காதலியின் ஆபாச போட்டோவை போர்ன் சைட்டில் போட்ட காதலன்.. ரூ. 42 கோடி நஷ்ட ஈடு தர கோர்ட் உத்தரவு!

Posted By: Jaya chitra
Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: அமெரிக்காவில் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட காதலன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ. 42 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இளம்பெண் ஜேன் டோயே. இவரும் டேவிட் கே என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் கடந்த 2013ம் ஆண்டு பிரிந்தனர்.

california court awards woman in revenge porn lawsuit

காதலி பிரிந்ததால் அவரைப் பழி வாங்க திட்டமிட்டார் டேவிட். அதனைத் தொடர்ந்து அவர்கள் காதலித்தபோது எடுக்கப்பட்ட ஜேனின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் ஆபாச இணையதளத்தில் வெளியிட்டார். இதனால் ஜேன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

ஜேனை தற்கொலை முடிவுக்கு தள்ளி விடும் முயற்சியாகத் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்தார் டேவிட். இதனால் மனமுடைந்த ஜேன், 2014ம் ஆண்டு டேவிட்டிற்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போது பாதிக்கப்பட்ட ஜேனுக்கு, அவரது காதலர் டேவிட் 6.45 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 42 கோடி ஆகும்.

சமீபகாலங்களில் பழி வாங்கும் நடவடிக்கையாக ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் இது மிகவும் முக்கிய வழக்காகக் கருதப்படுகிறது. ஏனெனில், அதிக நஷ்ட ஈடு வழங்க இந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது தான்.

இதற்கு முன்னர், கடந்தாண்டு சீட்டில் பகுதியில் இதே போன்ற வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 60 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தவிட்டது குறிப்பிடத்தக்கது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A California federal district court has awarded a woman, identified in court documents as Jane Doe, who claimed a man named David K. Elam II posted revenge porn of her online $6.45 million in damages.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற