கடைசியில் இவருக்கு போய் தோல்வியா? ஒரே வீடியோவில் வைரலான வேட்பாளருக்கு பெரும் ஏமாற்றம்!
இணையம் முழுக்க ஒரே வீடியோ மூலம் வைரலான பாஜக வேட்பாளர் பாக்சிஷ் சிங் தான் போட்டியிட்ட அஸந்த் தொகுதியில் தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.
Recommended Video
சண்டிகர்: இணையம் முழுக்க ஒரே வீடியோ மூலம் வைரலான பாஜக வேட்பாளர் பாக்சிஷ் சிங் தான் போட்டியிட்ட அஸந்த் தொகுதியில் தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.
ஹரியானா தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. பாஜக கூட்டணி ஹரியானாவில் 39 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மை பெற 46 இடங்களில் வெற்றிபெற வேண்டும். காங்கிரஸ் 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் பாஜகவின் பிரபல வேட்பாளர் பாக்சிஷ் சிங் பின்னடைவை சந்தித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாக்சிஷ் சிங் தனது பேச்சில், ஒரு ஐந்து நிமிடம் தவறு செய்து ஐந்து வருடத்தை இழக்க போகிறீர்களா? நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை எங்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் யார்
ஆமாம் நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை பிரதமர் மோடி கவனித்துக் கொண்டு இருக்கிறார். அவர் அனைத்தையும் கூர்மையாக பார்த்துக் கொண்டு இருக்கிறார். நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்கவே கூடாது.

பாஜக மட்டும்
நேரடியாக பாஜகவிற்கு மட்டுமே நீங்கள் வாக்களிக்க வேண்டும். நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும் தாமரைக்குத்தான் வாக்கு செல்லும். நாங்கள் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தை அப்படித்தான் மாற்றி வைத்து இருக்கிறோம், என்று பாக்சிஷ் சிங் குறிப்பிட்டு இருந்தார்.

இணையத்தில் எப்படி
இந்த நிலையில் இணையத்தில் இவருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர். பாஜக வேட்பாளர் ஒருவர் இப்படி சொல்ல கூடாது. தேர்தல் மீது இருக்கும் நம்பிக்கையே இதனால் போய்விடுகிறது என்று பலர் இணையத்தில் கடுமையான விமர்சனம் வைத்திருந்தனர்.
|
என்ன விளக்கம்
இதையடுத்து தேர்தல் ஆணையம் பாக்சிஷ் சிங்கிடம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கூறியது. அவருக்கும், மாநில பாஜகவிற்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று பாக்சிஷ் சிங் விளக்கம் அளித்தார்.

அட மோசம்
இந்த நிலையில் தற்போது பாக்சிஷ் சிங் தன்னுடைய ஆஸந்த் தொகுதியில் 23000 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஷாம்சேர் சிங் இங்கு முன்னிலை வகிக்கிறார். பகுஜன் சமாஜ் இரண்டாவது இடத்தில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றுவோம் என்று கூறியவரே தோல்வி அடைந்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications