ஆட்டம் ஆரம்பித்தது.. ஹரியானாவில் தொடங்கிய ரெசார்ட் அரசியல்.. டெல்லி பறந்த காங். வேட்பாளர்கள்!
ஹரியானாவில் முன்னணியில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் எல்லோரும் தற்போது காங்கிரஸ் கட்சியால் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
சண்டிகர்: ஹரியானாவில் முன்னணியில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் எல்லோரும் தற்போது காங்கிரஸ் கட்சியால் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 39 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 32 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மை பெற 46 இடங்கள் தேவை.
இதனால் அங்கு தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்புள்ளது. சிறிய கட்சியான ஜன்நாயக் ஜனதா பார்ட்டி (11 பேர் முன்னணி) அங்கு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது.

ஹரியானா எப்படி
இந்த நிலையில் ஹரியானாவில் குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதால் தங்கள் வேட்பாளர்களை எல்லாம் பாதுகாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 35 பேர் வரை தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. இதில் 32 பேர் உறுதியாக வெற்றிபெற வாய்ப்புள்ளது.

பாஜக கட்சி
பாஜக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், காங்கிரஸ் எம்எல்ஏக்களை அக்கட்சி வாங்க முயற்சிக்க வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. எம்எல்ஏக்கள் சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு கட்சி மாறவும் வாய்ப்புள்ளது. இது போன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தங்களது வேட்பாளர்களை டெல்லி வர சொல்லி இருக்கிறது.

மோசமான நிலை
ஹரியானாவில் உள்ள வேட்பாளர்கள் அங்கிருந்து டெல்லி சென்று, பின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் கண்காணிப்பில் ரெசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட உள்ளனர். இதற்காக டெல்லியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கிங் மேக்கர்ஸ்
அதேபோல் ஜன்நாயக் ஜனதா பார்ட்டியை சேர்ந்த 11 வேட்பாளர்கள் ஹரியானாவில் முன்னிலையில் உள்ளனர். இவர்களும் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளதால் இவர்களையும் ஜேஜேபி கட்சித் தலைவர் துஷ்யந்த் ரெசார்ட்டில் தங்க வைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications