Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அவ டிரஸை கழட்டி வீடியோ எடுத்து.. இணையத்தில் போடுங்க!" சண்டிகர் பல்கலைக்கழக ஹாஸ்டல் வார்டன் பரபர

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாபில் சண்டிகர் பல்கலைக்கழக வீடியோ லீக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த ஹாஸ்டல் வார்டனின் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

பஞ்சாபில் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஹாஸ்டலில் மாணவிகள் குளிக்கும் வீடியோ இணையத்தில் லீக்கானதாக தகவல் பரவின.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சனிக்கிழமை இரவு முதலே பல நூறு மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

 வீடியோ லீக்

வீடியோ லீக்

முதலில் அங்கு படிக்கும் சில ஆண் மாணவர்களால் இந்தச் சம்பவம் நடந்து இருக்கலாம் எனக் கூறப்பட்டது. இருப்பினும், அதன் பின்னரே சக மாணவி ஒருவரே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. குளியல் அறையில் கேமரா வைத்து மற்ற மாணவிகள் குளிப்பதை அந்த மாணவி வீடியோ எடுத்தாக கூறப்படுகிறது. சிறிய ரக கேமரா மூலம் வீடியோ எடுத்து அவர், அனைத்து மாணவிகளும் குளித்த பின்னர் கடைசியாகச் சென்று கேமாராவை மறைத்து எடுத்துச் சென்றுள்ளார்.

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அதன் பின்னர் சிம்லாவில் இருக்கும் நபருக்கு அனுப்பியதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் மாணவி, சிம்லாவில் இருக்கும் நபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாணவிகள் குளிக்கும் வீடியோ லீக்கானதாக பரவிய தகவலை மறுத்துள்ள பல்கலைக்கழகம், அந்த மாணவி தனது வீடியோவை மட்டுமே தனது காதலனுக்குப் பகிர்ந்ததாகவும் மற்ற மாணவிகள் வீடியோ எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

மறுப்பு

மறுப்பு

மேலும், இந்தச் சம்பவத்தால் அங்குப் படித்து வந்த 7 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் பரவிய நிலையில், அதையும் பல்கலைக்கழக நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. பஞ்சாப் முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர்களும் பல்கலைக்கழகம் கூறியதையே குறிப்பிடுகின்றனர்.

 மாணவிகள்

மாணவிகள்

இருப்பினும், இதை நம்ப மறுக்கும் மாணவிகள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து பல்கலைக்கழகத்திற்குக் காலவரையற்று விடுமுறை அளிக்கப்பட்டது. சுமார் 60 மாணவிகளின் குளியல் வீடியோ லீக் ஆகி உள்ளதாகவும் இதை எதற்காகவோ பல்கலைக்கழகம் மறைக்க முயல்வதாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், ஹாஸ்டலில் இருக்கவே பயமாக இருப்பதால் சொந்த ஊருக்கே கிளம்புவதாகவும் மாணவிகள் தெரிவித்து உள்ளனர்.

 புதிய வீடியோ

புதிய வீடியோ

இந்தச் சூழலில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவியிடம் ஹாஸ்டல் வார்டன் விசாரிக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மாணவியை வார்டன் ஆவேசமாகத் திட்டுகிறார். மேலும், செய்த செயலுக்கு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிப்பதும் அதில் பதிவாகி உள்ளது. ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகும் வார்டன் அங்கிருந்த மற்ற பெண்களிடம், "இவள் (குற்றம் சாட்டப்பட்ட பெண்) டிரஸை கழட்டுங்க.. இதை வீடியோ எடுத்து நெட்டில் போடுங்க" என்று கத்துகிறார்.

 வார்டன்

வார்டன்

இதையெல்லாம் கேட்டுவிட்டு அந்த மாணவி தன்னை மன்னித்துவிடும்படி கெஞ்சுகிறார். இருப்பினும் வார்டன் விடாமல் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். இந்த கேவலமான செயலை எத்தனை காலமாகச் செய்கிறாய் என்றும் இந்த வீடியோக்களை யாருக்கு எடுத்து அனுப்புகிறாய் என்றும் அந்த மாணவியிடம் கேட்கிறார். அத்துடன் இணையத்தில் வேகமாகப் பரவும் அந்த வீடியோ முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+