்டுவரப்பட்டுள்ளது. வாராந்திர வேலை நேரம் மாறாமல், ஒரு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் வேலை செய்யும் வாய்ப்பு இந்த சட்டங்கள் வழங்குகிறது. அதேபோல் சம்பளத்தில் புதிய வரையறை உருவாகி உள்ளது. ஏற்கனவே வழங்கப்படும் சம்பளத்தில் மாறுதல்கள் இருக்கும். பிஎப் மற்றும் கிராஜிவிட்டிக்காக அதிக தொகை பிடித்தம் இருக்கும். உங்களின் டேக் ஹோம் சம்பளம் எந்த அளவிற்கு குறையும். அதனை எப்படி அறிந்து கொள்வது என பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவினை அப்படியே பார்ப்போம்.
இந்தியாவின் புதிய தொழிலாளர் சட்டங்கள் - உங்கள் சம்பளம் குறையுமா? முக்கிய மாற்றங்கள்
இந்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 புதிய சட்டங்களாக மாற்றியுள்ளது. இது 40 கோடி ஊழியர்களை பாதிக்கும் மிகப்பெரிய சீர்திருத்தம்.

சம்பளத்தின் புதிய வரையறை
உங்கள் மொத்த சம்பளத்தில் (CTC) குறைந்தபட்சம் 50% அடிப்படை சம்பளமாக (Basic Pay) இருக்க வேண்டும்.
உதாரணம்:
நீங்கள் மாதம் ₹1,00,000 சம்பளம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்:
பழைய முறை:
- அடிப்படை ஊதியம்: ₹30,000 (30%)
- ஹெச்ஆர்ஏ: ₹25,000
- சிறப்புப் படி: ₹25,000
-மற்ற படிகள்: ₹20,000
-மொத்த சம்பளம் : ₹100,000
புதிய முறை:
- அடிப்படை ஊதியம்: ₹50,000 (50% கட்டாயம்)
- ஹெச்ஆர்ஏ: ₹20,000
- சிறப்புப் படி: ₹20,000
- மற்ற படிகள்: ₹10,000
-மொத்த சம்பளம் : ₹100,000
உங்களுக்கு என்ன மாற்றம்?
1. கையில் வரும் சம்பளம் குறையலாம்
காரணம்:
Basic Pay அதிகரிப்பதால் PF பிடித்தம் அதிகரிக்கும்
PF = Basic Pay ல் 12% (நிறுவனம்: 12% of basic minus ₹1,250)
உதாரணம்:
பழைய முறையில்: PF பிடித்தம் = ₹30,000 × 12% = ₹3,600 புதிய முறையில்: PF பிடித்தம் = ₹50,000 × 12% = ₹6,000 மாத வித்தியாசம் = ₹2,400 குறைவு
2. எதிர்கால பலன்கள் அதிகரிக்கும்
நன்மைகள்:
அதிக பிஎஃப் சேமிப்பு
அதிக கிராஜூவிட்டி தொகை
அதிக பென்ஷன்
உதாரணம்:
கிராஜூவிட்டிகணக்கீடு: பழைய: (₹30,000 × 15 × 5) / 26 = ₹86,538
புதிய: (₹50,000 × 15 × 5) / 26 = ₹1,44,230
வித்தியாசம் = ₹57,692 கூடுதல்!
கீழ்கண்ட calculators உங்களுக்கு உபயோகமாக இருக்கும்:
https://skymaninvestments.com/calculators/gratuity
https://skymaninvestments.com/calculators/nps
புதிய உரிமைகள்
1. ஹெல்த் செக் அப்
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச வருடாந்திர பரிசோதனை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை நிறுவனங்களே ஏற்க வேண்டும்.
2. நிரந்தர ஊழியர் பலன்கள்
ஒப்பந்த ஊழியர்களுக்கு (ஒரு வருட ஒப்பந்தம் என்றால் மட்டும்) 1 வருடத்திலேயே கிராஜூவிட்டி கிடைக்கும் (முன்பு 5 வருடம்)
3. வேலை நேரம்
வாரத்திற்கு 48 மணி நேரம் (அதிகபட்சம்)
நாளொன்றுக்கு 8-12 மணி நேரம்
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
1. உங்கள் சம்பள விவரங்களை மீண்டுமொருமுறை சரிபார்க்கவும்
பேசிக் பே எவ்வளவு உள்ளது?
50 சதவீதம் ஆக உள்ளதா?
2. நிதி திட்டமிடலை மாற்றவும்
உதாரணம்: கையில் வரும் சம்பளம் ₹2,400 குறைந்தால்: - மாத செலவு பட்ஜெட்டில் மாற்றம் செய்ய வேண்டும். - SIP தொகையை குறைக்கவும். - அல்லது கூடுதல் வருமானம் ஈட்ட திட்டமிடவும்
3. உங்கள் ஹெச்ஆர் இடம் இந்த கேள்விகளை முன்வைக்கலாம்.
புதிய சம்பள கட்டமைப்பு பற்றி விளக்கம்
Leave encashment விவரங்கள்
ஓவர்டைம் குறித்து தெளிவு பெறுங்கள்
பெரு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் உங்களது HR ஐ உடனே அணுகி கேள்வி கேட்க வேண்டாம். அவர்கள் ஏற்கனவே இந்த வேலையில் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களே இதற்கான clarifications கொடுப்பார்கள். அதுவரை காத்திருக்கவும்.
48 மணி நேர உச்சவரம்பை பின்பற்ற பெரு நிறுவனங்கள் கொஞ்சம் மாறுதல்களை செய்யலாம். ஒரு சில நிறுவனங்களில் தற்போது ஒரு நாளைக்கு 10 மணி நேர வேலை கட்டாயமாக உள்ளது. இதில் சில மாற்றங்கள் வரலாம்.
நீண்ட நோக்கில் பார்த்தால்
நல்ல விஷயங்கள்:
- ஓய்வுக்கால பாதுகாப்பு அதிகரிக்கும்
- சமூக பாதுகாப்பு வலுவாகும்
- வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்
சவால்கள்:
ஆரம்பத்தில் பணப் பற்றாக்குறை
வருமான வரி அதிகரிக்கலாம்
திடீர் மாற்றத்திற்கு பழக நேரம் தேவை
மொத்தத்தில்...
இது ஒரு குறுகிய காலத்திற்கு கடினம், நீண்ட கால அடிப்படையில் நன்மை. முதல் சில மாதங்கள் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்" இந்த மாற்றங்களை நேர்மறையாக பார்த்து, உங்கள் நிதி திட்டமிடலை அதற்கேற்ப மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம்.
கவலைப்பட வேண்டாம். இந்த மாற்றங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். இது உங்களுக்கு மட்டுமே கிடையாது. இதை சரியாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பு உங்கள் நிறுவனத்திற்கே அதிகமாக உள்ளது." இவ்வாறு பொருளதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி கூறியுள்ளார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications