Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக vs காங்கிரஸ்.. குறுக்கே புகுந்த சுயேச்சைகள்.. ஷாக் தோல்விக்கு இதுவும் ஒரு மேஜர் காரணம்.!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: இன்றைய தினம் ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், இதில் முதலில் காங்கிரஸ் பல தொகுதிகளில் முன்னிலையில் இருந்தாலும் அதன் பிறகு நிலைமை மொத்தமாக மாறியது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் சோகத்தில் உள்ளனர். இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.

ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றி ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

haryana assembly election results 2024 2024 haryana assembly election 2024 haryana election 2024 2024

காங்கிரஸ்: ஏனென்றால் இதற்கு முன்பு வரை பாஜகவைத் தோற்கடிக்கக் காங்கிரஸ் கட்சியால் முடியாது. பிராந்திய கட்சிகளே பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று பலரும் சொல்லி வந்தார்கள். மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இதை வைத்து பிரச்சாரம் கூட நடந்தது. ஆனால், இது உண்மை இல்லை.. பாஜகவை வீழ்த்தும் வலிமை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது என்பதைக் காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன் ஹரியானா தேர்தலைக் காங்கிரஸ் எதிர்கொண்டது. ஹரியானாவில் காங்கிரஸுக்கு என்ன தப்பாகிப் போனது. என்பதற்கு முன்பு பழைய டேட்டாவை பார்ப்போம்.

காங்கிரஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றிய முக்கிய மாநிலம் என்றால் அது கர்நாடகா தான். . கடந்த 2023 இறுதியில் நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 சீட்களில் 135ஐ காங்கிரஸ் அப்படியே தட்டி தூக்கியது. ஆளும் கட்சியாகப் போட்டியிட்ட பாஜகவால் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பெரிதாக எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் காங்கிரஸ் மற்றும் பாஜக களமிறங்கிய நிலையில், இதில் காங்கிரஸ் வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

தொடக்கம் இதுதான்: கர்நாடக தேர்தல் முடிவுகள் கொடுத்த உற்சாகத்துடன் தான் காங்கிரஸ் லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸால் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க முடியவில்லை என்றாலும், பாஜகவுக்கு ஒரு பயத்தைக் காட்டினார்கள் என்பதே உண்மை... 300 சீட் என்ற புழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜகவால் தனிப்பெரும்பான்மை கூடப் பெற முடியாமல் போனது.

லோக்சபா தேர்தல் முடிவுகள்: லோக்சபா தேர்தல் முடிவுகளில் மற்றொரு விஷயத்தையும் நாம் கவனித்தே ஆக வேண்டும். அதாவது கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே 370 தொகுதிகளில் நேரடி போட்டி இருந்தது. அதில் 36இல் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதாவது ஸ்டிரைக் ரேட் வெறும் 9.7%. 2019இல் 374 தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியிட்ட நிலையில், 31ஐ மட்டுமே காங்கிரஸால் வெல்ல முடிந்தது. ஸ்டிரைக் ரேட் வெறும் 8.3%.

அதேநேரம் 2024 லோக்சபா தேர்தலில் 286 இடங்களில் இரு கட்சிகளும் போட்டியிட்ட நிலையில், அதில் 83 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. அதாவது ஸ்டிரைக் ரேட் 29%ஆக அதிகரித்தது. குறிப்பாக ஹரியானா மாநிலத்தில் இரு தரப்புக்கும் இடையே நேரடியாகப் போட்டி நிலவிய நிலையில், பாஜக ஸ்டிரைக் ரேட் 44% ஆகக் குறைந்தது. காங்கிரஸ் ஸ்டிரைக் ரேட் 56%ஆக இருந்தது.

தொடரும் டிரெண்ட்: அதே டிரெண்ட் ஹரியானாவில் கொண்டு வரலாம் என்ற முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கியது. இந்த முறை இரு தரப்பும் தனித்தே போட்டியிட்டது. காங்கிரஸ் ஒரு சீட்டை மட்டும் இடதுசாரிகளுக்கு ஒதுக்கி இருந்தது. தொடக்கத்தில் காங்கிரஸ் பல தொகுதிகளில் முன்னிலையில் இருந்தாலும் பிறகு பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெற்றுவிட்டது.

இதில் காங்கிரஸ் தோல்விக்குச் சுயேச்சை வேட்பாளர்கள் தான் முக்கிய காரணம். பல தொகுதிகளில் அவர்கள் தான் வாக்குகளைப் பிரித்துள்ளனர். ஏகப்பட்ட தொகுதியில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்களுக்கு இடையே இருந்த வாக்கு வித்தியாசத்தை விட சுயேச்சைகள் பெற்ற வாக்குகள் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+