Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல்லாயிரம் பேர்.. விஸ்வரூபம் எடுக்கும் கர்னல் போராட்டம்.. பஞ்சாப், உ.பியிலிருந்து குவிந்த விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: இந்திய விவசாய போராட்டத்தின் புதிய முகமாக கர்னல் போராட்டம் உருவெடுத்து இருக்கிறது. பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் இந்த போராட்டத்தில் குவிந்து வருகிறார்கள்.

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் மக்கள் தீவிரமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்டுள்ள 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுக்க தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கடந்த வருடம் நவம்பர் 26ம் தேதி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கினார்கள். நாடு முழுக்க உள்ள பல்வேறு சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்பின் அண்டை மாவட்டங்களுக்கு போராட்டம் பரவியது. முக்கியமாக ஹரியானா எல்லை பகுதியில் விவசாயிகள் சாலை தடுப்புகளை அமைத்து அங்கேயே தங்கி உள்ளனர்.

போராட்டம்

போராட்டம்


இந்த விவசாய போராட்டத்தில் டெல்லி எல்லை பகுதியை தாண்டி தற்போது புதிய அடையாளமாக ஹரியானா மாநிலத்தின் கர்னல் பகுதி மாறியுள்ளது. இங்கு கடந்த இரண்டு வாரமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி இங்கு நடந்த விவசாயிகள் போராட்டம் நாடு முழுக்க கவனம் பெற்றது. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் விவசாய சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து கர்னல் பகுதியில் உள்ள சிறிய தலைமை செயலகத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். தலைமை செயலக ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் நடத்தினார்கள்.

யார் எல்லாம்?

யார் எல்லாம்?

நாடு முழுக்க பல்வேறு விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டது. சம்யுக்த் கிஷான் மோர்ச்சா அமைப்பின் ராகேஷ் திகாய்த் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள், யோகேந்திர யாதவ் போன்ற செயல்பாட்டாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி கலந்து கொண்ட போராட்டத்தில் மத்திய அரசுக்கும், ஹரியானா மாநில பாஜக அரசுக்கும் எதிராக விவசாயிகள் கோஷம் எழுப்பினார்கள். அதோடு அங்கு உள்ள சிறிய தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

பேச்சுவார்த்தை மோதல்

பேச்சுவார்த்தை மோதல்

ஆனால் இங்கு விவசாயிகள் மீது போலீசார் சரமாரி தாக்குதல் நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகளை கடுமையாக தாக்கி கைது செய்தனர். பல விவசாயிகள் ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் துடித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்கா அங்கு விவசாயிகள் மண்டையை உடைக்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ஆயுஷ் சின்கா டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.

காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ் கோரிக்கை

இந்த போராட்டத்தில் விவசாயிகள் 30க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இதில் ஒருவர் பலியாகிவிட்டதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்தது. ஆனால் மாநில நிர்வாகம் இதை மறுத்தது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்தியது, விவசாயிகளை தாக்கி காயம் ஏற்படுத்தியது போன்ற காரணங்களுக்காக முதல்வர் மனோகர் லால் கட்டார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஹரியானாவில் கோரிக்கை வைத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் இந்த கலவரத்தை தொடர்ந்து புதிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

அங்கு இன்று சிறிய தலைமைச்செயலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் கர்னல் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தெளிக்கும் எந்திரங்கள், கண்ணீர் புகை குண்டுகள் இங்கே குவிக்கப்பட்டுள்ளது. அதோடு இங்கு போன் சேவை, இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. இன்று இரவு வரை போன் சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

முற்றுகை

முற்றுகை

இங்கு விவசாயிகள் மேலும் கூடி வருவதால் பெரிய அளவில் முற்றுகை போராட்டம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருகில் இருக்கும் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் இங்கே கூட தொடங்கி உள்ளனர். பஞ்சாப்பில் இருக்கும் சீக்கிய அமைப்புகள் இங்கு பெரிய அளவில் கூடி விவசாய போராட்டங்களை செய்ய உள்ளது. பல்வேறு சீக்கிய அமைப்புகள் ஏற்கனவே இங்கே போராட்டம் செய்ய வந்துவிட்டது. அதோடு உத்தர பிரதேச விவசாயிகளும் இங்கு போராட்டத்தில் கலந்து கொள்ள கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.

கூடுதல் பலம்

கூடுதல் பலம்

உத்தர பிரதேச, பஞ்சாப் விவசாயிகள் இப்படி அதிக அளவில் குவிவது கர்னல் போராட்டத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த போராட்டத்தை புதிய தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இந்திய விவசாய போராட்டத்தின் புதிய முகமாக கர்னல் போராட்டம் உருவெடுத்து இருக்கிறது. தற்போது அங்கு பல்லாயிரம் பேர் கூடி உள்ள நிலையில் வரும் நாட்களில் இன்னும் பல ஆயிரக்கணக்கில் இங்கு விவசாயிகள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+