மாணவியை மிரட்டி "பிளாக்மெயில்!" சண்டிகர் பல்கலைக்கழக பாத்ரூம் லீக்.. அதிர வைக்கும் திடீர் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிக்கும் வீடியோ லீக் ஆன விவகாரத்தில், இப்போது திடீர் திருப்பம் அரங்கேறி உள்ளது.

பஞ்சாப் தலைநகரில் இயங்கி வரும் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை திடீரென நூற்றுக்கணக்கான மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர்..

சண்டிகர் பல்கலைக்கழக ஹாஸ்டலில் உள்ள மாணவிகள் குளிக்கும் வீடியோ இணையத்தில் லீக்கானதாக தகவல் பரவின. இதுவே போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது.

 சண்டிகர் பல்கலைக்கழகம்

சண்டிகர் பல்கலைக்கழகம்

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பைக் கிளப்பியது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். ஆண் மாணவர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அதன் பின்னர் தான் சக மாணவி ஒருவரே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. கேமராவை குளியல் அறையில் வைத்து, அந்த மாணவி மற்றவர்கள் குளிப்பதைப் படம் பிடித்து உள்ளார்.

விசாரணை

விசாரணை

தினமும் இப்படி மற்ற மாணவிகள் குளிப்பதைப் படம் எடுக்கும் அந்த மாணவி, சிம்லாவில் இருக்கும் நபருக்கு அனுப்பி உள்ளார். அவர் இந்த நபரின் காதலன் எனக் கூறப்படுகிறது. இப்படி மொத்தம் சுமார் 60 மாணவிகளின் வீடியோ இணையத்தில் லீக் ஆனதாகத் தகவல் பரவியது. மாணவிகள் போராட்டம் காரணமாக இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்து உள்ளார்.

மறுப்பு

மறுப்பு

இந்த விவகாரத்தில் சில மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் தகவல் பரவியது. இருப்பினும், தற்கொலை முயற்சி தொடர்பான தகவல்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், தாங்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவி தனது வீடியோவை மட்டுமே தனது காதலனுக்குப் பகிர்ந்ததாகவும் மற்ற மாணவிகள் வீடியோ எதுவும் இல்லை என்றும் பல்கலைக்கழக வேந்தர் தெரிவித்து இருந்தார்.

 விடுமுறை

விடுமுறை

இருப்பினும், பல்கலைக்கழகம் கொடுத்த இந்த விளக்கத்தை மாணவிகள் யாரும் நம்பவில்லை. தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த வரும் செப்.24ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து விடுதியில் உள்ள அனைத்து மாணவிகளும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

திருப்பம்

திருப்பம்

இந்தச் சம்பவத்தில் இதுவரை மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வீடியோ எடுத்த மாணவி, அவரது காதலன் என சொல்லப்படும் சிம்லாவை சேர்ந்த 23 வயது இளைஞன் மற்றும் அவரது நண்பர் 31 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில் சண்டிகர் பல்கலைக்கழக விவகாரத்தில் திடீர் திருப்பமாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

 பிளாக்மெயில்

பிளாக்மெயில்

அதாவது வீடியோக்களை எடுத்து தங்களிடம் பகிர வேண்டும் என்று அந்த இளைஞர்கள் மாணவியை பிளாக்மெயில் செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட சன்னி மேத்தா மற்றும் அவரது நண்பர் ரங்கஜ் வர்மா ஆகியோர், மற்ற மாணவிகள் குளிக்கும் வீடியோவை எடுத்துத் தர வேண்டும் என்று அந்த மாணவியை மிரட்டி உள்ளனர். அப்படியில்லை என்றால் தங்களிடம் உள்ள அந்த (வீடியோ எடுத்த) மாணவியின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவோம் என்று அவர்கள் பிளாக் மெயில் செய்ததாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+