பப்ஜி கேமிற்காக ரூ. 16 லட்சத்தை "ஸ்வாகா" செய்த இளைஞர்.. பெற்றோர் கொடுத்த விசித்திர தண்டனை!
சண்டிகர்: பப்ஜி கேம் விளையாடுவதற்காக 16 லட்சம் ரூபாயை செலவு செய்த பஞ்சாப் இளைஞருக்கு அவரின் பெற்றோர் கொடுத்த வித்தியாசமான சண்டை பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
Recommended Video
பிளேயர் அன்னோன் பேட்டில்கிரவுண்ட் அல்லது பப்ஜி கேம் ( PlayerUnknown's Battleground or PUBG) என்று அழைக்கப்படும் பப்ஜி விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலம். ராணுவ ஆபரேஷன்கள் போல நடக்கும் அதி நவீன மொபைல் கேம் ஆகும் இது.
இந்தியாவில் தற்போது இந்த பப்ஜி கேம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த பப்ஜி தொடர்பாக அவ்வப்போது நிறைய செய்திகள், சர்ச்சைகள் எழுவது வழக்கம்.

என்ன செய்தார்
இந்த நிலையில் பப்ஜி கேம் விளையாடுவதற்காக 16 லட்சம் ரூபாயை பஞ்சாப் இளைஞர் ஒருவர் செலவு செய்து இருக்கிறார். பஞ்சாப்பில் இருக்கும் காரர் பகுதியில் இருக்கும் 17 வயது இளைஞர் இந்த செயலை செய்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக பப்ஜி கேம் விளையாடி வருகிறார். பப்ஜி கேம்மிற்கு இவர் மிக தீவிரமாக அடிமையாகிவிட்டார் என்று கூறுகிறார்கள்.

ஆயுதம் வாங்கினார்
இந்த நிலையில் பப்ஜி கேம் விளையாடுவதற்காக virtual ammunition (செயற்கை குண்டுகள், துப்பாக்கிகள்) எனப்படும் சாதனங்களை வாங்கி உள்ளார். ஆன்லைன் கிளாசுக்கு போன் வேண்டும் என்று கூறிதான் இவர் முதலில் புது போன் வாங்கி உள்ளார். அதில் பப்ஜி கேம் விளையாட தொடங்கி, நாள் முழுக்க அதிலேயே மூழ்கி அப்படியே அடிமை ஆகி உள்ளார்.

செலவு செய்தார்
இந்த நிலையில் அந்த இளைஞரின் அப்பா தனது வங்கி கணக்கின் பேங்க் ஸ்டேட்மெண்டை சோதனை செய்து உள்ளார். அப்போதுதான் தனது மகன் பப்ஜி கேம் விளையாட்டிற்காக 16 லட்சம் ரூபாய் செலவு செய்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 16 லட்சத்தில் 2 லட்சம் ரூபாய் ஓய்வு பெற்று அந்த இளைஞரின் அம்மாவின் பணம் ஆகும். இந்த நிலையில் இதை கண்டுபிடித்த அவரின் பெற்றோர் அவர் மீது கடும் கோபம் அடைந்தனர். பஞ்சாப் இளைஞருக்கு அவரின் பெற்றோர் கொடுத்த வித்தியாசமான சண்டை பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

என்ன தண்டனை
அந்த இளைஞரின் அம்மா வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேறு ஒரு ஊரில் வேலை பார்த்து வருகிறார். அந்த இளைஞரை அவரின் பெற்றோர் மெக்கானிக் கடையில் வேலைக்கு சேர்த்து உள்ளனர். மெக்கானிக் கடையில் வேலை பார்த்தால்தான் வாழ்க்கையின் கஷ்டம் அவனுக்கு தெரியும். 16 லட்சத்தை தண்டமாக செலவு செய்துவிட்டான் என்று அவரின் பெற்றோர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications