கிரிக்கெட், சினிமா.. நெக்ஸ்ட் அரசியல்? ஹர்பஜன் சிங் குறித்து சித்து வெளியிட்ட பூடக போட்டோ!
சண்டீகர்: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு அவர் இணையும் பட்சத்தில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது.
1998 ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமான ஹர்பஜன் சிங் 23 ஆண்டுகள் வரை இந்திய கிரிக்கெட்டில் பயணித்தார். அவரின் இந்த நீண்ட நெடிய பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு வழிகளில் இருந்தும் நான் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டேன்.

தாமதம்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் நான் இருந்ததால்தான் தாமதமாக அறிவிக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் கடினமான முடிவு எடுத்து முன்னேறிச் செல்லும் தருணம் வரும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த முடிவை அறிவிக்க இருந்தேன். நான் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்.

23 ஆண்டு காலம்
23 ஆண்டு கால அழகான நினைவில் நிற்கும் பயணத்தில் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அனைவருக்கும் என் இதயப்பூர்வ நன்றிகள் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் அண்மையில் ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

கிரிக்கெட் வீரர்
இந்த நிலையில் அவர் தனது ஓய்வை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவை நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்து சித்து தனது ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு இன்னொரு மறைமுக செய்தியையும் வெளியிட்டுள்ளார். அதாவது அந்த படத்திற்கு, " படத்தில் சாத்தியக்கூறுகள் நிறைந்துள்ளன. பாஜி என்ற ஒளிரும் நட்சத்திரத்துடன் " என்ற வரிகளை சித்து பயன்படுத்தியுள்ளார்.

ஹர்பஜன் சிங்
யுவராஜ் சிங்கையும் ஹர்பஜன் சிங்கையும் பாஜக தங்கள் பக்கம் இழுத்து கொள்ள முயற்சித்து வந்தது. இதை ஹர்பஜன் சிங் மறுத்தார். இந்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அவ்வாறு இணையும் ஹர்பஜன் சிங் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என தெரிகிறது.

உதவிகள்
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் வெளிப்படையாக சொல்ல போனால் என்ன செய்யலாம் என எனக்கு தெரியவில்லை. எந்த திசையில் செல்வது என்பதை தெரிந்து கொள்ள எனக்கு சில நாட்கள் எடுக்கும். எனது சமூகத்திற்கு நான் என்னால் முடிந்த உதவிகளை செய்ய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி!











Click it and Unblock the Notifications