நெட்டில் லீக்கான பாத்ரூம் வீடியோ! பார்த்து துடித்த 60 பெண்கள்! கூட இருந்தே கசிய விட்ட மாணவி! எப்படி?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: சண்டிகர் பல்கலைக்கழகத்தில் 60 மாணவிகள் குளிக்கும் வீடியோ இணையத்தில் கசிந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவிகளின் வீடியோதான் இப்படி லீக் ஆகி உள்ளது. சக மாணவி ஒருவரே வீடியோக்களை எடுத்து அதை இணையத்தில் கசியவிட்டுள்ளார்.

இந்த லீக்கான வீடியோக்கள் சண்டிகர் பல்கலைக்கழத்தில் மாணவர்கள், மாணவிகள் இடையே வாட்ஸ் ஆப்பில் வலம் வந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவி தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

 மாணவி

மாணவி

இந்த மாணவி கடந்த பல மாதங்களாக இப்படி வீடியோக்களை எடுத்து கசியவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறிய அளவிலான கேமராக்களை வைத்து, பாத்ரூமில் இவர் வீடியோக்களை எடுத்துள்ளார். பின்னர் எல்லா மாணவிகளும் குளித்து முடித்த பின், தான் குளிக்க செல்லும் போது அந்த கேமராவை எடுத்து, துணியில் மறைத்து ரூமிற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை பணத்திற்காக இமாச்சல பிரதேசத்தில் உள்ள இளைஞனுக்கு அனுப்பி இருக்கிறார்.

கைது

கைது

முதல் கட்ட விசாரணையில் இவர் ஒவ்வொரு முறை வீடியோவை அனுப்பும் போதும் இவருக்கு பணம் வந்துள்ளது. டெலிகிராம் மூலம் இவர் வீடியோவை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு இவருக்கு உடனுக்குடன் பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் கசிந்து பின்னர் பல்கலைக்கழகம் முழுக்க பரவி உள்ளது. மாணவ, மாணவியரின் ஹாஸ்டல் குழுக்களில் இந்த வீடியோ பரவி உள்ளது. 60 மாணவிகள் இந்த வீடியோவில் இருந்துள்ளனர்.

வீடியோ

வீடியோ

இதை பார்த்ததும் மாணவிகள் துடி துடித்து போய் உள்ளனர். கூடவே இருந்து நன்றாக பேசி இப்படி வீடியோ எடுத்து லீக் செய்து விட்டாளே என்று மாணவிகள் துடித்து போய் உள்ளனர். அந்த நபர் இந்த பெண்ணின் நெருங்கிய தோழன் என்று கூறப்படுகிறது. அதோடு அதே பல்கலைக்கழகத்தில் இருந்த சில மாணவர்களிடமும் இந்த பெண் வீடியோக்களை கசியவிட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ கசிந்த விவகாரம் தெரிந்த நிலையில் ஹாஸ்டல் நிர்வாகம் சார்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

பாத்ரூம்

பாத்ரூம்

எந்த பாத்ரூமில் உள்ள வீடியோ கசிந்துள்ளது என்று கண்டுபிடித்து, அதில் குளித்த நபர்களை கண்டுபிடித்து, பின்னர் இந்த பெண் மீது சந்தேகம் திரும்பி உள்ளது. அவரை நெருக்கமாக பின் தொடர்ந்த போது அவர் போலீசில் சிக்கினார். அவர் கடைசியாக வீடியோ எடுக்கும் போது ஹாஸ்டல் நிர்வாகிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்களை எடுத்த பெண் மொஹாலியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

எப்படி?

எப்படி?

அந்த மாணவி எம்பிஏ படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி ஆவார். சமீபத்தில்தான் அந்த பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்துள்ளார். சேர்ந்து 3 மாதங்களில் அவர் இப்படி 60 வீடியோக்களை எடுத்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த அந்த ஆணை தற்போது போலீசார் தேடி வருகின்றனர். அவரிடம் இருக்கும் வீடியோக்களை கைப்பற்ற போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பல்கலைக்கழத்தில் மாணவ, மாணவியர் போராட்டம் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+