ரஃபேல் இருந்திருந்தா...பாக். போக தேவை இல்லை.. நம்ம இடத்தில் இருந்தே அடிச்சு தூக்கலாம்.. ராஜ்நாத்சிங்
சண்டிகர்: ரஃபேல் போர் விமானம் இருந்திருந்தால் இந்தியாவில் இருந்தே பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்திருக்க முடியும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இன்று ராஜ்நாத்சிங் பேசியதாவது:
ரஃபேல் போர் விமானத்தை பிரான்ஸ் ஒப்படைத்த போது அதில் ஓம் என எழுதினேன். அந்த விமானத்துக்கு புனித கயிறு கட்டிவிட்டேன். இதை காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து சர்ச்சையாக்குகின்றனர்..

ரஃபேல் போர் விமானங்கள் இங்கே வரும்போது காங்கிரஸ் கட்சியினரும் அதனை வரவேற்பார்கள். காங்கிரஸ் தலைவர்களின் இத்தகைய விமர்சனங்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்குத்தான் பலம் சேர்க்கும்.
#WATCH Defence Min: I wrote 'Om' on fighter plane (Rafale), & tied a 'raksha bandhan' to it. Congress leaders started a controversy here...They should've welcomed that Rafale is coming here. Instead,they started criticising. Statements by Congress leaders only strengthen Pakistan pic.twitter.com/5q0IU4SkmX
— ANI (@ANI) October 13, 2019
நம்மிடம் ரஃபேல் போர் விமானம் இருந்திருந்தால் நாம் பாகிஸ்தானின் பால்கோட்டுக்கு போய் தாக்குதல் நடத்தியிருக்க தேவையில்லை. நமது எல்லையில் உட்கார்ந்து கொண்டே அந்த பயங்கரவாத முகாம்களை அழித்திருக்க முடியும்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நேர்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காமல் போனால் ஏற்கனவே 2 துண்டாகத்தான் பாகிஸ்தான் பிளவுபட்டது. இம்முறை பல துண்டுகளாக பாகிஸ்தான் சிதறிப் போகும்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications