Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூட்கேஸுக்குள் நெளிந்த உருவம்..கூடவே முனகல் சத்தம்! திறந்து பார்த்தால் ஷாக்! வசமாய் சிக்கிய மாணவன்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானாவில் கல்லூரி விடுதியில் படிக்கும் மாணவன் ஒருவர் தனது காதலியை கல்லூரி விடுதி அறைக்கு அழைத்துச் செல்ல திட்டம் தீட்டி மாட்டி இருக்கிறார். காதலியை ட்ராலி சூட்கேசில் அடைத்து வைத்து விடுதிக்கு கூட்டிச் சென்ற நிலையில் காவலாளிகள் அதனை கண்டுபிடித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஒரு சில சம்பவங்கள் நகைப்பை ஏற்படுத்தும், ஒரு சில சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும். இந்த சம்பவத்தை பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை. அப்படி என்ன நடந்தது என கேட்கிறீர்களா?

Haryana Student video

சூட்கேசில் மாணவியை அடைத்து வைத்து விடுதிக்கு கூட்டிச் செல்ல முயன்ற மாணவர் சிக்கி இருக்கிறார். ஹரியானா மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அங்குள்ள சோனிபாத்தில் ஓபி ஜிண்டால் யூனிவர்சிட்டி என்ற பிரபல பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர்களின் மகன்கள் கூட இங்கு தான் படிப்பார்களாம்..

அந்த அளவுக்கு மிகப்பெரிய காலேஜ் இது. இந்த நிலையில் அந்த பல்கலைக்கழகத்தின் ஹரியானாவை சேர்ந்த இளம் மாணவர் ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற அவர் மீண்டும் கல்லூரி விடுதிக்கு திரும்பி இருக்கிறார். அப்போது வழக்கத்தை விட மிகப் பெரிய சூட் கேஸ் ஒன்றை அந்த மாணவர் இழுத்து வந்திருக்கிறார். அவ்வளவு பெரிய சூட்கேஸை அதுவரை பார்த்திராத விடுதி பாதுகாவலர்கள் அதில் என்ன இருக்கிறது என கேட்டிருக்கின்றனர்.

எவ்வளவோ சமாளித்து பார்த்து முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் மாணவர் அமைதியாக இருக்க, சூட்கேஸ் மட்டும் அங்கும் அங்கும் அசைந்து இருக்கிறது. மேலும் முனகல் சத்தத்தோடு அங்குமிங்கும் உள்ளே ஏதோ ஒரு பொருள் நெளிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் பாதுகாவலர்கள். இதை அடுத்து உள்ளே என்னதான் இருக்கிறது என பார்த்து விடுவோமே எனத் திறந்து பார்த்த போது தான் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

சூட்கேசுக்குள் உடலை மிகவும் சுருட்டிக்கொண்டு இளம் பெண் ஒருவர் உள்ளே அமர்ந்திருந்தது தெரியவந்தது. கொலை ஏதாவது செய்து மாணவன் உடலை கொண்டு வந்திருப்பானோ என அச்சத்தில் உறைந்த நிலையில் நல்ல வேளையாக அந்த பெண் நல்ல உடல் நிலையோடு தான் இருந்தார். தொடர்ந்து அவரை பாதுகாவலர்கள் வெளியே வரவழைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இளம் பெண் வேறு யாருமில்லை அந்த மாணவனின் காதலி என்றும் யாருக்கும் தெரியாமல் விடுதிக்குள் அழைத்துச் சென்று சில நாட்கள் ஒன்றாக தங்கலாம் என திட்டமிட்ட போதுதான் காவலர்களின் சோதனையில் சிக்கியது தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் அந்த மாணவி அதே பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறாரா? அவர் யார்? அவரது பின்னணி என்பது குறித்து தகவல் வெளியாகாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூட்கேஸை பல்கலைக்கழக விடுதிக்குள் மாணவர் எடுத்துச் சென்றது, அதற்குள் இருந்த இளம் பெண் சிக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் மாணவர் மீதும் அதற்குள் இருந்த மாணவி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற தகவல்கள் வெளியாகவில்லை. "முதல்ல சூட்கேஸில் டிரஸ் தான் எடுத்துட்டு போவாங்க இப்போ ஆளையே எடுத்துட்டு போறாங்களே?, எனது தங்கள் பல்கலைக்கழகத்தில் கூட இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது? என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+