நிதி உதவி வேணுமா? வீட்டிற்கு வா.. நம்பி சென்ற "என்ஜிஓ" பெண்ணுக்கு.. டெல்லியில் நிகழ்ந்த கொடூரம்
சண்டிகர்: அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் NGO பணியாளராக உள்ள நிலையில், நிதியளிப்பதாக அவரை தனது வீட்டிற்கு வரச் சொல்லி குற்றவாளி இந்த கொடூர செயலை செய்துள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளும், குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைப்பதற்கு போதுமான விழிப்புணர்வு அவசியம் என்று சமூக செயல்பாட்டாளர்களும், மகளிர் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பெண்களை போகப் பொருட்களாக சித்தரிக்கும் விளம்பரங்கள், திரைப்படங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றிற்கு எதிராக நெடும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நிதி
இவ்வாறு இருக்கையில் அரியானா மாநிலத்தில் மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ளது. குருகிராம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நிதி வசூல் செய்துகொண்டிருந்துள்ளார். இப்படி இருக்கையில், அதே பகுதியை சேர்ந்த ராஜ் குமார் எனும் நபர் நிறுவனத்திற்கு நிதியளிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இளம்பெண்ணை அணுகிய ராஜ் குமார் நிதியை பெற்றுக்கொள்ள தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பலாத்காரம்
இதை நம்பி அந்த இளம் பெண்ணும் அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால், ராஜ் குமார் நிதி கொடுக்காமல் ஏதேதோ பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் அந்த பெண்ணுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த இளம்பெண் அங்கிருந்து வெளியேற முயற்சித்திருக்கிறார். ஆனால் ராஜ் குமார், இளம்பெண்ணை வெளியேற விடாமல் வீட்டின் கதவை தாழிட்டுள்ளார். மீண்டும் தனது விருப்பத்தை வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார்.

புகார்
ஆனால், இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே ராஜ் குமார் அப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன இளம்பெண் செய்வதறியாது விழித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ராஜ் குமார் இளம்பெண்ணை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆடைகள் கிழிக்கப்பட்டு ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு இருந்த அப்பெண் எப்படியோ அங்கிருந்து தப்பித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவு 323, 354-பி ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளி ராஜ் குமார் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications