ஆப்பிள் ஐபோன் 17 இலவசம்.. 1,000 பேருக்கு கொடுப்பதாக அறிவித்த தொழிலதிபர்! ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப்பை சேர்ந்த தொழிலதிபரும், சமூக வலைதள பிரபலமுமான ராகேஷ் ட்ரெஹான் என்பவர் 1,000 பேருக்கு இலவசமாக ஆப்பிள் ஐபோன் வழங்குவதாக அறிவித்துள்ளார். முதற்கட்டமாக செப்டம்பர் 22ம் தேதி 100 பேருக்கு ஆப்பிள் ஐபோன் வழங்க உள்ளார்.

free-iphone-punjab-businessman-announced-iphone-langar-on-september-22

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர் ராகேஷ் ட்ரெஹான். தொழிலதிபரான இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ளார். இவர் 'Raja D King' என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தான் ராகேஷ் ட்ரெஹான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, அதிக கவனம் பெற்றுள்ளது. அதாவது பொதுமக்களுக்கு இலவசமாக ஐபோன் வழங்க உள்ளதாகவும், இதற்காக வரும் 22 ம் தேதி 'iPhone Langar' நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகேஷ் ட்ரெஹான் வெளியிட்ட வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: ''iPhone Langar' நிகழ்ச்சி
நடத்துவதாக ஆகஸ்ட் மாதமே அறிவித்து இருந்தேன். ஆனால் தேதியை குறிப்பிடவில்லை. தற்போது தேதி முடிவாகி உள்ளது. இந்தியாவில் ஐபோன் 18 விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதனால வரும் 22ம் தேதி 'ஐபோன் லாங்கர்' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு ஐபோன் 17 அல்லது அதற்கு அடுத்த வெர்ஷன் ஐபோன் தான் வழங்கப்படும். ஐபோன் 16 வழங்கப்படாது.

இந்த நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வாட்ஸ்அப் குழு வழியாக
வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு அந்த வாட்ஸ்அப் குழுவில் இணைந்து Jai Mata Di என்று எழுதி அனுப்பினால் மட்டுமே போதும். அதன்பிறகு அவர்களின் பெயர்கள் எழுதி குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஐபோன் வழங்கப்படும்.

இந்த ஐபோன் வழங்கும் விழா சண்டிகர் மற்றும் மொகாலியில் நடைபெற உள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 22ம் தேதி நடக்கும் விழாவில் அடுத்தக்கட்டமாக நிகழ்ச்சி நடத்தப்பட உள்ள 10 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். தற்போது ஐபோன் 17 ரகத்தை சேர்ந்த 100 போன்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன் எண்ணிககையை 1,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சண்டிகரில் 100 ஐபோன்கள் மற்றும் மொகாலியில் 200 ஐபோன்கள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.'' என்று கூறியுள்ளார்.

ராகேஷ் ட்ரெஹானின் இந்த அறிவிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது. இவர் அடிக்கடி மக்களை கவரும் வகையில் பரிசு கூப்பன், ரூபாய்களை மக்களுக்கு வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் Petrol langar என்ற பெயரில் பெட்ரோல் நிலையங்களில் நின்று பொதுமக்களை தேர்வு செய்து இலவசமாக பெட்ரோல் வழங்கினார். அதற்கு முன்பாக சண்டிகரில் உள்ள கோவிலின் முன்பு நின்று பொதுமக்களுக்கு 500 ரூபாய் நோட்டுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+