சிறுவன் பாக்கெட்டில் "ஆணுறை".. பார்த்து பதறிய தந்தை.. அடி உதை.. கடைசியில் விபரீத விளைவு!

சிறுவன் பாக்கெட்டில் ஆணுறை இருந்ததால் விபரீத விளைவு ஏற்பட்டுவிட்டது

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பிளஸ் 2 படிக்கும் சிறுவன் பாக்கெட்டில் ஆணுறை இருந்தது.. அது அவரது அப்பாவின் கண்ணிலும் பட்டுவிட்டது.. கடைசியில் என்ன ஏதென்று கூட விசாரிக்காமல் சோகத்தில் முடிந்தது சிறுவனின் வாழ்க்கை!!

பஞ்சாப் மாநிலம், அம்ரித்சர் பகுதியை சேர்ந்தவர் அங்கித்... பிளஸ் 2 இப்போதுதான் படித்து முடித்தார்.. சம்பவத்தன்று ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டியுள்ளார்.. அப்போது டிராபிக் போலீசார் இவரை பிடித்து ஃபைன் போட்டுள்ளனர்.. அத்துடன் அவரது பாக்கெட்டை சோதனையிட்டபோது ஆணுறை இருந்ததையும் பார்த்தனர்.

condom: student commits suicide due to polices wrong statement in punjab

உடனே அங்கித்திடம் அட்ரஸ் எங்கே என்று விசாரித்தனர்.. தன் அப்பா கடை வைத்திருக்கிறார் என்று சொன்னதும், அவரிடம் அங்கித்தை போலீசார் அழைத்து சென்றனர்.. உங்க பையன் பாக்கெட்டில் காண்டம் இருந்தது என்று சொல்லி எடுத்து காட்டினர்.

அதை பார்த்ததும் அப்பாவுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.. உடனே போலீசார் முன்னிலையிலேயே மகனை தாறுமாறாக திட்டினார் தந்தை.. மகன் ஏதோ சொல்ல வந்தும், அதையும் முழுசாக காது கொடுத்தும் கேட்கவில்லை.. எல்லார் முன்னாடியும் அப்பா திட்டிவிட்டதால், அவமானம் தாங்காமல் அங்கித் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினர்.. அப்போதுதான் ஒரு கடிதத்தை கண்டெடுத்தனர்.. அதில், "அப்பா, நான் எந்த தப்பும் செய்யவில்லை.. அந்த போலீஸ்காரங்க உங்க கிட்ட பொய் சொன்னாங்க.. நீங்களும் அதை நம்பிட்டீங்க.. கோபப்பட்டு திட்டிட்டீங்க.. அந்த ஆணுறை எங்கிருந்து வந்தது என்றே எனக்கு தெரியாது.. நான் போறேன்.. பாய் அப்பா.. அம்மாவை நல்லபடியாக பார்த்துக்குங்க.. உங்க உடம்பையும் நல்லபடியா பார்த்துக்குங்க" என்று எழுதியிருந்தார்.

இந்த லட்டரை திரும்ப திரும் படித்து பார்த்து கதறினார் அப்பா.. இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் புகார் தந்திருக்கிறார். மகன் மீது அபாண்டமாக பழி சொன்னதாகவும், அபராதமும் போட்டதாகவும் அந்த புகாரில் கூறியிருக்கிறார்.. அது சம்பந்தமாக விசாரணையும் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+