Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓ அப்டி.. பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்தும், உக்ரைன் அதிபரும் ஒரு விஷயத்தில் ஒன்னுதான்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மானை உக்ரைன் அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கியுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் பெருவாரியான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், அக்கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான் யார் என நெட்டிசன்கள் சல்லடைப்போட

 யார் இந்த பகவந்த் மான்?

யார் இந்த பகவந்த் மான்?

ஆம் ஆத்மி கட்சியில் சேர்வதற்கு முன்பே பஞ்சாபை சேர்ந்த சாமானியர்கள் மத்தியில் பரிட்சையமான முகம் பகவந்த் மான். தொலைக்காட்சி, விழா மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பகவந்த் மான். இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், விளையாட்டு சார்ந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் ஆஸ்தான கலைஞராக உருமாறினார். ஜக்தார் ஜக்கி என்ற இவரது முதல் நகைச்சுவை ஆல்பம் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றது.

 நகைச்சுவையால் ரசிக்கப்பட்ட பகவந்த் மான்:

நகைச்சுவையால் ரசிக்கப்பட்ட பகவந்த் மான்:

தனியார் தொலைக்காட்சியில் ஜுக்னு கெண்டா ஹே என்ற பெயரில் இவர் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சி, ராணா ரன்பீருடன் இணைந்து இவர் நடத்திய ஜுக்னு மஸ்த் மஸ்த் நிகழ்ச்சிகள் பகவந்த் மானை பஞ்சாபின் அனைத்து இல்ல வரவேற்பு கூடங்களுக்கும் அழைத்துச் சென்றன.

டிவி கலைஞர்

டிவி கலைஞர்

2006 ல் இவர் ஜக்கியுடன் சேர்ந்து கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று நோ லைஃப் வித் வைஃப் என்ற பெயரில் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சிகள் உலக புகழை தேடித் தந்தது. 2008 ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பன கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் இந்திய அளவில் பரிட்சயமானவர் ஆனார் பகவந்த் மான்.

 நகைச்சுவை கலைஞர் TO அரசியல்வாதி

நகைச்சுவை கலைஞர் TO அரசியல்வாதி

தனது கல்லூரி பருவத்திலேயே நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வாரிக் குவித்துள்ளார் பகவந்த் மான். சுனாமில் உள்ள ஷஹீத் உத்தம் சிங் அரசுக் கல்லூரியில் உயர்கல்வி பயின்ற அவர், பாட்டியாலாவில் பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அதனை தொடர்ந்து விடா முயற்சியால் நகைச்சுவை உலகின் ஜாம்பவானாக உருவெடுத்த அவர், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் இறங்கினார். பஞ்சாபில் தனக்கு இருந்த செல்வாக்கை கொண்டு பம்பரம் போல் சுழன்று ஆம் ஆத்மியை அன்று வெற்றிபெற செய்திருக்கிறார் பகவந்த் மான்.

Recommended Video

    President Election-ல் பாஜக-வுக்கே சாதகம்..எதிர்க்கட்சிகளின் வியூகம் OUT | Oneindia Tamil
    பகவந்துக்கும் உக்ரைன் அதிபருக்கும் உள்ள ஒற்றுமை

    பகவந்துக்கும் உக்ரைன் அதிபருக்கும் உள்ள ஒற்றுமை

    ரஷ்யா உடனான போர் மூலம் உலக புகழ்பெற்றுள்ள உக்ரைன் அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கியும் தொடக்கத்தில் நகைச்சுவைக் கலைஞராக இருந்தவர்தான். அதன் மூலம் கிடைத்த புகழை கொண்டே உக்ரைனின் அதிபராக பதவியேற்று இன்று வல்லரசான ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் ஆளுமையாக திகழ்கிறார். இவரை போன்றே ஒரு நகைச்சுவைக் கலைஞரான பகவந்த் மான் பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் என்ற தகவலறிந்து நெட்டிசன்கள் இருவரையும் ஒப்பிட்டு மீம்ஸ்களையும், ட்வீட்டுகளையும் அள்ளித் தெளித்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+