கொஞ்சம் கோமியம்.. கொஞ்சம் பசுஞ்சாணி.. லபக்னெ வாயில் போட்டு.. டெமோ காட்டி திகிலை கிளப்பும் டாக்டர்

டாக்டர் ஒருவர் கோமியம் குடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: மாட்டு கோமியமும், பசுஞ்சாணமும் உடல்நலத்திற்கு நல்லது என்று ஹரியானா டாக்டர் வலியுறுத்தி வருகிறார்.

மாட்டு சாணி சாப்பிடுவதும், கோமியம் குடிப்பதும் ஏற்கனவே வடமாநிலங்களில் இயல்பாக உள்ள பழக்கவழக்கம்தான்.. இதை பற்றி நிறைய வடமாநில தலைவர்களே பேசியிருக்கிறார்கள்..

தினமும் தான் கோமியம் குடித்து வருவதாகவும், அதனால்தான் தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் பாஜக எம்பியான பிரக்யா தாக்கூர் சொல்லி உள்ளார்..

 முக்கியத்துவம்

முக்கியத்துவம்


அதேபோல, "பசுவின் பாலில் தங்கம் உள்ளது.. பசுவின் முக்கியத்துவம் யாருக்கும் தெரியவதில்லை என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருந்தார். சமீபத்தில் கூட மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பேசும்போது, "மாட்டு சாணத்தையும், கோமியத்தையும் வைத்து நமது மாநிலத்தின் பொருளாதாரத்தையே உயர்த்தலாம். அவற்றை சரியான வகையில் மார்க்கெட்டிங் செய்தாலே போதும் என்று பேசியிருந்தார்.

 கொட்டகை

கொட்டகை

இந்நிலையில்தான் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகிறது.. மாட்டுக் கொட்டகையில் ஒருவர் கோமியத்தை எடுத்து மடக் மடக் என குடிக்கிறார்.. அங்கேயே கீழே சாணி கிடக்கிறது.. அதை எடுத்து லட்டு மாதிரி லபக்கென வாயில் போட்டு ருசித்து சாப்பிடுகிறார்..இதையெல்லாம் செய்பவர் ஒரு டாக்டர்.. இந்த வீடியோவை பார்த்துதான் பலரும் அதிர்ந்து போய் கிடக்கின்றனர்.

சாணம்

சாணம்

ஹரியானாவைச் சேர்ந்தவர் அந்த டாக்டர்.. பெயர் மனோஜ் மிட்டல்... ஹரியானா மாநிலத்தின் கர்னால் பகுதியை சேர்ந்தவர்... மாட்டு கோமியமும், சாணமும் உடம்புக்கு நல்லது என்பதை புரிய வைப்பதற்காகவே, நேரடியாக மாட்டுக் கொட்டகைக்கு சென்று செயல்முறை விளக்கத்தில் ஈடுபட்டுள்ளார்... இப்படி இவைகளை சாப்பிடுவதால் மனம், ஆத்மா சுத்தமாகுமாம். அந்த கோமியத்தில் தங்கமும் இருக்கிறதாம்...!

கர்ப்பிணி

கர்ப்பிணி

இவரது அம்மா எப்போது விரதம் இருந்தாலும், சாணியை மட்டும் சாப்பிட்டுவிட்டு, கோமியம் குடித்து அந்த விரதத்தை முடித்து கொள்வாராம்.. இவரும் அதையே ஃபாலோ பண்ணி வருகிறாராம்... அதேபோல, கர்ப்பிணி பெண்களுக்கு நார்மல் டெலிவரி ஆக வேண்டுமானால், தினமும் சாணியை சாப்பிட்டு வர வேண்டுமாம். அப்படி சாப்பிட்டால் சிசேரியேன் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது என்கிறார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஒரு இடத்தில் நிற்காமல் துறுதுறுவென இங்குமங்கும் ஓடியாடி கோமியம் குடிக்கிறார்.. சாணி சாப்பிடும்போது படுகேஷூவலாக அவரது முகம் உள்ளது.. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.. இதை பார்த்த இணையவாசிகளும், "இந்திய மெடிக்கல் கவுன்சில் உடனே இந்த வீடியோவை பார்க்க வேண்டும்.. இவரது டாக்டர் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும்... யாருக்குமே இவர் இனிமேல் மருத்துவம் பார்க்க கூடாது.. " என்று பதிவிட்டு வருகின்றனர். இதைவிட முக்கியமான ஹைலைட் என்னவென்றால், இந்த டாக்டர் ஒரு குழந்தைகள் நல மருத்துவராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+