செம ட்விஸ்ட்.. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக அபார வெற்றி.. சறுக்கிய ஆம் ஆத்மி.. திடீர் திருப்பம்
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது
சண்டிகர்: ஆம் ஆத்மியின் நிலைமை சண்டிகரில் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.. இன்று நடந்த மேயர் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது ஆம் ஆத்மி.. எதிர்பாராத வகையில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது... வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலின் முடிவானது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சண்டிகர் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசம் ஆகும்.. பஞ்சாப் - ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரும்கூட..!
அங்கே இதுவரை காங்கிரஸ், பாஜக என்று மாறி மாறி ஆட்சி செலுத்தியிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான், அங்கு நடந்த 35 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 14 இடங்களைக் கைப்பற்றி முத்திரையை பதித்தது.. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கே பெரும் அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது..

அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தும் மாதிரிதான், சண்டிகர் மக்களின் இந்த மன மாற்றத்துக்கு காரணம் என்று கருதப்பட்டது.. அத்துடன் பாஜக மீதான கோபம், காங்கிரஸ் மீதான அதிருப்தி இரண்டுமே ஆம் ஆத்மிக்கு கை கொடுத்தன.. மேலும், தேர்தல் அறிவிப்புகளையும் பலவாறாக வெளியிட்டு அம்மக்களை ஈர்த்தது ஆம் ஆத்மி.. மேலும், மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, உள்ளூர் பிரச்சினைகளையும் கையில் எடுத்து பேச ஆரம்பித்தது..

தீர்வுகள்
அத்துடன், அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தது. அதனால்தான் பாஜக மேற்கொண்ட வியூகங்கள் எதுவுமே அப்போது செல்லுபடியாகவில்லை.. ஜெய் ஸ்ரீராம், இந்துத்துவா கொள்கை போன்றவையும் கைகொடுக்கவில்லை.. அதேபோல கொரோனா சமயத்தில் ஏற்பட்ட மருத்துவ நெருக்கடிகள் பாஜகவுக்கு தோல்வியையே பெற்று தந்தன..சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு ஆம் ஆத்மி பெற்ற வெற்றியானது, வரப்போகும் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் நம்பப்பட்டது.

சண்டிகர்
இந்நிலையில், மேயர் தேர்தலில் மண்ணை கவ்வியுள்ளது ஆம் ஆத்மி. பாஜகவோ அபார வெற்றி பெற்றுள்ளது.. சண்டிகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன.. இதில் மொத்தமுள்ள 35 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. ஆனால், பாஜக 12 வார்டுகளை மட்டுமே கைப்பற்றியது... காங்கிரஸ் 8 இடங்களிலும், அகாலிதளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

மேயர் தேர்தல்
இதையடுத்து, தொடர்ந்து வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்தார்கள்.. மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.. எனவே, ஆம் ஆத்மி கட்சி சார்பில் அஞ்சு கத்யாலும், பாஜக சார்பில் சரப்ஜித் கவுர் ஆகியோரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.. இவர்கள் 2 பேருமே கடந்த செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.. இதில் 35 எம்சி தொகுதிகளில் 8 இடங்களில் காங்கிரஸ் கைப்பற்றியதால், போட்டியிலிருந்து விலகிவிட்டது.. அத்துடன், வாக்கெடுப்பை புறக்கணிக்கப் போவதாகவும் ஏற்கனவே அறிவித்தும் விட்டது.

கவுன்சிலர்கள்
ஆக, களத்தில் நின்றது பாஜகவும் - ஆம் ஆத்மியும்தான்.. இதில் ஆம் ஆத்மிக்கு 14 கவுன்சிலர்கள் இருப்பதால் எப்படியும் அந்த கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது... ஆனால், இங்குதான் 2 திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன.. காங்கிரஸ் சார்பில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட சண்டிகர் முன்னாள் காங்கிரஸ் துணை தலைவர் தேவிந்தர் பாப்லாவின் மனைவி ஹர்பிரீத் கவுர் பாப்லா, பாஜகவில் இணைந்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, சண்டிகர் நகர மேயரும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்பதால், பாஜக எம்பியான கிரென் கெரின் வாக்கு எண்ணிக்கையானது அதிரடியாக 14 ஆக உயர்ந்துவிட்டது..

வெற்றி
அதாவது ஆம் ஆத்மி, பாஜக என இரு கட்சிகளுக்குமே 14 வாக்குகள் இருந்தன.. இருவருமே சமமாக இருந்ததால் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.. இறுதியில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது.. சரப்ஜித் கவுர் 14 வாக்குகளை பெற்றுவிட்டார்.. ஆம் ஆத்மியின் கத்யால் ஒரு வாக்கு குறைந்து 13 வாக்குகளை பெற்றார்.. ஆம் ஆத்மியின் ஒரு வாக்கு செல்லாததாகவும் அறிவிக்கப்பட்டது.. எனவே, பாஜகவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பாஜக
மாநகராட்சியில் முத்திரை பதித்த ஆம் ஆத்மி, மேயர் தேர்தலில் தோல்வியடைந்தது மிகப்பெரிய திருப்பத்தை சண்டிகரில் ஏற்படுத்தி உள்ளது.. வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜக, காங்கிரசுக்கும் டஃப் தரும் என்று நம்பப்பட்ட ஆம் ஆத்மி, பிப்ரவரி 14-ம் தேதிக்கள், தன்னை எப்படி தயார் செய்து கொண்டு, மீண்டு வர போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

காங்கிரஸ்
அதேசமயம், லட்டு போல கிடைத்துள்ள சான்ஸை, பாஜக எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறது என்பதையும் இனி கவனிக்க வேண்டும்.. இதில் காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்திருந்தால் பாஜக தோற்றிருக்கும் என்றார்கள்.. ஆனால் பஞ்சாப் தேர்தல் எதிர்வரும் நிலையில், ஆம் ஆத்மிக்கு ஆதரவு தந்தால், அந்த கட்சி மீண்டும் வலுப்பெற்றுவிடும் என்பதையும் என்றே கணிக்கப்படுகிறது.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி












Click it and Unblock the Notifications