ஹரியானாவில் ராகுலுக்கு கை மேல் பலன்.. பாஜகவுக்கு பெரிய ஷாக்.. சிஎன்என் நியூஸ் 18 எக்சிட் போல் முடிவு
சண்டிகர்: ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் பாஜகவின் கனவு பலிக்காது என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக முன்னணி ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. சிஎன்என் நியூஸ் 18 நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகளை இங்கே பார்க்கலாம்.
ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் கடந்த 2014-ம் ஆண்டில் 47 இடங்களை வென்ற பாஜக எளிதாக ஆட்சியை பிடித்தது. ஆனால், கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில், 40 தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்தது. பெரும்பான்மைக்கு தேவையான ஒரு சீட் இல்லாததால், 10 தொகுதிகளை வென்ற மாநிலக் கட்சியான ஜேஜேபி-ன் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைத்தது பாஜக.

தற்போது ஹரியானா சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால் அங்கு இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கும் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்துள்ளது.
சி.என்.என் நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி காங்கிரஸ் ஹரியனாவில் ஆட்சி அரியணையை ஏறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம் வருமாறு:-
பாஜக: 24
காங்கிரஸ்: 58
ஆம் ஆத்மி: 0
ஜேஜேபி+: 2
ஐ.என்.எல்.டி: 2
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் நாடுமுழுவதும் இந்த தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜக, ஹரியானாவில் தோல்வியை தழுவும் என்றே சொல்லியிருப்பதால் அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு இருந்தனர்.
விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டனர். ராகுலின் இந்த பிரசாரத்திற்கு கை மேல் பலன் கிடைக்கும் என்பதையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள். அதேவேளையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் அடி விழும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. எது எப்படியோ இன்னும் 3 நாட்களில் தேர்தல் முடிவுகள் அனைத்திற்கும் விடை கொடுத்துவிடும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications