சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரேநேரத்தில் 36 ஏவுகணை வந்தாலும் தாக்கி அழிக்கும்.. எதிரி நாடுகளுக்கு இந்தியா செக்- களத்தில் எஸ் 400

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப்பில் எஸ் -400 ரக ஏவுகணை மரிப்பு டிபன்ஸ் சிஸ்டத்தை இந்தியா களமிறக்கி உள்ளது. பாதுகாப்பு கருதி பஞ்சாப்பில் இந்த டிபன்ஸ் சிஸ்டத்தை இந்திய பாதுகாப்புத்துறை களமிறக்கி உள்ளது.

Recommended Video

    S-400 Defence System-ஐ Punjab-ல் களமிறக்கிய Indian Army | Oneindia Tamil

    சீனா, பாக். அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த எஸ் 400 ஏவுகணை மரிப்பு சிஸ்டம் களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறையின் 5 மணி நேர விசாரணை.. ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன தெரியுமா?அமலாக்கத்துறையின் 5 மணி நேர விசாரணை.. ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன தெரியுமா?

    சீனா, பாக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் ஏவுகணைகளை வழி மறித்து வானத்திலேயே தாக்கி அழிக்கும் வகையில் இந்த மிஸைல் சிஸ்டம் களமிறக்கப்பட்டுள்ளது.

    ஏன்?

    ஏன்?

    திடீரென இந்த மிஸைல் சிஸ்டம் இப்போது களமிறக்கப்பட்டது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. கடந்த டிசம்பர் 6ம் தேதி ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்திருந்த நிலையில் ரஷ்யாவின் தயரிப்பான எஸ் 400 மிஸைல் சிஸ்டம் தற்போது களத்தில் பயன்படுத்தப்பட தொடங்கி உள்ளது. கடந்த மாத இறுதியில்தான் இந்திய பாதுகாப்பு படையுடன் ரஷ்யாவின் இந்த மிஸைல் சிஸ்டம் இணைக்கப்பட்டது.

    எஸ் 400 இணைப்பு

    எஸ் 400 இணைப்பு

    இந்தியா - ரஷ்யா இடையிலான இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடக்கத்தில் இருந்தே விரும்பவில்லை. இந்த நிலையில்தான் இந்தியா எஸ் 400 மிஸைல் சிஸ்டத்தை பயன்படுத்த தொடங்கி உள்ளது.உலகிலேயே அதி வேகமாக ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சிஸ்டம் S-400 missile சிஸ்டம் ஆகும். மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) என்பது ஏவுகணைகள் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் அல்லது எதிர் ஏவுகணைகள் அல்லது குண்டுகள் என்று கூறலாம்.

    எப்படி ?

    எப்படி ?

    ஒரு நாட்டை தாக்க வரும் ஏவுகணைகளை, எதிர் ஏவுகணைகளை ஏவி, குண்டுகளை வீசி இந்த மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) தாக்கி அழிக்க முடியும். எஸ்-400 (S-400) ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது ஆகும். இது 400 கிமீ தூரத்தில் இருக்கும் போதே குறி வைத்து தாக்கப்படும். 30 கிமீ தூரத்தில் உள்ள ஏவுகணைகளை கூட எஸ்-400 தாக்கி அழிக்கும். எஸ்-400 (S-400) என்பது பல பயன்பாட்டு ரேடார் வசதி கொண்ட multifunction radar கொண்ட சிஸ்டம் ஆகும்.

    ரேடார்

    ரேடார்

    அது என்ன multifunction radar என்றால் இதில் இருக்கும் ரேடார் ஒரே நேரத்தில் பல்வேறு ஏவுகணைகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. தானாக ஆட்டோமெட்டிக் முறையில் ஏவுகணைகளை கண்டுபிடித்து, அதை டார்கெட் செய்து, தாக்கி அழிக்கும். மொத்தம் மூன்று விதமான ஏவுகணைகளை ஏவி எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கும். ஒரே நேரத்தில் 36 டார்கெட்டுகளை எஸ்-400 தனது ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Indian army deploys S 400 anti-missile defense system in Punjab sector today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X