Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாப்பிள்ளை" பகவந்த் மான்.. டாக்டர் பெண்ணை மணந்தார்.. கெஜ்ரிவால் நேரில் வாழ்த்து.. கலர்புல் பஞ்சாப்

பக்வந்த் மான்னுக்கு இன்று 2வது திருமணம் பஞ்சாப்பில் நடக்க உள்ளது

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானுக்கு, இரண்டாவது திருமணம் இன்று உறவினர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. குர்ப்ரீத் சிங் என்ற டாக்டரை சீக்கிய முறையில் திருமணம் செய்து கொண்டார் பகவந்த் மான். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திருமணத்தில் பங்கேற்று, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இவருக்கு இன்று 2வது திருமணம் நடக்க உள்ளது.. யார் இந்த பகவந்த் மான்? இவரை பற்றின சுருக்கமான பின்னணியை பார்ப்போம்...!

 காமெடி நடிகர்

காமெடி நடிகர்

அரசியலுக்கு வருவதற்கு முன்பு, பகவந்த் மான் ஒரு காமெடி நடிகர் ஆவார்.. ஆனால், பல விமர்சனங்களில் சிக்கியவர்.. சர்ச்சைக்கு பெயர் போனவர்.. போதைக்கு அடிமையானவர்.. குடிகாரர், பொறுப்பில்லாதவர் என்று அந்த மாநில மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். எந்நேரமும் போதையிலேயே இருப்பதாக கூறி, அவரது தள்ளாடும் வீடியோக்களும் வெளியாகின.. இவர் மீது நிறைய நம்பிக்கை வைத்தார் மனைவி இந்தர்ப்ரீத் கவுர்..

 வெறுத்த மனைவி

வெறுத்த மனைவி

இனிமேல் தண்ணி அடிக்க மாட்டேன் என்று தன் அம்மா மீது சத்தியமெல்லாம் செய்தார். ஆனாலும், மதுவை விட முடியவில்லை. ஒருகட்டத்தில் வெறுத்து போனார் மனைவி.. கடந்த 2015-ல் தம்பதி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பகவந்த் மானிடம் இருந்து பிரிந்து அமெரிக்காவில் வசிக்கிறார் இந்தர்ப்ரீத் கவுர்.. பகவந்த் மான் தன்னுடைய அம்மாவுடன் சதோஜ் கிராமத்தில் வசித்து வருகிறார்.

 2 பிள்ளைகள்

2 பிள்ளைகள்

சமீபத்தில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு, அவரது மகன் தில்ஷன் மான், 17 வயது, மகள் சீரத் கவுர் மான் 21 வயது, இருவரும் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்தனர்.. தன்னுடைய முன்னாள் கணவர் பஞ்சாப் முதல்வராவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் இந்தர்ப்ரீத் கவுர்.. அவர் எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும் நல்லா இருக்கணும், அவருக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன் என்று அன்றே உருக வைத்தார் மாஜி மனைவி.

 டாக்டர் பெண்

டாக்டர் பெண்

இந்நிலையில், இன்றைய தினம் பகவந்த் மான் 2வது திருமணம் செய்து கொள்ள போவதாக கடந்த 2 நாட்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.. மணமகள் பெயர் குர்பிரீத் கவுர் ஆகும்... இவர் ஒரு டாக்டர் ஆவார்... சண்டிகரில் இருக்கும் அரசு இல்லத்தில் இன்று எளிய முறையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக சொந்த கிராமத்தில் இருந்து, பகவந்த் மானின் அம்மா மற்றும் நெருங்கிய உறவினர்கள் சண்டிகர் வந்து முதல்வரின் அரசு இல்லத்தில் தங்கி இருந்தார்..

அம்மா

அம்மா

மேலும், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் இந்த வைபவ நிகழ்வில் பங்கேற்கவிருந்ததால், பலத்த பாதுகாப்பு சண்டிகர் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை திருமண நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.. பகவந்த் மானின் இரண்டாவது திருமணம் உறவினர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், இந்த திருமணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.. மணமக்களை நெஞ்சார வாழ்த்தினார்.. மேலும் சில அரசியல் தலைவர்களும் திருமணத்தில் பங்கேற்றனர். மணமக்கள் பகவந்த் மன் - குர்ப்ரீத் கவுர் ஆகியோரின் திருமண வைபோக போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+