நடிகை கங்கனா ரனாவத்திடம் விமானத்தில் அத்துமீறியதாக புகார்.. 9 ஊடகவியலாளர்களுக்கு இண்டிகோ தடை
சண்டிகர்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சண்டிகரில் இருந்து மும்பைக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் , ஒன்பது ஊடகவியலாளர்கள் நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி, அவர்கள் 15 நாடகள் விமானத்தில் பயணிக்க இண்டிகோ தடை விதித்துள்ளது.
பாஜகவின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனோ அரசுடன் மோதல்போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில் சுஷாந்த் வழக்கில் கங்கனா ரனாவத் தெரிவித்த சில கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தின. அதன்பிறகு அவருக்கு மத்திய அரசின் சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு பாஜகவின் தீவிர ஆதரவாளராக கங்கனா ரனாவத் மாறிவிட்டார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9ம் தேதி சண்டிகரில் இருந்து மும்பை சென்ற 6E-264 என்ற விமானத்தில் கங்கனா ரானாவத்துடன் ஊடக ஊழியர்கள் சிலர் விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 15 முதல் வரும் 30 வரை சர்ச்சைக்கு காரணமாக 9 ஊடகவியாலாளர்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவின் விமான ஒழுங்குமுறை இயக்குநர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் (டிஜிசிஏ) பயணிகளின் கட்டுக்கடங்காத நடத்தைக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு இண்டிகோவிடம் கோரியிருந்தது. அதன்படி ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications