திடீரென செருப்பை கழட்டி.. அரசு அதிகாரியை வெளுத்த பாஜக ஸ்டார்.. யார்னு தெரியுதா பாருங்க.. ஷாக் வீடியோ
அரசு அதிகாரியை செருப்பால் அடித்துள்ளார் பாஜக பெண் பிரபலம்
சண்டிகர்: டிக்டாக் பிரபலமும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான சோனாலி போகட் அரசு அதிகாரி ஒருவரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சோனாலி பொகத்... ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். நிறைய டிவி ஷோக்கள் செய்துள்ளார். அதனால் வடமாநிலத்தில் இவர் மிகவும் பிரபலம்!
இதை தவிர, டிக் டாக் செய்து பிரபலம் ஆனவர். இவரது டிக்டாக் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.. எதையுமே புதுசாக அணுகும் பாஜக, இவரது பாப்புலாரிட்டியை வைத்து, நடக்க போகும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட சீட் தந்தது.

வியப்பு
எந்தவித அரசியல் பின்புலம் இல்லாத ஒருவருக்கு, வெறும் டிக்டாக் பாப்புலாரிட்டியை வைத்து பாஜக சீட் தந்துள்ளதே என்று பலரும் வியப்புடன் பார்த்தனர்.. எனினம் ஆதம்பூர் தொகுதியில் கிட்டத்தட்ட 30, 000 வாக்குகள் வித்தியாசத்தில்சோனாலி தோற்றுப் போய்விட்டார்.

விவசாயிகள்
இப்போது இவரது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. நேற்று அங்குள்ள விவசாய சந்தையை ஆய்வு செய்ய சோனாலி சென்றிருக்கிறார்.. அவரிடம் புகார் அளித்த விவசாயிகளின் புகார்களோடு வேளாண் உற்பத்தி சந்தை குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கையும் சந்திக்க சென்றார். அங்கு சென்று பேசிக் கொண்டிருந்தபோதுதான் திடீர் வாக்குவாதம் முற்றியுள்ளது.

அதிகாரி
ஒரு கட்டத்தில் அந்த அரசு அதிகாரியை தனது செருப்பால் அடித்தார்... அதிகாரி செருப்பால் அடிப்பது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பற்றி சுல்தான்சிங் சொல்லும்போது, "சோனாலி என்னிடம் வந்து, நான் யாரென்று தெரிகிறதா என்று கேட்டார்.. அதற்கு நான், உங்களை நல்லா தெரியுமே, நீங்கதானே ஆதம்பூர் தேர்தலில் போட்டியிட்டவர் என்று சொன்னேன்.

புகார்கள்
பிறகு விவசாயிகளின் புகார்கள் குறித்த விவரங்களை வாங்கி வைத்திருக்கிறேன், நிச்சயம் அது சம்பந்தமாக உரிய நடவடிக்கையை சீக்கிரமாக எடுப்பேன் என்றும் சொன்னேன். அதற்கு சோனாலி, "ஏன் ஆதம்பூர் தேர்தலில் என்னை எதிர்த்தாய்" என்று கேட்டார்.. அதற்கு நான் "அது அப்போ நடந்தது.. அங்கு நான் குடும்பத்துடன் இப்போது இல்லை.. எப்போதோ நடந்ததை ஏன் இப்போ வந்து இங்கே பேசுகிறீர்கள்? என்றேன். இதுதான் அவருக்கு ஆத்திரமாகிவிட்டது.












Click it and Unblock the Notifications