சொக்க வைக்கும் டிக் டாக் பெண் ஸ்டார்.. சீட் கொடுத்த பாஜக.. ஹரியானாவில் கலகல!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Tik Tok Star Sonali Phogat to contest Haryana Election on BJP ticket

    சண்டிகர்: ஹரியானா சட்டசபைத் தேர்தலில் ஒரு டிக் டாக் பெண் பிரபலம் போட்டியிடுகிறார். இந்தியாவிலேயே டிக் டாக் மூலம் பிரபலமான ஒருவருக்கு அரசியல் கட்சி ஒன்று சீட் தருவது இதுவே முதல் முறை என்கிறார்கள். அந்த வகையில் இவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

    BJP fields TikTok star Sonali Phogat in Haryana assembly election

    அந்த சாதனைக்காரியின் பெயர் சோனாலி பொகத். பாஜக சார்பில் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். அங்கு காங்கிரஸ் சார்பில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர் குல்தீப் பிஷ்னாய்.

    சோனாலி வேட்பாளரானதே ஒரு சுவாரஸ்யம்தான்.. இவருக்கு டிக்டாக்கில் ஏகப்பட்ட ரசிகர்கள். விடாமல் பின்பற்றி வரும் இவர்கள்தான் சோனாலியை தேர்தலில் நிற்குமாறு உசுப்பேத்தி விட்டனர். அத்தோடு நில்லாமல் பாஜகவுக்கும் கோரிக்கைகளை குவிக்க ஆரம்பித்தனர். புதுமை விரும்பியான பாஜக சும்மா இருக்குமா.. இதோ சீட் கொடுத்து விட்டது.

    சோனாலி ஒரு நடிகையும் கூட. சில டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இந்திப் பாடல்கள் மட்டுமல்லாமல் பல மொழிப் பாடல்களுக்கும் இவர் டிக்டாக் செய்துள்ளார். கவர்ச்சியும் இடை இடையே புகுந்து விளையாடுகிறது. இதனால்தான் இவருக்கு நிறைய ரசிகர்களும் உள்ளனர். ஹரியானாவில் அக்டோபர் 21ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

    தற்போது சோனாலியின் ரசிகர்கள் அவருக்கு சீட் கிடைத்ததைக் கொண்டாடி வருகின்றனர். இதற்காக அவரது டிக்டாக் வீடியோக்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். சோனாலியும் உற்சாகமாக தேர்தல் பிரசாரக் களத்தில் குதித்துள்ளார். இவர் நிற்பது காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதால் சோனாலி வெல்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    சோனாலி தேர்தலில் வெல்கிறாரோ இல்லையோ.. மக்களின் மனதை நிறையவே வென்றுள்ளார். இவர் டிக்டாக் செய்த வீடியோக்கள் ஹரியானாவில் செம பாப்புலர். இப்போதும் கூட அவர் தொடர்ந்து டிக்டாக் செய்து கொண்டுதான் உள்ளார். அதேபோல மக்கள் மனதையும் டிக் செய்து வெல்வாரா என்பது ஹாட்டான எதிர்பார்ப்பாக உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+