அடக் கொடுமையே.. நைட் ஷிப்ட்.. ஆண் தொழிலாளியை இரவு முழுவதும் கூட்டாக பலாத்காரம் செய்த 4 பெண்கள்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பேக்டரி தொழிலாளியை 4 பெண்கள் சேர்ந்து கடத்தி அவரை இரவு முழுவதும் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜலந்தரில் உள்ள ஒரு பேக்டரியில் தொழிலாளியாக பணியாற்றும் நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லெதர் காம்ப்ளக்ஸ் சாலையில் 4 பெண்கள் காரில் வந்தனர்.
அவர்கள் காரை நிறுத்தி அந்த தொழிலாளியிடம் முகவரி கேட்டனராம். அவரும் அந்த முகவரி எங்கே இருக்கிறது என பார்ப்பதற்குள் அந்த 4 பெண்களும் சேர்ந்து அவரது முகத்தில் வாசனை திரவியத்தை அடித்தனராம். இதனால் அவர் மயங்கிவிட்டார்.

காரில் 4 பெண்கள்
பின்னர் அந்த நபரை காரில் தூக்கிக் கொண்டு அந்த 4 பெண்களும் ஏதோ ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் பல மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்தவுடன் தான் கட்டப்பட்டிருந்ததும் உடலில் ஆடைகள் இல்லாதிருந்ததும் அந்த தொழிலாளிக்கு தெரியவந்தது. அவரை கட்டி போட்டு ஆடைகளை கழற்றி அந்த 4 பெண்களும் இரவு முழுக்க அவருடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிகிறது.

11 முதல் 12 மணி நேரம்
சுமார் 11 முதல் 12 மணி நேரம் வரை அவர்கள் கஸ்டடியில் இருந்தார் அந்த தொழிலாளி. இதையடுத்து அந்த 4 பெண்களும் அந்த நபரை காரில் அழைத்து கொண்டு அதிகாலை 3 மணியளவில் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் ஆடையில்லாமல் காவல் நிலையத்திற்கு செல்ல முடியாததால் அவர் புகார் கொடுக்காமல் வீட்டுக்குச் சென்றுவிட்டார் வில்லை என தெரிகிறது.

ஊடகங்கள்
இந்த சம்பவம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கூறியதை அடுத்து வெளிச்சத்திற்கு வந்தது. எனினும் அவர் இதுவரை போலீஸில் புகார் அளிக்கவில்லை. அந்த 4 பெண்களுக்கும் 22 முதல் 23 வயது வரை இருக்கும் என அந்த தொழிலாளி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் கிடைக்கப் பெறவில்லை என காவல் நிலைய பொறுப்பாளர் ககன்தீப் சிங் ஷேகான் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து புகார் கூறினால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

4 பெண்கள்
இரவு முழுவதும் அந்த 4 பெண்களும் இவருடன் உறவு கொண்டதால் அவருக்கு மர்ம உறுப்புகளில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் இது போல் ஒரு ஆணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த 4 பெண்களும் போதையில் இருந்தனரா, எதற்காக இது போல் செய்தனர் என்பதெல்லாம் போலீஸில் புகார் கொடுத்தால் மட்டுமே தெரியவரும்.

தென்னாப்பிரிக்கா
கடந்த 2016ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உதவிக்கு வந்த ஒரு ஆணை 3 பெண்கள் கட்டி போட்டு கூட்டாக பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பொதுவாக பெண்களையும் சிறுமிகளையும் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து வரும் நிலையில் ஆண் ஒருவரை பெண்கள் கூட்டாக பலாத்காரம் செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications