9.20 மணிக்கு காங்கிரஸ்.. 9.30க்கு டிரா.. 9.45க்கு பாஜக! ஹரியானாவில் ட்விஸ்டோ ட்விஸ்ட்! என்ன காரணம்?
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் முடிவுகள் மாறி மாறி வர தொடங்கி உள்ளன. ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காங்கிரஸ் 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காலை முதல் முன்னிலை வகித்த காங்கிரஸ் தற்போது பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் பாஜக முன்னிலையை சந்தித்து உள்ளது. அங்கே தேர்தல் முடிவுகள் மாறி மாறி வருகின்றன.
இங்கே மாறி மாறி முடிவுகள் வர தொடங்கி உள்ளன. நேர வாரியாக இங்கே முடிவுகள் எப்படி வருகின்றன என்று பார்க்கலாம்.

8 மணிக்கு: காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை, பாஜக 0 இடத்தில் முன்னிலை
8.15 மணிக்கு: காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலை, பாஜக 1 இடத்தில் முன்னிலை
8.30 மணிக்கு: காங்கிரஸ் 28 இடங்களில் முன்னிலை, பாஜக 5 இடத்தில் முன்னிலை
8.45 மணிக்கு: காங்கிரஸ் 38 இடங்களில் முன்னிலை, பாஜக 13 இடத்தில் முன்னிலை
8.50 மணிக்கு: காங்கிரஸ் 48 இடங்களில் முன்னிலை, பாஜக 24 இடத்தில் முன்னிலை
9 மணிக்கு: காங்கிரஸ் 55 இடங்களில் முன்னிலை, பாஜக 30 இடத்தில் முன்னிலை - தபால் வாக்குகள் ஓவர்
9.15 மணிக்கு: காங்கிரஸ் 57 இடங்களில் முன்னிலை, பாஜக 34 இடத்தில் முன்னிலை வாக்குப்பதிவு எந்திரம் தொடக்கம்
9.20 மணிக்கு: காங்கிரஸ் 47 இடங்களில் முன்னிலை, பாஜக 39 இடத்தில் முன்னிலை
9.30 மணிக்கு: காங்கிரஸ் 41 இடங்களில் முன்னிலை, பாஜக 40 இடத்தில் முன்னிலை
9.40 மணிக்கு: காங்கிரஸ் 37 இடங்களில் முன்னிலை, பாஜக 46 இடத்தில் முன்னிலை
10 மணிக்கு: காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை, பாஜக 48 இடத்தில் முன்னிலை
என்ன காரணம்?: கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையே இடைவெளி 500-700 வாக்குகள் மட்டுமே உள்ளன. இதுதான் அங்கே தேர்தல் முடிவுகள் மாறி மாறி வர காரணம்.
ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கே மெஜாரிட்டி பெற 45 இடங்கள் தேவை.
தேர்தல் முடிவுகள்: அங்கே கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்
பாஜக - 89 இடங்களில் போட்டி
இந்தியா கூட்டணி - காங்கிரஸ் 89 இடங்களில் போட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்தில் போட்டி
ஜேஜேபி - ஏஎஸ்பி(கேஆர்) கூட்டணி: ஜனநாயக ஜனதா கட்சி 66 இடங்களில் போட்டி, ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) 12 இடங்களில் போட்டி
ஆம் ஆத்மி - 88 இடங்களில் போட்டி
ஹரியானா தேர்தலில் 101 பெண்கள் மற்றும் 464 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கிட்டத்தட்ட 68 சதவிகித வாக்குகள் வரை இந்த தேர்தலில் பதிவாகி உள்ளன.
முந்தைய தேர்தல் விவரம்: கடந்த 2019 தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சியின் கூட்டணி அமைத்து மாநில அரசாங்கத்தை அமைத்தது, அப்போது மனோகர் லால் கட்டார் முதலமைச்சரானார். ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க மெஜரிட்டி பெற 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications