ஹரியானா இழுபறி.. ஆட்சியமைக்க நான் உதவுகிறேன்.. கோபால் கந்தா ரெடி.. பாஜகவுக்குதான் டெலிகேட் பொஷிசன்
சண்டிகர்: சர்ச்சைக்குரிய கோபால் கந்தாவுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து ஆதரவை பெற பாஜக தயாராக இல்லை என தகவல் வெளியாகியுள்ளதால், ஹரியானா அரசியல் சூடிபிடித்துள்ளது.
Recommended Video
ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜகவால் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது. அதேபோல் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களாவது தேவை.
இந்த நிலையில்தான், கோபால் கந்தா பாஜகவுக்கு ஆபத்பாண்டவராக உருவெடுத்தார். ஆனால் அவரது ஆதரவை ஏற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

காங்கிரஸ் அமைச்சர்
கோபால் கந்தா 2012 ஆம் ஆண்டில், காங்கிரசின் பூபிந்தர் சிங் ஹூடா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அவர் தொடங்கிய எம்.டி.எல்.ஆர் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு விமான பணிப்பெண்ணின் தற்கொலைக்கு இவர்தான் காரணம் என அப்போது பெரும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகினார்.
இந்த நிலையில் விமான நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது சேவைகளை நிறுத்தியது. பின்னர் அந்த பணிப் பெண்ணின் தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

தனிக்கட்சி
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அப்போது பாஜக பெரும் போராட்டங்கள் நடத்தியது. இதனால் கோபால் கந்தா, அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. இதையடுத்து, ஹரியானா லோகித் என்ற கட்சி தொடங்கினார் கோபால் கந்தா. இந்த தேர்தலில் எல்லா இடங்களில் போட்டியிட்டாலும்கூட, கோபால் கந்தா மட்டுமே வெற்றி பெற்றார்.

7 சுயேச்சைகள்
ஆனால், இப்போது பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. மனோகர் லால் கட்டார் மறுபடியும் ஆட்சியமைக்க முன்வந்துள்ள நிலையில், சுயேச்சைகள் ஆதரவை தேடி வருகிறார். இந்த நிலையில்தான், கோபால் கந்தா, பாஜகவுக்கு உதவ முன்வந்தார். செல்வாக்கு மிக்க அரசியல்வாதியும், தொழிலதிபருமான கோபால் கந்தா, 7 சுயேச்சைகளை, பாஜக பக்கம் இழுத்துவர தேவைப்படும் நடவடிக்கைகளை துவங்கிவிட்டார். இதற்கு பிரதிபலனாக தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தயக்கம்
இந்த நிகழ்வுகளை பார்த்ததும், முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி கொந்தளித்துவிட்டார். பாஜகவின் நன்மதிப்பு கெட்டுவிட கூடாது என்றால், கோபால் கந்தாவுக்கு அமைச்சரவையில் இடம் தர கூடாது என்று உமா பாரதி ட்வீட் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், கோபால் கந்தாவுக்கு கேபினெட்டில் இடம் கிடையாது என்று மனோகர் லால் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஹரியானா அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications