"மச்சம்" உடம்பெல்லாம்.. 66 வயசு.. அடுத்த கல்யாணத்துக்கு அருண்லால் ரெடி.. டீச்சர் பேர் "புல் புல்"
அருண்லால் 2வது திருமணம் செய்ய உள்ள தகவல் வேகமாக பரவி வருகிறது
சண்டிகர்: 66 வயதில் இன்னொரு கல்யாணத்துக்கு ரெடியாகிவிட்டார் அருண்லால்.. இதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக போய் கொண்டிருக்கும் செய்தியாகும்.

யார் இந்த அருண்லால்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்தான் அருண்லால்.. கடந்த 1982-ம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார்..
பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் 1955-ம் ஆண்டு பிறந்தவர்.. 1978ஆம் ஆண்டு தேயிலை கம்பெனியில் வேலை பார்ப்பதற்காக கொல்கத்தா வந்தார்.. அப்படியே கிரிக்கெட்டில் ஆர்வம் ஒட்டிக் கொண்டது..

கிரிக்கெட்
அதனால் வேலை பார்த்து கொண்டே கிரிக்கெட் விளையாடி வந்தார்.. இந்திய அணிக்காக 16 டெஸ்ட், 13 ஒருநாள் போட்டிகளில் அருண்லால் விளையாடியிருக்கிறார்.. பிறகு, 1996-ம் ஆண்டு, திடீரென அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்தார்... அந்த ஓய்வை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் வர்ணணையாளராக பணியாற்றினார்...

புற்றுநோய் சிகிச்சை
கடந்த 2019-ம் ஆண்டு பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது... இதனிடையே அதாவது, கடந்த 2016-ம் ஆண்டு இவருக்கு தாடை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.. அப்போதுதான், வர்ணணையில் இருந்து விலகி, புற்றுநோய் சிகிச்சையை மேற்கொண்டு, அந்த கொடிய நோயில் இருந்து ஒருவழியாக மீண்டு வந்தார்.. இப்போதைக்கு பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார்..

சோஷியல் மீடியா
இதெல்லாம் இவரது தொழில்ரீதியான வளர்ச்சிகள், செயல்பாடுகள் என்றாலும், இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள்தான் சோஷியல் மீடியாவில் பரபரத்து வருகிறது... இவரது மனைவி பெயர் ரீனா.. இவரைதான் முதலில் அருண் லால் திருமணம் செய்திருந்தார்.. ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்... இருவரும் முறைப்படி விவாகரத்தும் செய்துவிட்டனர்.

புல் புல்
இதையடுத்து, புல் புல் சாஹா என்ற டீச்சரை பல வருடங்களாகவே காதலித்து வருகிறார் அருண்லால்.. இந்த டீச்சருக்கு 38 வயதாகிறது.. இந்த புல் புல் சாஹாவைதான், வரும் மே 2ம் தேதி திருமணம் செய்து கொள்ள போகிறாராம் அருண்லால்.. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதற்கான நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.. முதல்மனைவி ரீனாவை விவாகரத்து செய்தாலும், ரீனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.. அப்போது கூடவே இருந்து நீண்ட காலமாக கவனித்து வருபவர் அருண் லால்தான். எனினும், தற்போது, தன்னுடைய முதல் மனைவியின் ஒப்புதலைபெற்றே, இந்த இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் அருண்லால்..

காதில் புகைச்சல்
திருமணத்திற்குப் பிறகு, அருண் லால் - புல் புல் தம்பதிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள ரீனாவை சேர்ந்து கவனித்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.. இப்போது அருண்லால் வீடு கல்யாண களைகட்டிவிட்டது.. இவர்களது கல்யாண பத்திரிகைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது... இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள்.. ஆனாலும் 66 வயது புதுமாப்பிள்ளை அருண்லாலை பார்த்து, 90'ஸ் கிட்ஸ்களின் காதுகளில் புகை வந்து கொண்டிருக்கிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications