விடிய விடிய டேட்டா! ஏர்டெல் vs ஜியோ vs VI vs BSNL.. அள்ளித்தரும் டெலிகாம் நிறுவனங்கள்! எது பெஸ்ட்?
சென்னை: கடந்த ஆண்டு உடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு டெலிகாம் கட்டணங்கள் 10 முதல் 20% வரை அதிகமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் ஆண்டு பேக்கில் எந்த டெலிகாம் நிறுவனத்தின் பேக் சிறந்தது என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம். டேட்டா, அன்லிமிட்டெட் கால்களைத் தாண்டி தற்போது AI டூல்கள் மற்றும் ஓடிடி கூட இதில் பிரதானமாக மாறியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெலிகாம் சண்டையில் கடுமையான போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அனைத்து நிறுவனங்களுமே போட்டி போட்டு கொண்டு சலுகைகளை அள்ளி தருவதால் யூசர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

அதிலும் இப்போது எல்லாம் யூசர்களை கவர வெறும் டேட்டா, அன்லிமிட்டெட் கால்களைத் தாண்டி தற்போது AI டூல்கள், ஓடிடி தளங்களும் கூட முக்கியத்துவம் பெற்றுள்ளன. வழக்கம்போல ஜியோவும் ஏர்டெல்லும் தங்களின் டாப் பிளான்களை ₹3,999 என நிர்ணயித்துள்ளன. Vi நிறுவனம் ₹3,599 முதல் ₹3,799 வரையிலும், பிஎஸ்என்எல் வழக்கம் போல மிகக் குறைந்த விலையாக ₹2,399க்கும் ஆண்டு பிளான்களை வைத்துள்ளன. இதில் யாருடைய பிளான் பெஸ்ட் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
ஜியோ
சமீபத்திய 'ஓபன்சிக்னல்' மொபைல் நெட்வொர்க் அறிக்கையின்படி, ஏர்டெல்லை விட வேகமான டவுன்லோடு ஸ்பீடு வழங்கி இந்தியாவின் 'பெஸ்ட் நெட்வொர்க்' மற்றும் 'ரிலையபிலிட்டி' விருதுகளை ஜியோ தட்டிச் சென்றுள்ளது. இந்த நிறுவனம் 2 முக்கிய ஆண்டு பேக்குகளை வழங்குகிறது.
₹3,999 பிளானில் தினசரி 2.5GB டேட்டா, அன்லிமிட்டெட் 5G, 18 மாதங்களுக்கு Gemini Pro AI டூல், 3 மாத ஜியோஹாட்ஸ்டார், ஃபான்கோட் (FanCode) ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீமிங் மற்றும் 50GB ஜியோ AI கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். ₹3,599 பிளானில் ஃபான்கோட் சந்தா தவிர மேலே குறிப்பிட்ட அனைத்துச் சலுகைகளும் இதில் கிடைக்கும்.
ஏர்டெல்
நகர்ப்புறங்களில் சிறந்த அனுபவம், வாய்ஸ் கால் தரம் மற்றும் அப்லோடு ஸ்பீடில் ஏர்டெல் தான் முதலிடத்தில் உள்ளது. நகர்ப்புறங்களைத் தாண்டியும் கூட பல இடங்களில் ஜியோவுடன் ஒப்பிடும்போது ஓரளவுக்கு நல்ல சிக்னல் ஏர்டெலில் கிடைக்கிறது. மேலும், ஜியோவில் இல்லாத 2ஜி மற்றும் 3ஜி சேவை ஏர்டெலில் இருப்பதால் பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்சம் வாய்ஸ் கால் பண்ணக்கூடிய சூழல் இருக்கிறது. ஏர்டெல்லும் இரு பிளான்களை தருகிறது.
₹3,999 பிளானில் தினசரி 2.5GB டேட்டா, அன்லிமிட்டெட் 5G, 12 மாதங்களுக்கு Perplexity Pro AI டூல் மற்றும் ஒரு வருட முழு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் ஓடிடி வழங்கப்படுகிறது. ₹3,599 பிளானில் தினசரி டேட்டா 2GB ஆகக் குறையும், ஓடிடி கிடையாது. ஆனால், Perplexity Pro AI ஆக்ஸஸ் இதிலும் உண்டு.
வோடபோன்-ஐடியா
விஐ சேவை சமீப காலமாக மேம்பட்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும். 2026ல் புதிதாக 23 நகரங்களில் 5G சேவையை விரிவுபடுத்தியுள்ளது. அன்லிமிட்டெட் நள்ளிரவு டேட்டா, டேட்டா ரெஸ்க்யூ மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் உள்ளிட்ட சலுகைகள் இதன் மிக பெரிய பிளஸ்.
₹3,799 பிளானில் தினசரி 2GB டேட்டா + 50GB எக்ஸ்ட்ரா டேட்டா மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் லைட் கிடைக்கும். ₹3,699 பிளானில் அதே 2GB டேட்டா + 50GB எக்ஸ்ட்ரா கிடைக்கும். ஆனால் அமேசானுக்கு பதிலாக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் கிடைக்கும். ₹3,599 பிளானில் தினசரி 1.5GB டேட்டா + 50GB எக்ஸ்ட்ரா மட்டும் கிடைக்கும். எந்தவொரு ஓடிடியும் கிடைக்காது.
பிஎஸ்என்எல்
தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்தினாலும், பிஎஸ்என்எல் இன்னமும் தனது விலையை உயர்த்தாமல் இருக்கிறது.. அதன் ஆண்டு டேட்டா பிளான் வெறும் ₹2,399 தான். இந்த பிளானில் தினசரி பேசிக் டேட்டா, அன்லிமிட்டெட் காலிங் வசதியுடன் முழுமையாக 365 நாட்களுக்கும் சலுகை வழங்குகிறது. தற்போது நாடு முழுவதும் 97,000க்கும் மேற்பட்ட 4G தளங்களை லைவ் செய்துள்ளதால், கிராமப்புறங்கள் மற்றும் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு இதுதான் பெஸ்ட் சாய்ஸ்.
யாருக்கு எது பெஸ்ட்?
ஒரு பக்கம் சத்தமின்றி கட்டணங்களை உயர்த்தும் டெலிகாம் நிறுவனங்கள், அதை மறைக்கும் வகையில் பிரீமியம் AI டூல்களை வழங்குகின்றன. உங்களுக்கு அதிரடி 5G ஸ்பீட் வேண்டும் என்றால் ஜியோவை தேர்வு செய்யலாம். நம்பகமான சிக்னல், கவரேஜ் வேண்டும் என்பவர்கள் ஏர்டெல்லை தேர்ந்தெடுக்கலாம். நள்ளிரவில் அன்லிமிட்டெட் டேட்டாவுக்கு முக்கியத்துவம் தருவோர் விஐ பக்கம் போகலாம்.. ஓடிடி, AI என எதுவும் வேண்டாம், வெறும் காலிங் மற்றும் பேசிக் டேட்டா இருந்தால் போதும் என்பவர்களுக்கு எப்போதும் போல பிஎஸ்என்எல் தான் 'கெத்து'!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications