உணவு ஆர்டர் செய்ய மொபைலை எடுத்தால் ஷாக்! 2 மடங்கு உயர்ந்த பிளாட்ஃபார்ம் கட்டணம்! காரணம் இதுதான்
டெல்லி: நமது நாட்டில் உள்ள பிரபல ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ தங்கள் செயலியில் ஆர்டர் செய்வதற்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அதிரடியாக இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளது. இது நெட்டிசன்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது.
முன்பெல்லாம் உணவை பார்சல் வாங்குவதே கடினம்.. ஆனால், உணவு ஆர்டர் செயலி வந்த பிறகு அந்த நிலைமை மொத்தமாக மாறியது. வீட்டில் அமர்ந்தபடியே மொபைலில் 2 கிளிக் செய்தால் போதும் உணவு ஆர்டர் ஆகிவிடும்.

கட்டண உயர்வு: நமது நாட்டில் ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகிய இரு முக்கிய நிறுவனங்கள் உள்ளன. இப்போது பண்டிகை காலம் வரும் நிலையில், திடீரென இரு நிறுவனங்களும் தங்கள் பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. முன்பு இது ரூ 6ஆக இருந்த நிலையில், இப்போது கிட்டதட்ட இரண்டு மடங்கு அதாவது ரூ 10ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிளாட்ஃபார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது.
அதாவது ஜொமேட்டோ நிறுவனம் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியதாகக் கடந்த 2 நாட்களாக தகவல்கள் பரவின. ஜொமேட்டோ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருப்பதால் இது தொடர்பாக டெல்லியில் உள்ள என்எஸ்இ மற்றும் மும்பையில் உள்ள பிஎஸ்இ விளக்கம் கேட்டு இருந்தது. இது உண்மைதானா இல்லை வதந்தியா என்பது குறித்து விளக்கமளிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஜொமேட்டோ அளித்த பதில்: இற்கு ஜொமேட்டோ அளித்த பதிலில் தான் பிளாட்ஃபார்ம் கட்டண உயர்வை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. பிளாட்ஃபார்ம் கட்டண உயர்வு ரூ. 10ஆக உயர்த்தப்பட்டது வதந்தி இல்லை என்றும் பிஸ்னஸ் மாடலை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாகவும் ஜொமேட்டோ தெரிவித்துள்ளது. மேலும், இந்த பிளாட்ஃபார்ம் கட்டணம் நகரைப் பொறுத்து மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜொமேட்டோ நிறுவனம் மேலும் கூறுகையில், "பிளாட்ஃபார்ம் கட்டணத்தில் மாற்றம் கொண்டு வருவது வழக்கமான ஒன்று தான். பண்டிகை காலத்தில் தேவை அதிகரிக்கும் சூழலில், செலவுகளைச் சமாளிக்க இதுபோன்ற கட்டண உயர்வு அவசியம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொமேட்டோ நோடிபிக்கேஷன்: முன்னதாக ஜொமேட்டோ நிறுவனம் தனது யூசர்களுக்கு இது தொடர்பாக நோடிபிக்கேஷன் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில், "ஜொமேட்டோ தொடர்ந்து இயங்குவதற்கு இந்த கட்டணம் உதவுகிறது. பண்டிகைக் காலங்களில் தொடர்ந்து சேவை வழங்கக் கட்டணம் சற்று உயர்த்தப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது டெல்லி உட்பட சில முக்கிய நகரங்களில் மட்டும் பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.6ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜொமேட்டோவை தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனமும் இதேபோல பிளாட்பார்ம் கட்டணத்தை ரூ.10ஆக உயர்த்தியுள்ளது. அதேநேரம் ஸ்விக்கி பட்டியலிடப்பட்ட நிறுவனம் இல்லை என்பதால் இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை..
தற்காலிக கட்டண உயர்வு: மேலும், தீபாவளி காலத்தில் மட்டும் தற்காலிகமாக இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா இல்லை இது நிரந்தரமாக உயர்த்தப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தெளிவான விளக்கங்களும் இல்லை. இந்த பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது ஒவ்வொரு முறையும் உணவு ஆர்டர் செய்யும் போது விதிக்கப்படும். உணவக கட்டணம், டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றுடன் இதுவும் தனியாக வசூலிக்கப்படுகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications