ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா.. சபாநாயகரும் பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை நாடு முழுக்க 3,126,078 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவில் மட்டும் 55,460 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Coronavirus: Haryana CM and Speaker gets positive

1074 பேர் இன்று மட்டும் ஹரியானாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஹரியானா முதல்வரும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான மனோகர் லால் கட்டார் இன்று கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.

எனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. என்னுடன் பணியாற்றும் நபர்கள், சக கட்சியினர், என்னை சில நாட்களுக்கு முன் சந்தித்த எல்லோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். மருத்துவர்களின் அறிவுரையின் பெயரில் நான் சிகிச்சை எடுத்துக் கொள்ளபோகிறேன் என்று மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

ஹரியானா சட்டசபை சபாநாயகர் கியான் சந்த் குப்தாவிற்கும் இன்றுதான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் அங்கு இரண்டு பாஜக எம்எல்ஏக்களுக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அணில் விஜ் கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+