சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பணிந்தது அரசு.. 135 நாட்களாக டவரில் ஏறி போராடிய ஆசிரியரின் கோரிக்கை ஏற்பு.. பஞ்சாப்பில்!

135 நாட்களுக்கு பிறகு ஆசிரியர் ஒருவர் போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டார்

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர் ஒருவர் 135 நாட்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்து வந்தார்.. தற்போது அவரது கோரிக்கையை அரசு பரிசீலிப்பதாக சொல்லியதையடுத்து, தன்னுடைய 135 நாட்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார் அந்த ஆசிரியர்.

பஞ்சாப் மாநிலத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் திடீரென மாற்றம் கொண்டு வரப்பட்டது..

அதாவது பணியில் அமர்த்துவதில் இடிடி என்னும் தொடக்க பள்ளி டீச்சர் டிரெயினிங் முடித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்திருந்தது.

உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த தீவிர பிரசாரம்- விவசாயிகள் ராகேஷ் திகாயத் உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த தீவிர பிரசாரம்- விவசாயிகள் ராகேஷ் திகாயத்

 பஞ்சாப் மாநிலம்

பஞ்சாப் மாநிலம்

மேலும், இதை அமல்படுத்துவதற்காகவே, பஞ்சாப் மாநில தொடக்க கல்வி குழு "சி" சேவைகளின் விதிகளில் திருத்தம் மேற்கொண்டு நடைமுறைக்கு வரும் என்றும் அம்மாநில கல்வித் துறை தெரிவித்திருந்தது.. இதுதான் பிரச்சனையாகிவிட்டது.. இதே டீச்சர் டிரெயினிங்கினை முடித்துவிட்டு, ஏற்கனவே வேலையில்லாமல் இருப்பவர்கள் இந்த அறிவிப்பினால் கொந்தளித்து விட்டனர்..

 அரசு அறிவிப்பு

அரசு அறிவிப்பு

அரசின் அறிவிப்பில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தி, ஆசிரியர்கள் கடந்த 6 மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.. மேலும் காலியாக உள்ள 1,200 ஆசிரியர் பணியிடங்களையும் பயிற்சி முடித்த ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்றும், உச்சபட்ச வயது வரம்பை 42 ஆக அதிகரிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

கோரிக்கை

கோரிக்கை

4 மாதங்களுக்கு முன்பு, இந்த போராட்டம் அதிதீவிரமானதையடுத்து, அந்த போராட்டக்காரர்களில் ஒருவரான சுரிந்தர் பால் என்பவர் செல்போன் டவர் ஒன்றில் ஏறி கொண்டார்.. தங்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றும்வரை டவரில் இருந்து கீழிறங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, கடந்த 135 நாட்களாகவே செல்போன் கோபுரத்தின் மீதேறி போராட தொடங்கினார்.

பலவீனம்

பலவீனம்

இந்நிலையில், போராட்டக்காரர்கள் முன்வைத்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.. இதையடுத்து, தொடர்ந்து 135 நாட்களுக்கு பிறகு, செல்போன் டவரில் இருந்து சுரிந்தர் பால் போலீசார் உதவியுடன் பத்திரமாக கீழேயிறக்கப்பட்டார்.. அவர் மிகவும் பலவீனமடைந்து சோர்வுடன், உடல்நலம் குன்றி காணப்பட்டார்.. அவரை உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

English summary
A Pubjab teacher atop tower ends 135 day protest today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X